MR.GO

சவுத் கொரியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளில் நடக்கும் கதை.

நம்ம படத்தோட ஹீரோ, கொரில்லா. அதோட பேரு, 'லிங் லிங்’. சீனாவின் சிச்சுவா பகுதியில் 'வெய் வெய்’ என்கிற பெண்ணும் அவள் குடும்பமும் சர்க்கஸ் கம்பெனி நடத்திட்டு வர்றாங்க. திடீர்னு, நிலநடுக்கம் வந்து, அந்த சர்க்கஸ் கம்பெனி சேதமடையுது. கடன்காரங்க வந்து அவங்க கடனுக்காக, அந்தக் குரங்கைக் கேட்டுத் தொல்லைபண்றாங்க. அதனால், MR.GO எனக் குரங்கின் பெயரை மாத்தி, 'கொரியன் பேஸ்பால் லீக்’கில் விளையாட ஒப்பந்தம் போடுறாங்க. லிங் லிங், அவங்க சொன்ன மாதிரி பேஸ்பால் விளையாடுது. லிங் லிங் நல்லா விளையாடினாலும் அடிக்கடி ரூல்ஸை மாத்திக் கஷ்டப்படுத்துறாங்க. இதுக்கு நடுவுல 'ஜியோர்ஜ்’ என்கிற குரங்கின் தொல்லை வேறு. அந்தக் குரங்கைச் சமாளிச்சு, பேஸ் பால் டீமிலும் ஜெயிச்சு, சர்க்கஸ் கம்பெனியை லிங் எப்படி மீட்குது என்பதுதான் கதை. சமீபத்தில், சீனாவின் சிச்சுவான் பகுதியில் நடந்த நிலநடுக்கத்தைத் தொடர்புபடுத்திய கதை என்பதால், சீன மக்களிடம் இந்தப் படம் ரொம்பப் பிரபலமாகி இருக்கு.

படத்தின் செலவு, 20 மில்லியன் டாலர்ஸ். அதில் 12 மில்லியன் விஷூவல் எஃபெக்ட்ஸுக்காக செலவாகி இருக்கு. இந்தப் படத்தோட டைரக்டர், கிம் யாங். இது, இவரோட 80வது படம்.

FREE BIRDS

'ரெக்கி’ என்ற வான்கோழிதான் படத்தின் ஹீரோ. அந்தப் பண்ணையிலயே அதுதான் மிகவும் புத்திசாலி. ரெக்கிக்கு பண்ணைக்காரங்க தன்னை ஏன் வளர்க்கிறாங்கனு தெரியும். தான் இறக்கப்போகும் கடைசி நாள் அதுக்குத் தெரிஞ்சிடுச்சு. அந்தச் சமயத்தில், அமெரிக்க ஜனாதிபதி வான்கோழிகளைக் கொல்லத் தடை விதிக்கிறார். இதனால், ஜாலியான ரெக்கி, ரொம்பக் குஷியா பண்ணையில் இருக்கு.

மறுபடியும் ரெக்கிக்கு ஒரு பிரச்னை. இரண்டு வான்கோழிகள் சேர்ந்து ரெக்கியைக் கடத்துதுங்க. அப்புறம் நடப்பது பரபர ஆக்ஷன். டைம் மெஷின் பயணம், வில்லன்களுடன் சேஸிங் என த்ரில்லிங்கான விஷயங்கள் நிறைய இருக்கு. அமெரிக்காவில் அக்டோபர் 29ல் ரிலீஸானபோது, 'கடத்தல் தொழிலில் ஈடுபடும் கோழிகளைக் குழந்தைகளுக்குக் காட்றதா?’னு நிறைய கமென்ட்ஸ் வந்தாலும், அதையெல்லாம் தாண்டி வசூலைக் குவிச்சது. இந்தியாவிலும் ஜோரா ஓடிட்டிருக்கு.

FROZEN

ஹான்ஸ் கிறிஸ்டெயின் ஆண்டர்சன் (Hans Christain Anterson) எழுதின, The snow queen’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட வால்ட் டிஸ்னியின் படம். இதில் டிஸ்னியின் 12வது பிரின்ஸை அறிமுகம் செய்திருக்காங்க. டிஸ்னியின் TANGLED படத்தைப் போலவே எடுக்கப்பட்ட படம். நவம்பர் 17ல் அமெரிக்காவில் ரிலீஸ்.

படத்தோட கதை, 'ஆன்ட்ரெல்லா’ என்கிற தேசத்தை, அக்கா மற்றும் தங்கச்சிகளான எல்சா மற்றும் ஹானா ஆட்சி செய்றாங்க. எல்சாவுக்கு, தண்ணீரை உறைபனியா மாற்றும் அபூர்வ சக்தி இருக்கு. இதன் ஆபத்தை உணராமல், அளவுக்கு அதிகமாக அந்த சக்தியைப் பயன்படுத்தப்போக, அவங்க நாடு முழுவதும் உறைபனியா மாறிடுது. பழையபடி மாற்ற எல்சாவுக்கு சக்தி கைகொடுக்கலை. 'என்னால் நாடு இப்படி ஆகிடுச்சே’னு வருந்தும் எல்சா, ஒரு மலைப்பிரதேசத்துக்குப் போய் தங்கிடுறாங்க.

எல்சாவின் தங்கை ஹானா, நாட்டைக் காப்பாற்றி, அக்காவையும் கண்டுபிடிக்கிறது மிச்சக் கதை. ஹானாவுக்கு உதவும் காட்டுவாசி மனிதர், ரென்டீர் இனத்தைச் சேர்ந்த மான் எனப் படம் நகைச்சுவையாக விறுவிறு வேகம். 'டார்ஜன்’ படத்தின் டைரக்டர் கிரிஸ் பக், இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். 1990ல் ஆரம்பிச்ச வால்ட் டிஸ்னியோட அனிமேஷன் ஸ்டூடியோவில் இருந்து ஏகப்பட்ட படங்கள் வந்தாலும், அவர்களின் கனவுப் படமான இதைப் படமாக்க முடியாமல் இழுத்துக்கிட்டே போச்சு. ஒரு வழியாக முடிஞ்சு, இப்போ வெண்திரையில் சுட்டிகளைக் குஷிப்படுத்துது.

- உ.சிவராமன்