கிறிஸ்துமஸ் மரம் என்பது இயேசு பிறப்பதற்கு முன்பே இருந்துள்ளது. பிறந்தநாளைக் கொண்டாட இந்த மரங்களைப் பயன்படுத்தும் பழக்கம் அப்போதும் இருந்தது. பிறகு இயேசு கிறிஸ்துவின் நினைவாக, இந்தப் பெயர் சூட்டப்பட்டது. 'ஆல்பர்ட்’ என்ற ஜெர்மானிய இளவரசரை மணந்துகொண்ட விக்டோரியா மகாராணி, இங்கிலாந்துக்கு இந்த கிறிஸ்துமஸ் மரத்தைக் கொண்டுசென்றார். பிறகு, அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியது.

இந்த மரத்தில், மின்விளக்குகளை வைக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்தவர், எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன். கிறிஸ்துமஸ் மரத்தில் வைட்டமின்சி நிறைந்துள்ளதால், அதன் சில பகுதிகளைச் சாப்பிடலாம் என்கிறார்கள்.

முதலில், கிறிஸ்துமஸ் டிசம்பர் 25ல் கொண்டாடப்படவில்லை. மார்ச் 28, நவம்பர் 18 என்று மாற்றி மாற்றிக் கொண்டாடினார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை டிசம்பர் 25ல் அனைவரும் கொண்டாடும் பழக்கத்தை, போப் முதலாம் ஜூலியஸ் கொண்டுவந்தார். இது நடந்தது, கி.பி.350ல்.

கிறிஸ்துமஸ் தாத்தா 'செயின்ட் நிகோலஸ்’, துருக்கி நாட்டில் இருந்தவர். ஏழை எளியவர் களுக்கு உதவியவர். ஒருமுறை அவர், ஏழைப் பெண்கள் மூவருக்கு தங்க நாணயங்களை வீட்டுப் புகைபோக்கி வழியாகப் போட்டார். அதன் நினைவாக இப்போதும் கிறிஸ்துமஸ் பரிசளிப்பு தொடர்கிறது.

ஜப்பானில் கிறிஸ்துமஸ் தாத்தா இல்லை. பாட்டிதான். 'அந்தப் பாட்டி, தாத்தாவைவிட அன்பானவர்’ என்கிறார்கள் ஜப்பானியர்கள்.

ஸ்பெயினில், கிறிஸ்துமஸ் அன்று பெரிய லாட்டரி போட்டி நடக்கும். ஜெர்மனியில், கிறிஸ்துமஸ் மரம் பிடுங்கும் போட்டிகள் உண்டு. நார்வேயில், நம் மாட்டுப் பொங்கல் மாதிரியே பசுக்களை நன்கு கவனிப்பார்கள். போலந்தில், கிறிஸ்துமஸ் தினத்தில் இயேசுவுக்கு தனி மேஜையில், சாப்பாடு வைக்கிறார்கள்.

நெதர்லாந்தில், கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு ஓர் உதவியாளர் உண்டு. அவர் பெயர், 'ப்ளாக் பெட்டி’. குறும்புசெய்யும் பிள்ளைகளை மூட்டையில் பிடித்து விளையாடுவது இவரின் வேலை.

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள், 'பாக்ஸிங் நாள்’ என்று பெயர். அன்றைய தினத்தில், இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வசூலிக்கப்பட்ட பணத்தை பெட்டிகளில் இருந்து பிரித்துக் கொடுப்பதை, தேவாலயங்கள் வழக்கமாக வைத்திருந்தன. அதனால், இந்தப் பெயர்.

'ஜிங்கில் பெல்ஸ்’ எனும் கிறிஸ்துமஸ் பாடல், கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்காக எழுதப்படவில்லை. நன்றி அறிவிக்கும் நாளுக்காக, 'பியர்பான்ட்’ என்பவர் தன்னுடைய மாணவர்களுக்கு எழுதியது. அது எல்லோருக்கும் பிடித்துப்போகவே, கிறிஸ்துமஸ் பாடலாகியது.

கிறிஸ்துமஸ் அன்று, ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு இனிப்புகள் பிரபலம். ஃப்ரான்ஸ் நாட்டில், பூசணி கேக். ஸ்வீடனில், ஆடு வடிவத்தில் ஜிஞ்சர் பிஸ்கட். இங்கிலாந்தில், உலர் பழங்களில் செய்யும் புட்டிங்... இப்படி நீள்கிறது அந்தப் பட்டியல்.

'கிறிஸ்துமஸ் தீவு’ என்று ஒரு தீவுக்குப் பெயர் உண்டு. 1643ல் 'வில்லியம் மைனர்ஸ்’ எனும் மாலுமியால் கிறிஸ்துமஸ் தினத்தன்று கண்டுபிடிக் கப்பட்டதால், இந்தப் பெயர்.

நியூட்டன், ஜின்னா, வாஜ்பாய், மதன் மோகன் மாளவியா, இசைக் கலைஞர் நௌஷாத் அலி ஆகியோர், கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்தவர்கள்.