Published:Updated:

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

பிரீமியம் ஸ்டோரி

மகா மணல் குன்று!

##~##

உலகின் உயரமான மலைகளைக் கேட்டால், வேகமாகப் பட்டியல் போடுவீர்கள். உலகிலேயே மிக உயரமான மணல் குன்று எங்கே இருக்கிறது தெரியுமா? அல்ஜீரியா நாட்டில் உள்ள சஹாரா பாலைவனப் பகுதியில் உள்ளது. இந்த மணல் குன்றின் உயரம், சுமார் 1,500 அடிகள். சஹாரா பாலைவனத்தில் மேலும் பல உயரமான மணல் குன்றுகள் உள்ளன.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

 இங்கும் கிடைக்கும் தங்கம்!

பூமியில் தங்கம் உருவாவதுபோல, கிரகங்களிலும் தங்கம் உருவாகிறது என்றால் நம்புவீர்களா? அது உண்மைதான். செவ்வாய்க் கிரகத்தில் தங்கப் பாறைகள் உருவாகிவருகிறதாம். இது, 2030-ம் ஆண்டுக்குள் முழுமையாக உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நம்ம நகைக் கடைக்காரங்க சீக்கிரமே 'செவ்வாய்க் கிரகத்தின் தங்கம் எங்கள் கடைகளில் கிடைக்கும்’ என்றுகூட விளம்பரம் போடலாம்!

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

 வளரும் கடல்!

உயிரினங்கள் மட்டும்தான் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து பெரிதாகிறதா? மலை, கடல் என உயிரற்றவையும்கூட வளர்கின்றன. அட்லாண்டிக் பெருங்கடலும் வருடத்துக்கு 2.5 சென்டிமீட்டர் வளர்ந்துகொண்டே செல்கிறதாம். அதே வேளை, 100 வருடங்களுக்கு ஒரு முறை 10 சென்டிமீட்டர் மூழ்கியும் போவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

 தபால்தலையில் ஒரு கதை!

தபால்தலையில் ஒரு குட்டிக் கதையை வெளியிட்டு, புதுமை படைத்திருக்கிறது அயர்லாந்து நாடு. அந்த நாட்டில் உள்ள டப்ளின் நகரின் பெருமையை விளக்கும் அந்தக் கதை, 224 வார்த்தைகளைக் கொண்டது. முக்கியமான விஷயம், தபால்தலையில் இடம்பெற்றுள்ள குட்டிக் கதையை எழுதியிருப்பவர், 17 வயதான 'யான் மூர்’ என்ற மாணவர்.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்

 வேகமும் கவனமும்!

'வேகமாகச் சென்றால் கட்டுப்பாடு போய்விடுமா... யார் சொன்னது? என்னைப் பாருங்கள்’ என்கிறது, ஆப்பிரிக்க நாட்டுக் கழுகு. பறவைகள் வேகமாகப் பறந்தாலும், தங்களது அசைவுகளிலும் பயணம் செய்யும் திசையிலும் கவனமும் கட்டுப்பாடும் செலுத்தும். அதிலும் ஆப்பிரிக்கக் கழுகுகள், ஒரு மணி நேரத்துக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்தாலும், எந்தவித சிக்கலும் இல்லாமல் 20 அடியில் சாதாரணமாக வந்து நிற்கும்.

சுட்டி ஸ்டார்ஸ் நியூஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு