Published:Updated:

அறிவிழி - 47

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 47

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 47
##~##

ணையத்தைப் பற்றிய மிகப் பெரிய அச்சமே கொஞ்சம் முயன்றால், அதில் இருக்கும் நமது பிரைவசியைக் கைப்பற்றிவிடலாம் என்பதுதான். அதன் மூலம் நமது வங்கிக் கணக்கைக் கையாளுவதில் ஆரம்பித்து, நம்மைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்வது வரையான ஆபத்துகள் மிக சகஜமாகிவிட்டன. இந்த நிலையில் நம்மைப் பற்றிய முக்கியமான தகவல்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். இணையத்தைப் பயன்படுத்துவதில் சற்றே முதிர்ச்சி அடைந்தவர்கள் மறையாக்கம் (Encryption) கொண்ட தொழில்நுட்பங்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். உதாரணத்துக்கு, 'கிரெடிட் கார்டு எண்’ போன்ற விவரங்களை இணையதளங்களில் கொடுக்கும்போது SSL (Secured Socket Layer) தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதாவது, தளத்தின் உரலிக்கு முன்னால் http -க்கு பதிலாக https இருக்கிறதா என்பதைப் பார்த்துக்கொள்வது. இந்தத் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்ளாத சாதாரணப் பயனீட்டாளர்களுக்கும் இப்போது இயல்பானதாகிவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கணினியில் இருந்தோ, அலைபேசியில் இருந்தோ வலைதளங்களுக்கு செல்கையில் இப்படிப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இணையத்துடன் இணைந்து இயங்கும் அலைபேசி மென்பொருள்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா என்ற கேள்விக்குப் பதில், ஆப்பிள், ஆண்ட்ராயிட் இரண்டுமே தங்களது ஆப் (APP) கடைகளில் மென்பொருள்களை விற்பதற்கு தேவையாக மறையாக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.

அறிவிழி - 47

அது இருக்கட்டும்...

2014-ம் வருடம் பொருள்களின் இணையமாக (Internet of Things, சுருக்கமாக IoT) இருக்கப்போகிறது. உடலில் அணிந்துகொள்ளும் சாதனங்களுடன் நாம் பயன்படுத்தும் பல்வேறு சாதனங்கள் இணைய மேகத்துடன் தொடர்புகொண்டபடி இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு வருகின்றன. உதாரணத்துக்கு, உடல் எடையை அளந்துபார்க்க உதவும் எடைக்கருவி IoT வகை சாதனமாக சந்தையில் வரத் தொடங்கியிருக்கிறது. புளூடூத் மூலமாக உங்களது அலைபேசியுடனோ அல்லது WiFi  மூலம் நேரடியாக உங்கள் வீட்டு நெட்வொர்க்கில் இணைந்துகொள்ள முடிகிற இந்த எடைக்கருவியைப் பயன்படுத்தி நீங்கள் பார்க்கும் எடை, தானாகவே அவர்களது இணையதளத்தில் இருக்கும் உங்களது கணக்கில் பதிவாகிவிடுகிறது. இந்தச் சாதனங்கள் சேகரிக்கும் தகவல்களை நமக்குப் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளும் வசதிகள் விரைவில் பயனீட்டாளர்களுக்கு வந்துவிடும்.

உதாரணத்துக்கு, உடல் எடையைக் குறைக்கும் நோக்கத்தில் உடல்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் ஒருவருக்கு, நாம் மேலே பார்த்த தொழில்நுட்பங்களை ஒன்றிணைத்து இவ்வாறு இயங்கவைக்கலாம்.

உடல் இயக்கங்களை அளக்கும் சாதனம் ஒன்றை அணிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 கி.மீ. நடந்தாக வேண்டும் என்பது விதி. வீட்டின் குளிர்சாதனப் பெட்டியை IoT சாதனமாக்கிவிட வேண்டும். தினசரி கோட்டாவான 10 கி.மீ-யைத் தாண்டவில்லை எனில், குளிர்சாதனப் பெட்டியைத் திறக்க முடியாது. அதை மீறியும் திறக்க வேண்டும் எனில், அதற்கான பிரத்யேகக் கடவுச்சொல்லை அலைபேசியில் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுக்கும்போது, ஃபேஸ்புக்கில் இருக்கும் நண்பர்களுக்கு உங்களது 'ஏமாற்று வேலை’ அறிவிக்கப்படும். அதேநேரத்தில், நீங்கள் உங்களுக்கென நியமித்துக்கொண்டிருந்த எடைக் குறைப்பு இலக்கை அடைந்துவிட்டீர்கள் என்றால், இந்தத் தகவலும் உங்கள் நண்பர்களுக்குத் தானாகவே பகிர்ந்துகொள்ளப்படும். சூப்பர்ல!

ப்போதெல்லாம் பெரும்பாலான ஹாலிவுட் திரைப்படங்கள் சாதாரண ஷோ, 3D ஷோ என்று இரண்டு பதிப்புகளாக ஒரே நேரத்தில் வெளி வருகின்றன. 3D பதிப்பைப் பார்க்க ஓரிரண்டு டாலர்கள் அதிகம் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். 3D வசதிகொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகளின் எண்ணிக்கையும் கடந்த மூன்று ஆண்டுகளில் பல மடங்காக உயர்ந்திருக்கிறது. 2012-ல் 45 மில்லியன் 3D தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்பனை ஆகியிருக்கின்றன. இணையமும் 3D தொழில்நுட்பத்தைத் துரத்திப்பிடித்தபடி இருக்கிறது. இணையத்தின் தொடர்புக்கான நிரல்மொழியான HTML-ன் கூறுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் அமைப்பான W3C (World Wide Web Consortium, இணைய 3D-கான வரைமுறைகளை உருவாக்கியபடி இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் இயங்கும் நிறுவனங்கள் பல இணைந்து, Web 3D Consortium என்ற அமைப்பை உருவாக்கி X3D என்ற நிரல்மொழியை உருவாக்கியிருக்கின்றன.பல்வேறு பரிசோதனை முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் இணையத்தின் 3D தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல், கூகுளின் யூ டியூப் 3D சேனல். கலக்கலான பல வீடியோக்களைக் கொண்டிருக்கும் இந்த யூ டியூப் தளத்தைப் பார்க்க ஸ்பெஷல் கண்ணாடி தேவை!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism