என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

மதுரையில் ஒரு உலக தமிழ் ஞானி!

மதுரையில் ஒரு உலக தமிழ் ஞானி!

##~##

''யெய்யா... நாஞ் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கய்யா!''- என்று 1961 முதல் முழங்கி வரும் சாலமன் பாப்பையாவுக்கு இது பட்டிமன்ற மேடைகளில் 50-வது ஆண்டு. அதற்கான பாராட்டு விழா, அகவை 75 நிறைவு விழா, 'பட்டிமன்றமும் பாப் பையாவும்’  நூல் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா மதுரையில். வாழ்த்த வந்தவர்களால் ராஜா முத்தையா மன்றமே நிரம்பி வழிய, பேச்சாளர்களே பின் வாசல் வழியேதான் உள்ளே வந்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், பாப்பையாவுக்கு 'பட்டிமன்ற பாரதி’ என்ற விருதை வழங்கினார். 'தமிழர்கள் வாழும் 152 நாடுகளில் புகழ் பெற்று விளங்குபவர் பாப்பையா. எப்படி உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு அப்பீல் கிடையாதோ, அதேபோல பாப்பையாவின் பட்டிமன்றத் தீர்ப்புக்கும் அப்பீலே கிடையாது. இந்த அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விழாக்களில் நான் பங்கேற்று இருக்கிறேன். ஆனால், இன்றுபோல் ஒரு கூட்டத்தைக் கண்டது இல்லை!' என்று புகழ்ந்து மகிழ்ந்தார்.

மதுரையில் ஒரு உலக தமிழ் ஞானி!

பாப்பையாவின் சுய வரலாறோடு இணைந்து தமிழக பட்டிமன்ற வரலாற்றையும் சொல்லும் 'பட்டிமன்றமும் பாப்பையாவும்’ என்ற புத்தகத்தை வெளியிட்ட தொழில் அதிபர் குவைத் ராஜா, பாப்பையாவுக்கு 'உலகத் தமிழ் ஞானி’ என்ற பட்டத்தையும் வழங் கினார். பாப்பையாவோடு நெருங்கிப் பழகிய பேச்சாளர்கள், உடன் பணியாற் றிய பேராசிரியர்கள், பயின்ற மாணவர்கள், பல்துறை நிபுணர்கள், அவருடைய குடும் பத்தினர் பாப்பையாவைப்பற்றிக் கருத்துக் களைப் பகிர்ந்துகொண்ட 20 நிமிடக்

மதுரையில் ஒரு உலக தமிழ் ஞானி!

குறும்படம், விழாவின் ஹைலைட். ஏற்புரை நல்கிய பாப்பையா, ''கல்யாண மாலை மோகனும், மீரா நாகராஜனும் பட்டிமன்றத்துக்கு என்று தேதி வாங்கிவிட்டு, இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். முன்பு எல்லாம் பேச்சு உலகத்தில் பண்டித நடைதான் எடுபடும். எனவே, நானும் இலக்கணப் பிழை இல்லாதபடிக்குப் பேசிக்கொண்டு இருந்தேன். ஆனால், அது பாமரர்களுக்குப் போய்ச் சேரலை என்பதை பின்னர்தான் புரிந்துகொண்டேன். பாமரர்களுக்குப் போய்ச் சேராத வரை இந்தப் பேச்சால் பயன் இல்லை என்று அரங்குகளில் இருந்த தமிழை வீதிக்குக் கொண்டுவந்தேன். அதைச் சில பண்டிதர்கள் எதிர்த்தாலும் பாமரர்கள் அமோக ஆதரவு கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த மரியாதைதான் என்னை இங்கு கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது. தொடர்ந்து பயணிக்கவைக்கிறது. தமிழோடு வளர்ந்த நகரம் மதுரை. இந்த மதுரையை மிகவும் நேசிக்கிறேன். மதுரையில் பிறந்ததற்காகப் பெருமைப்படுகிறேன். நான் இத்தனை உயரத்துக்கு வந்ததற்கு இந்த நகரும், சாமானியர்களின் ஆதரவும், மீனாட்சியின் அருளும்தான் காரணம்!'' என்று நெக்குருகினார்.

மதுரையில் ஒரு உலக தமிழ் ஞானி!

பாப்பையா இருக்கும் இடத்தில் பட்டி மன்றம் இல்லாமலா? விழாவின் ஒரு பகுதியாக 'தமிழர்கள் பல நாடுகளுக்குச் சென்றதனால், இழந்தது அதிகமா... பெற்றது அதிகமா?’ என்ற பட்டிமன்றம் நடைபெற்றது.  ''வெளிநாடு செல்வதால், தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழக்கிறார்கள். மொழியை இழக்கிறார்கள். குடும்ப உறவுகளை இழக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தாய்த் தமிழ்நாடு அந்தத் தமிழர்களை இழக்கிறது. பணம், பொருள் என்று தனிமனிதனாக வேண்டுமானால், பெற்றது அதிகமாக இருக்கலாம். குடும்பமாக, சமூகமாக இழந்ததுதான் அதிகம்!'' என்று அசத்தல் தீர்ப்பு வழங்கினார் பாப்பையா

பிரமாதம்ய்ய்ய்ய்யா!

 - கே.கே.மகேஷ்,படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்