Published:Updated:

அறிவிழி - 48

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 48

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 48
##~##

யாஹூ, பல விவரங்கள் உள்ளடங்கிய நுழைவாயில் தளமாக (Portal) இருக்கும் நிலையிலிருந்து நேரடி செய்தி நிறுவனமாக மாறும் முஸ்தீபுகளில் இருக்கிறது. 'கேட்டி க்யூரிக்’ என்ற பெயர், அமெரிக்கத்  தொலைக்காட்சிப் பயனீட்டாளர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. ABC நெட்வொர்க்கில் செய்தியாளராகப் பல வருடங்கள் பணியாற்றி வந்த 'கேட்டி’, அதைவிட்டு விலகி யாஹூ நிறுவனத்தில் Global Anchor ஆக இணையப்போகிறார். கேட்டியின் தலைமையில் உலகம் முழுதும் செய்தித் திரட்டி, ரிப்போர்ட் செய்யும் வசதியை யாஹூ கொண்டுவரும் என்பது எனது அனுமானம். கூகுளை, தேடல் இயந்திரப் பிரிவில் வெற்றிகொள்ள முடியவில்லை. போட்டி மிகுந்த ஊடக உலகில் யாஹூ என்ன செய்யப்போகிறது என்பது விரைவில் தெரியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான்கு வயதான நோவாவுக்கு, கண்பார்வை சற்றே குறைவு. அவனைச் சோதித்த மருத்துவர், 'நோவா, கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும்’ என்கிறார். நான்கு வயதே ஆனாலும், நோவாவுக்கு ஃபேஷன் உணர்வு அதிகம். 'கண்ணாடி போட்டால், என்னைப் பார்க்கிறவங்க சிரிப்பாங்களே’ என்று வருத்தப்பட, நோவாவின் அம்மா-அப்பாவுக்கு மனதில் ஒரு பல்ப்! ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தைத் தொடங்கி, அதில் 'கண்ணாடி அணிவது அழகாகவே இருக்கும் என்பதை, உங்களது அல்லது உங்கள் குழந்தைகளின் புகைப்படங்களைப் பதிவுசெய்து காட்ட முடியுமா?’ என்று கேட்டுக்கொண்டனர். பரபரவெனப் பலர் அந்தப் பக்கத்தில் எழுதிவர, வைரல் வேகத்தில் நோவாவின் பக்கம் பிரபலமாகி வருகிறது. சென்ற வாரத்தில் சில நூறு பேர்களே இருந்த இந்தப் பக்கத்தில், இந்தக் கட்டுரை எழுதும்போது எண்ணிக்கை 10,000 தாண்டிவிட்டது. பொதுவாக இரைச்சலும் ரகளையுமாக இருக்கும் சமூக ஊடகங்களில் அவ்வப்போது இதுபோன்ற சாதாரணமானவர்களுக்கும் பலன் அளிக்கும் பிராக்டிக்கலான பயனீடுகள் புன்னகையை வரவழைக்கின்றன. பக்கத்தில் வெளியிடப்படும் படங்களைப் பார்த்துவிட்டு, நோவா, கண்ணாடி அணிந்துகொள்ள சம்மதித்தது லேட்டஸ்ட் தகவல். நோவாவின் பக்கத்தைப் பார்க்க Glasses for Noah’ என்ற வரிகளை ஃபேஸ்புக்கில் டைப்புங்கள்!

அறிவிழி - 48

ல மாதங்களுக்கு முன்னால், 23andMe  தளத்தின் சேவையைப் பற்றி இந்தத் தொடரில் எழுதியிருந்தேன். இந்தத் தளத்தில் 100 டாலர்கள் கொடுத்து அவர்கள் அனுப்பும் ட்யூபில் உங்களது எச்சிலை அனுப்பிவிட வேண்டும். அதிலிருந்து உங்களது டி.என்.ஏ. தகவல்களை எடுத்துப் பகுத்தறிந்து, எந்தெந்தவிதமான நோய்கள் வரக்கூடும் என்பதை ஒரு ரிப்போர்ட்டாக அனுப்பிவிடுவார்கள். கிடுகிடுவெனப் பிரபலமாகி வந்த இந்தத் தளத்தின் இயக்கத்துக்குத் தடை போட்டிருக்கிறது Food and Drug  Administration. சுருக்கமாக, FDA. உணவு மற்றும் மருந்துகளை சந்தைக்குக் கொண்டுவருவதை ஒழுங்கு செய்யும் இந்த அமைப்பு, அமெரிக்க அரசின் ஒரு பிரிவு. 23andMe சேவையின் பல முடிவுகள், உத்தேசமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை முழுமையாக நம்பி, மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ளுதல், தேவையற்ற

