Published:Updated:

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

Published:Updated:
##~##

''மரணத்தை மட்டும்தாங்க சந்திக்கலை. மத்தபடி இந்த ஒரு மாசத்தில் எல்லாத் துயரத்தையும் அனுபவிச்சுட்டோம். ஆனால் இந்த விருது, எல்லா வலியையும் மறக்கடிச்சுடுச்சு!'' - சோகமும் சுகமும் கலந்து பேசுகிறார் பாபு. பாபுவும் வரதராஜனும் சேர்ந்து கடந்த வாரம் ஆவடி, ஹெச்.வி.எஃப். மைதானத்தில் கின்னஸ் சாதனைக்காகவைத்த உலகின் நீளமான பேனர், ஏசியா புக் ஆஃப் அவார்டு, இண்டியா புக் ஆஃப் அவார்டு மற்றும் லிம்கா அவார்டுகளில் பதிவாகி இருக்கிறது!

 பண்பாடு, மதங்கள், அரசியல், அறிவியல், கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், 75 வருட சினிமா, நாடகங்கள், மற்றும் பொழுதுபோக்கு விவரங்கள், பிரபலங்கள், மக்கள்தொகை, அன்றைய மன்னர் காலம் தொடங்கி இன்றைய மக்களாட்சி வரை, ஒவ்வொரு மாநில வரலாறு என, மொத்த இந்தியாவையே இந்த மெகா பேனரில் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள் இவர்கள்.

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

''நான் சிவில் இன்ஜினீயர். ஒரே ஒரு குழந்தை. மாதம்

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

1 லட்சம் சம்பளம், கார், வீடுனு நல்ல வசதி. ஆனா, இப்ப மனைவி, குழந்தையைத் தவிர வேறு எதுவுமே இல்லை. வேலையை ராஜினாமாப் பண்ணிட்டேன். காரை வித்துட்டு ஷேர் ஆட்டோவில் போயிட்டு வரவும் ஏரியாக்காரங்க எல்லாம் ஏதோ பைத்தியக்காரனைப் பார்க்கிற மாதிரி பார்க்குறாங்க. ஆனா, அதுக்காக நான் கவலைப்படலை!'' என்கிற வரதராஜனைத் தொடர்கிறார் பாபு.

''ஆவடியில் 'லவ்லி டிஜிட்டல்’ என்கிற பெயரில் பிரின்டிங் பிரஸ்வைத்து இருக்கிறேன். சின்ன வயதில் இருந்தே ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு ஆசை. கையில் சேர்த்துவைக்கிற காசில் இப்படி எதையாவது செஞ்சு மொத்தமா செலவழிச்சுடுவேன். வீட்ல திட்டுவாங்க. ஆனாலும் இப்போ வரை என் பழக்கத்தை மாத்திக்கலை. வட இந்தியாவில் 1,650 சதுர அடியில் ஒருத்தர் டிஜிட்டல் பேனர்வெச்சது லிம்கா அவார்டாகப் பதிவானதாம். நாம 1 லட்சம் சதுர அடியில் பேனர்வெச்சா என்னன்னு யோசிச்சேன். என் வாடிக்கையாளர் வரதராஜனும் என்னை மாதிரியே ரசனைகொண்டவர். அவரும் என் திட்டத்தில் ஆர்வமாக இணைந்துகொண்டார்!''

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

ஆர்வம் உந்தித் தள்ளினாலும் இந்தச் சாதனைக்காக இவர்கள் எதிர்கொண்ட அவமானங்கள் அதிகம். ''உலகச் சாதனை விஷயமாச்சே எல்லாரும் ரத்தினக் கம்பள வரவேற்பு கொடுப்பாங்கனு நினைச்சு அனுமதிக்காக அரசின் கதவைத் தட்டினோம். அங்கே, இங்கே அலைஞ்சு திரிஞ்சு ஏகப்பட்ட நிபந்தனைகளோடு அனுமதி வாங்கினோம். கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய் செலவாச்சு. நண்பர்கள், சில உறவினர்கள் மட்டுமே உதவினார்கள். 'கல்வி சம்பந்தமா வெச்சா யார் பார்ப்பாங்க? கமர்ஷியலா செய்ங்க. சினிமா ஆட்களைக் கூப்பிடுங்க’னுலாம் சொல்லி எந்த நிறுவனமும் உதவலை. இரவு, பகல்னு உழைச்சு 13 நாளில் 1 லட்சத்து 31 ஆயிரம் சதுர அடியில் உலகின் நீளமான டிஜிட்டல் பேனரை தயார் செய்தோம். மாணவர்களுக்கு இலவசம், பெரியவர்களுக்கு மட்டுமே நுழைவுக் கட்டணம்னு தீர்மானிச்சோம். ஒவ்வொரு பள்ளியிலும்  இலவச டிக்கெட் கொடுத்து 'உங்க பசங்களைக் கூட்டிட்டு வாங்க’னு சொன்னதுக்கு, 'கட்டணம் போடுங்க. அதில் எங்களுக்கு இத்தனை சதவிகிதம் கமிஷன் கொடுங்க’னு பேரம் பேசினாங்க. அப்பத்தான் மனசு ரொம்ப நொறுங்கிடுச்சு. ஆனா, எங்க நிலைப்பாட்டில் உறுதியா இருந்தோம். 'எந்தப் பின்புலமும் இல்லாமல் இவ்வளவு குறைஞ்ச நாளில் நீங்க செய்து இருக்கிற சாதனை அசாத்தியமானது’னு சொல்லி நள்ளிரவு 12 மணிக்கு விருது கொடுத்தாங்க!'' என்ற பாபுவின் தோள் தட்டிய வரதராஜன், ''இந்த ஒரு மாசமா சரியாத் தூங்காம, சாப்பிடாம வேற எதைப் பத்தியும் யோசிக்காம நினைச்சதைச் சாதிச்சுட்டோம். இன்னியோட நிகழ்ச்சி முடியுது. நாளைக்குக் காலையில் விடிஞ்ச பிறகுதான் நாங்க எத்தனை லட்சத்துக்குக் கடன்காரங்கனு கணக்குப் பார்க்கணும்!'' என்று சொல்லி சிரிக்கிறார்.

ஒரு லட்சம் சதுர அடி சாதனை... ஒரு கோடி வேதனை!

- கே.யுவராஜன், படங்கள்: எம்.உசேன்