Published:Updated:

படகு ஓட்ட பாரதம் வந்தோம்!

பரபர பாகிஸ்தான் கேர்ள்ஸ்

##~##

சென்னை கிழக்குக் கடற்கரை சாலை முழுவதும் கடந்த வாரம் இந்திய, பாகிஸ்தான், இலங்கை யுவதிகளின் படையெடுப்பு. 'யு.என்.எஃப்.ஐ கேபிட்டல் ஆஸ்ரா ரிகாட்டா ரோயிங்’ போட்டிக்காக டி-ஷர்ட், ஷார்ட்ஸ் என கலக்கல் காஸ்ட்யூம், துடுப்புப் படகுகளுடன் குவிந்த 100 இளம் பெண்களால் கிழக்குக் கடற்கரையே அல்லோலகல்லோலப்பட்டது. கல்பாக்கம், கூவத்தூர் பேக் வாட்டர்ஸில் நடைபெற்ற இந்தப் படகுப் போட்டியில் இருந்து...

 50 கிலோ எடைகொண்ட துடுப்புகளைத் தண்ணீரில் சட்டென சுழற்றி சில விநாடிகளில் 500 மீட்டர் தூரத்தைக் கடக்கிறார் பாகிஸ்தானியரான முஸ்னா அக்பர். 15 வயதான முஸ்னா, பாகிஸ்தானில்

படகு ஓட்ட பாரதம் வந்தோம்!

படகுப் போட்டிகளில் பல தங்கப்பதக்கங்களை அள்ளி இருப்பவர். ''இந்தியாவுக்கு ரேஸுக்காகப் போகப் போறோம்னு சொன்ன உடனேயே பெற்றோர், நண்பர்களிடம் இருந்து ஏகப்பட்ட எச்சரிக்கை அட்வைஸ்கள். இது போதாதென்று இந்த ரேஸுக்காக ரெண்டு மாசத்துக்கு முன்னாடி விசா அப்ளை பண்ணியும் விமானம் ஏற 24 மணி நேரம் இருக்கும்போதுதான் விசா கிடைச்சுது. அதுவும் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியதுமே நேரா கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ரேஸ் நடைபெறும் இடத்துக்குத்தான் போகணும். ரேஸ் முடிஞ்சவுடனே நேரா ஏர்போர்ட்டுக்கு வந்துடணும். வேற எங்கேயும் போகக் கூடாதுனு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். ஆனாலும் இந்தியாவில் இந்தியர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்கணும்கிற கனவோடு இங்க வந்து இருக்கோம்!'' என்று படபடக்கிறார் முஸ்னா.

படகு ஓட்ட பாரதம் வந்தோம்!

''பாகிஸ்தானியர்கள் என்று சொன்னாலே எங்களைப் பார்த்து முறைப்பார்கள். அதுவும் சென்னையில் குடிக் கத் தண்ணிகூட கிடைக்காது என்றுஎல்லாம் சொன்னார்கள். ஆனால், அது எதுவும் உண்மை இல்லை என்பது இங்கு வந்து இறங்கிய உடன் புரிந்தது. இந்திய வீரர்களைவிட எங்களைத்தான் விழுந்து விழுந்து கவனிச்சுக்குறாங்க. சென்னை நல்ல ஊர்னு பாகிஸ்தான் போனதும் எல்லோர்கிட்டயும் சொல்லுவோம்'' என்கிறார் மஹம் முஸ்தஃபா. ''இந்தி சினிமா ரொம்பப் பிடிக்கும். எங்கள் படங்களைவிட பாலிவுட் படங்களைத்தான் அதிகம் பார்ப்போம். ஷாரூக்கான், சல்மான்கான், அமீர் கான் எல்லோரையும் பிடிக்கும்!'' என்ற வரிடம் தென்னிந்திய நடிகர்கள் யாரை யும் தெரியாதா என்றால், ''ஓ... 'ரத்த சரித்ரா’ சூர்யா, 'ராவண்’ விக்ரம்லாம் தெரியுமே. சென்னையைச் சுத்திப் பாக் கணும், ஷாப்பிங் போகணும்னு ரொம்ப ஆசை. ஆனா, வெளியே போனா போலீஸ் புடிச்சிக்குமாம்!'' என்கிறார் ருபினா அப்பாவியாக!

படகு ஓட்ட பாரதம் வந்தோம்!

பொண்ணுங்களுக்காகவாவது ரூல்ஸை கொஞ்சம் தளர்த்துங்கப்பா!

 - சார்லஸ், படங்கள்: கே.கார்த்திகேயன்

அடுத்த கட்டுரைக்கு