அறிவிழி - 48

அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளும்படி வலியுறுத்துதல் போன்றவை நடப்பதாகச் சொல்கிறது FDA. தங்களது சேவையை இனி பகிரங்கமாக மார்க்கெட்டிங் செய்யக் கூடாது என்ற தடையை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறது 23andMe.

வரும் வருடங்களில், அணிந்துகொள்ளும் தொழில்நுட்ப சாதனங்கள் அணிவகுத்து வரும் என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். உடல் இயக்கத்தைக் கண்காணித்துக் கிடைக்கும் தகவல்களை இணையத்தில் இருக்கும் உங்களது கணக்கில் சேகரித்துவைக்கும் சாதனங்களே இந்தப் பிரிவில் முதன்மையானவை. நீங்கள் எவ்வளவு தூரம் நடக்கிறீர்கள், அதிலிருந்து எவ்வளவு கலோரிகள் பயன்படுத்தப்பட்டன போன்ற தகவல்களை இந்தச் சாதனங்கள் பொதுவாகக் கொடுக்கின்றன. இந்தக் கணக்கீடுகள் ஓரளவுக்குத் தோராயமானவைதான் என்பதால், FDA, அணிந்துகொள்ளும் சாதனங்களையும் கட்டுப்படுத்துமோ என்ற கேள்வி இணையத்தில் அலசப்படுகிறது. மேற்படி சாதனங்கள் தகவல்களை மட்டுமே சேகரிக்கின்றன. அதிலிருந்து diagnostics எதையும் 23andMe போல செய்வது இல்லை என்பதால் கட்டுப்படுத்தப்படாது என்பது எனது அனுமானம்!

அணியும் தொழில்நுட்ப சாதனங்கள் இப்போது உங்களது வளர்ப்பு பிராணிகளுக்கும் தயாராகின்றன. Whistle என்ற பெயரில் தயாராகியிருக்கும் சாதனத்தை உங்கள் நாயின் கழுத்துப் பட்டையில் கட்டிவிட்டால் போதும். அது எவ்வளவு சுறுசுறுப்பாக வளைய வருகிறது (அல்லது, சோம்பேறித்தனமாகப் படுத்து உறங்குகிறது) என்பதை, சாதனத்தில் இருக்கும் புளுடூத் அல்லது வைஃபை இணைப்பின் மூலம் சேகரிக்கப்படும் தகவலில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.

மெரிக்க அதிபர் வருடத்துக்கு ஒருமுறை வான்கோழி ஒன்றை மரணத்தில் இருந்து விடுதலை செய்யும் வினோத மரபு, ஒபாமா அதிபரானதில் இருந்து ரகளையாகத் தொடர்கிறது. ஒவ்வொரு நவம்பர் மாதக் கடைசி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படும் Thanks giving நாளில், வெள்ளை மாளிகையில் இந்த விடுதலை வழங்கும் வைபவம் நடைபெறும். 'அதிபர், வான்கோழி ஒன்றை மரணத்தில் இருந்து விடுதலையாக்கினார்’ என்று பத்தோடு பதினொன்றாக வெளிவரும் ஒரு செய்தியை, சமூக ஊடகத்தைப் பயன்படுத்திப் பிரபலமாக்கியது ஒபாமாவின் நிர்வாகம். வெள்ளை மாளிகையில் தனியாக ஒரு பக்கத்தை ஒதுக்கி, இரண்டு வான்கோழிகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் குரல்களை Sound Cloud தளத்தில் பதிவுசெய்து, மக்களை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் Hashtag மூலம் வாக்களிக்கவைத்து The Gobble’ விருதை வெற்றிபெற்ற வான்கோழிக்கு வழங்கியது ஒபாமாவின் வெள்ளை மாளிகை!

வான்கோழிகளில் உரலி... http://www.whitehouse.gov/turkey

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism