Published:Updated:

அலெக்ஸாண்டர் தி ஐஸ் !

##~##

'குளிர்காலம் வரப்போகுது இப்போ எதுக்கு ஐஸ்க்ரீம் செய்தி?’ என்பவர்களுக்கு கடைசி வரியில் இருக்கிறது பதில். ஸோ, வாங்க ஃப்ரெண்ட்ஸ்... ஐஸ்க்ரீம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாம்.

 கி.மு.200ல் முதன்முதலாக சீனர்கள்தான் ஐஸ்க்ரீமைக் கண்டுபிடிச்சாங்க. பனிக்கட்டியுடன் பால் கலந்து சாப்பிட்டாங்க. அதுக்கு, ICED DRINKS என்று பெயர். அப்புறம், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேர்ந்து ICE CREAM   என்று மாறிச்சு. அப்போ, அரசர்களுக்கு ஐஸ்க்ரீம் மேல அம்புட்டு ஆசை. 'அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்று நாம் சொல்கிற அந்த மன்னருக்கு, ஐஸ்க்ரீமோட தேன் கலந்து சாப்பிடுறது ரொம்பவே பிடிக்கும்.

1744ல் 'வில்லியம் ப்ளேடன்’ என்ற அமெரிக்கர்தான்  ஐஸ்க்ரீம் தயாரிப்பதை எழுத்துப்பூர்வமாக அறிவிச்சார். அப்போது முதல், உலகம் முழுவதும் ஐஸ்க்ரீம் வேகமாகப் பரவி, பலரின் மனதை உருகவெச்சுட்டிருக்கு.

அலெக்ஸாண்டர் தி ஐஸ் !

 அமெரிக்காவில், ஒவ்வொரு வருஷமும் ஜூலை மாதத்தை ஐஸ்கிரீம் மாதமாகக் கொண்டாடுறாங்க. பல பேர் ஓர் இடத்தில் கூடி, பிடிச்ச ஐஸ்க்ரீமை மத்தவங்களுக்குக் கொடுத்தோ, அவங்க மேல அடிச்சோ விளையாடுவாங்க. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில்தான் அதிகமான ஐஸ்க்ரீம் தயாரிக்கப்படுது. அங்கே இரண்டாம் உலகப் போர் முடிஞ்ச சமயத்தில், ஒவ்வொருவரும் 20 குவாட்டர்ஸ் ஐஸ்க்ரீமோட கொண்டாடினாங்க.

அமெரிக்காவில் நடத்தின ஓர் ஆய்வுப்படி, வெப்பமான இடங்களில் இருக்கும் மக்களைவிட, குளிர்ச்சியான இடங்களில் இருக்கும் மக்கள்தான்... அதுவும் குளிர்காலத்தில்தான் அதிகமாக ஐஸ்க்ரீம் சாப்பிடுறாங்களாம்!

- உ.சிவராமன்

அடுத்த கட்டுரைக்கு