சூரியன்தான் கோள்களின் தாய். சூரியன் இல்லாமல் கோள்கள் உருவாக முடியாது. சூரிய மண்டலத்தைத் தாண்டி உள்ள கோள்களை வெளிக் கோள்கள் (Exo planet) என்கிறோம். இதுவரை 500க்கும் மேற்பட்ட வெளிக் கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எல்லா வெளிக் கோள்களும் ஒரு சூரியனை மையமாக வைத்தே சுற்றி வருகின்றன. ஆனால், அப்படியும் தன்னந்தனியாக விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கோள் ஒன்றை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்தக் கோள், மகரம் (Capricornus) விண்வெளிப் படலத்தில் இருப்பதாக ஹவாய் தீவில் இருக்கும் 'பான் ஸ்டார்ஸ்’ (PAN STARRS) என்ற தொலைநோக்கி மூலம் வானவியலாளர்கள் கண்டு பிடித்து, PSOJ3185-11 என்று பெயரும் சூட்டி உள்ளனர்.

இந்த PAN STARRS தொலைநோக்கியின் மூலம், ஏராளமான இளம் சூரியன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள், சூரியனின் ஈர்ப்பு இல்லாமல் எப்படி சுற்றிவருகிறது என்ற வியப்பு இன்னும் நீங்கவில்லை.

பொதுவாக, கோள்கள் ஓரளவு வெப்பத்துடனே இருக்கும். ஆனால், இந்தத் தனிக்கோள் குளிராக இருக்கிறது. வெள்ளிக் கோளின் பிரகாசத்தைவிட 100 மில்லியன் மடங்கு வெளிச்சம் குறைவானது. இதிலிருந்து வெளிப்படும் ஆற்றல், அகச்சிவப்புக் கதிர்களாக இருக்கின்றன. பொதுவாக, அகச்சிவப்புக் கதிர்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது. மற்ற எல்லாக் குணங்களும் பிற விண்மீன்கள் போலவே உள்ளன. இந்தக் கோள், பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இதனுடைய வயது 1.2 கோடி ஆண்டுகள். பூமியுடன் ஒப்பிடுகையில் கொள்ளுப் பேரனின் கொள்ளுப் பேரன் மாதிரி (பூமியின் வயது 456 கோடி ஆண்டுகள்). தொடர்ந்து ஆராய்ந்த பிறகே இது பற்றிய முழு விவரங்களை அறிய முடியும்.

- பேராசிரியர் எஸ்.மோகனா