என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

லட்சுமிபிரியா லட்சுமிபிரியான்னு சொல்லுதா?

லட்சுமிபிரியா லட்சுமிபிரியான்னு சொல்லுதா?

##~##

காரைக்குடி மக்களுக்கு இது கொண்டாட்ட சீஸன்.... காரணம், 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்’!  

'இந்திய சர்க்கஸ் நிறுவனங்கள் அந்திமக் காலத்தில் இருக்கின்றன’ என்ற ஸ்பெஷல் ஸ்டோரிகளுக்கு இடையிலும், உற்சாகமாக காரைக்குடியில் தினமும் மூன்று ஷோக்கள் நடத்தி ரசிகர்களை மகிழ்விக்கிறார் கள் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்’ நிறுவனத்தினர்!

சர்க்கஸுக்குள் நுழைந்ததும்  மர ணக் கூண்டுக்குள் தடதடவென அதிரவைத்து வரவேற்கிறது பைக் சாகஸம். 'வ்வ்ர்ர்ர்ரூம்’ என்று விடாமல் நான்கு நிமிடங்களுக்கு அதிர்கிறது அரங்கம்.  கயிற்றின் மேல் நடனம், சைக்கிளில் ஒன்று, இரண்டு, மூன்று என ஆறு பேர் வரை  ஏறி  பேலன்ஸ் நழுவாமல் சுற்றியது,

லட்சுமிபிரியா லட்சுமிபிரியான்னு சொல்லுதா?

அந்தரத்தில் பறந்து விளையாடும் பார் விளையாட்டு, சக்கரங்களை உருட்டியபடி வந்த நாய்கள், லயம் தப்பாமல் ஓடிய குதிரை, ஒட்டகம்  என சர்க்கஸின் ஒவ்வொரு விநாடியும் குதூகலம்.

''இங்க என்ன சொல்லுது? லட்சுமிப்ரியா, லட்சுமிப்ரியானு சொல்லுதா?' என்று 'கரகர’ கணேஷ் குரலில் அறிவிப்பு வர, மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்து அடங்கியது. ஆடி அசைந்து வந்த லட்சுமிப்ரியாவுக்கு எடை குறைந் தது 1,000 கிலோ இருக்கும். கிரிக்கெட் ஆடி, இரண்டு கால்களில் நின்று, சரக்கு அடித்து சலம்பி விழுந்து குழந்தைகளைச் சிரிக்கவைத்தபடி நிகழ்ச்சியை நிறைவு செய்தது லட்சுமிப்ரியா என்கிற பெண் யானை.  

லட்சுமிபிரியா லட்சுமிபிரியான்னு சொல்லுதா?

காட்சி முடிந்ததும் சில சர்க்கஸ் கலைஞர்களை சந்தித்தோம். பஃபூன் ரமேஷ்தான் இந்த சர்க்கஸின்  'அபூர்வ சகோதரர்கள் கமல்’. ''15 வருஷமா இங்க தான் இருக்கேன். எல்லாரும் ஏதாவது ஒரு அயிட் டம்தான் பண்ணுவாங்க. ஆனா, நான் எல்லா நிகழ்ச்சிகளிலும் வருவேன்.  ஆரம்பத் தில் எல்லாரும் கிண்டலடிச்ச என் உயரம் தான், இப்போ எனக்கு இவ்வளவு ரசிகர்களை ஏற்படுத்தி இருக்கு!'' என்கிறார் நெகிழ்வாக.  

சாகர், அஷ்ரஃப் இருவரும்தான் மரணக் கூண்டு பைக் டிரைவர்கள். ''பைக் ஓட்டும் போது என் உயிர் அவன் கையில், அவன் உயிர் என் கையில் இருக்கும். ரெண்டு பேரும் அவங்கவங்க பாதையில், மிஸ் ஆகாம பைக் ஓட்டணும். ஒருத்தர் பாதை மாறினாலும் ரெண்டு பேருக்கும் ஆபத்து தான். அதனால், ரெண்டு பேரும் ஒரே மாதிரி பிரேயர் பண்ணிட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணுவோம்'' என்று சாகர் சொல்ல, ஆமோதிக்கிறார் அஷ்ரஃப். கூடார வாசலில் தையல் மெஷினுடன் ஒருவர் தைத்துக்கொண்டே இருக்கிறார். ''நான் சேகர்... 40 வருஷமாக் கூடாரத்துக்குத் துணி தைக் கிறேன். தினமும் எங்கேயாவது ஒண்ணு ரெண்டு இடத்தில் கிழிஞ்சுடும். உடனே தைச்சுக் கொடுப்பேன். எனக்கு இந்த ஒரு வேலைதான் தெரியும். ஆனா, சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன் சார்!'' என்கிறார். மேனேஜர் ஐயப்பன், ''வருஷம் முழுக்க  இந்தியாவைச் சுத்திட்டே இருக்கோம். ஒரு நாளைக்கு

லட்சுமிபிரியா லட்சுமிபிரியான்னு சொல்லுதா?

50,000 வரை கலெக்ஷன் வரும். செலவு எல்லாம் போக சொச்சமிச்சம்னு ஏதாவது மிஞ்சும். சிங்கம், புலியைப் பயன்படுத்தத் தடை விதிச்சதால், ரொம்பக் கஷ்டம்!'' என்கிறார் வாடிய முகத் துடன்!  

-ச.ஸ்ரீராம், படங்கள்: பா.காளிமுத்து