Published:Updated:

நெட்டிஸம் -விளையாட்டாக அறியலாம் புவியியல் !

பா.காளிமுத்து சைபர்சிம்மன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

நண்பர்களே... கணிதப் புலியாக உருவாகக் கைகொடுக்கும் இணையதளங்களை ஏற்கெனவே தெரிஞ்சுக்கிட்டோம். இப்போ, புவியியல் சிங்கமாக மாறலாமா?

'புவியியல் போரடிக்குமே’ என முகம் சுளிக்காதீங்க. நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனால், கிட்ஸ்ஜியோ.காம் (http://www.kidsgeo.com/geography-games/) தளத்தில் எட்டிப்பார்த்து அசந்துட்டேன். இதில் ஜாலியாக விளையாடும் புவியியல் விளையாட்டுகள் நிறைய இருக்கு.

கண்டங்கள், நாடுகள், ஆறுகள், மலைகள்... எனப் பலவகையான வரைபடங்களைப் பாடப் புத்தகத்திலும் அட்லஸிலும் பார்த்திருப்பீங்க. அதையே விளையாட்டாக உருவாக்கி இருக்காங்க.

இதில் ஒரு விளையாட்டின் பெயர் 'வேர்ல்டு மேப் மேட்ச் கேம்’. அதாவது, உலக நாடுகளை சரியாகக் கண்டுபிடிக்கிற விளையாட்டு. இதை க்ளிக் செஞ்சதுமே உலக வரைபடம் வந்து நிற்கும். அதில் உள்ள 21 நாடுகள் ஒவ்வொண்ணாத் தோன்றும். எந்த நாடு உலகில் எந்த இடத்தில் இருக்குங்கிறதை கண்டுபிடிச்சுப் பொருத்தணும்.

உதாரணத்துக்கு, 'கஜகஸ்தான்’ என்ற நாடு திரையில் வரும். இது ஆசியாவில் இருக்குனு தெரியும். ஆனா, எங்கே வரும்னு சரியாத் தெரியலை. யோசிக்கும்போதே பதில் சொல்றதுக்கான விநாடிகள் குறைஞ்சுட்டே வரும்.கூர்ந்து கவனிச்சு பார்த்தால், அந்த மேப் மேலேயே விடைக்கான க்ளூவும் இருக்கும். அதை க்ளிக் செய்யணும். அப்போ, க‌ஜகஸ்தான் ஆசியாவில் எங்கே இருக்குனு அடர்த்தியான வண்ணத்தில் காட்டியிருப்பாங்க. இப்படி விளையாட்டு மூலம் உலக நாடுகள் இருக்கும் இடங்களைத் தெரிஞ்சுக்கலாம்.

நெட்டிஸம் -விளையாட்டாக அறியலாம் புவியியல் !

குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்கணும் என்பதால், விளையாடவும் சும்மா... பரபரனு இருக்கும். இதே மாதிரி நாடுகளின் தலைநகரங்களையும் தெரிஞ்சுக்கலாம்.

அடுத்து, அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை  விளையாட்டு. அதாவது, பூமியில் சுட்டிக்காட்டப்படும் இடத்தின் நீளம் மற்றும் அகலத்தைக் கண்டுபிடிக்கணும்.

இந்த விளையாட்டில் 'ஹன்னா’ என்கிற ஒரு அனிமேஷன் பாப்பா, பூமி மேலே மாட்டிக்கிட்டு எங்கே இருக்கோம்னு தெரியாமல் த‌விக்கும். நாம அந்தப் பாப்பா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சு சொல்லணும். ஆகாயத்திலிருந்து பூமியைப் பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் இந்த விளையாட்டில் பூமி இருக்கும். நாம மேலே இருந்து கண்டுபிடிக்கணும். உதவிக்கு இரண்டு பக்கங்களிலும் நீளம் மற்றும் அகல அளவுகளைக் குறிச்சிருப்பாங்க. ஒவ்வொரு கட்டமா முன்னேறி ஜெயிக்கணும்.

இதையெல்லாம் படிக்கும்போதே 'அட... புவியியலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கு’னு தோணுதா? இன்னும் கொஞ்சம் பார்க்கலாம்.

நெட்டிஸம் -விளையாட்டாக அறியலாம் புவியியல் !

புவியியலின் அடிப்படையைச் சொல்லித்தரும் பாடமும் இந்தத் தளத்தில் இருக்கு. நம்ம பூமி எவ்வள‌வு பெரிசு... அது எப்படி உருவானது... அது உண்மையிலேயே வட்ட‌ வடிவமாகத்தான் இருக்கா... இதுமாதிரியான விஷயங்களையும் தெரிஞ்சுக்கலாம்.

உதாரணத்துக்கு, இதில் தெரிஞ்சுக்கிட்ட ஒரு தகவல்... பூமி தன்னைத்தானே சுத்தும்னு படிச்சிருக்கோம். அது ஏன்?

பூமி தோன்றியபோது இருந்த விசைகளும் ஆற்றலும்தான் இதுக்குக் காரணமாம். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமி உருவானபோது, தூசுகளும் வாயுக்களும் சேர்ந்துக்கிட்டே இருந்துச்சு.  இப்படி புவியீர்ப்பு விசையால் சேர்ந்த தூசுகளும் வாயுக்களும் அப்படியே அடர்த்தியா மாறுச்சு. இதனால், புவியீர்ப்பு விசை மேலும் அதிகமாகி, தூசு மற்றும் வாயுக்கள் இன்னும் வேகமா சேர்ந்துச்சு. இப்படித் தொடர்ந்து நடந்ததால், ஒரு சுழல் மாதிரியான சக்தி உருவாச்சு. பக்கெட்டில் தண்ணியைச் சுத்திவிட்டால் எப்படி இருக்கும்; அது மாதிரிதான் விண்வெளியிலும் நடந்துச்சு. அதனால், சுத்த ஆரம்பிச்ச பூமி இப்பவும் சுத்திட்டே இருக்கு.

இப்படி நிறைய விஞ்ஞானத் தகவல்களையும் இந்தத் தளத்தில் தெரிஞ்சுக்கலாம்.

இதேபோல லேர்னிங் கேம் ஃபார் கிட்ஸ் (http://www.learninggamesforkids.com/geography_games.html) என்ற தளத்தில் வித்தியாசமாக, வார்த்தை விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர்கள் மூலம் புவியியலைத் தெரிஞ்சுக்கலாம்.

மேலும் சில புவியியல் தளங்கள்:

1. http://www.lizardpoint.com/geography/
2.http://kids.nationalgeographic.com/kids/games/geographygame/ 3.http://www.gamedesign.jp/flash/worldmap/worldmap.html

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு