இருக்கு... இல்லை!

ராமசாமி தாத்தா, திண்ணையில் உட்கார்ந்து பேரனிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த நண்பர் பெருமாளைப் பார்த்ததும், ''என்ன பெருமாள், பையில் என்ன?'' என்று கேட்டார்.

''அது என்னிடம் இருக்கு... உன்னிடம் இல்லை. வீட்டில் இல்லை... வீட்டினுள் கடைசியாக இருக்கு'' என்றார் பெருமாள் தாத்தா.

''ஓகோ... சரி, அதில் எனக்கு இனிப்பு உருண்டை பிடிச்சு எடுத்துட்டு வா'' என்றார் ராமசாமி தாத்தா.

இதைக் கேட்ட பேரனுக்கு தலைசுற்றியது. ''ரெண்டு தாத்தாக்களும் என்ன பேசிக்கிறீங்க? ஒண்ணுமே புரியலையே'' என்று குழம்பினான்.

பெருமாள் தாத்தாவின் பையில் இருந்தது என்ன? தாத்தாக்களின் பேச்சிலேயே குறிப்பு இருக்கிறது.

சவால் குரு!

அப்பாவின் டூ வீலர், காம்பவுண்டுக்குள் நுழைந்ததுமே ஓடிச்சென்ற குருசரண், ''எங்க ஸ்கூலில் டூர் அழைச்சிட்டுப் போறாங்க. அதுக்கு, 555 ரூபாய் கொடுக்கணும்'' என்றான்.

சோபாவில் வந்து உட்கார்ந்த அப்பா, காபியைக் குடித்தபடியே... ''குரு, உனக்கு 555 ரூபாய் தர்றேன். ஆனால், ஒரு நிபந்தனை. என்னோட டேபிள் டிராவைத் திறந்து பார். அதில் 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய், 10 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகளும் 1 ரூபாய், 50 பைசா நாணயங்களும் இருக்கும். அதிலிருந்து நீ 555 ரூபாயை மட்டுமே எடுக்கணும். ஆனா, ஒரு நிபந்தனை.. நீ எடுக்கும் பணத்தின் மதிப்பும் நோட்டு அல்லது நாணயத்தோட எண்ணிக்கையும் ஒன்றாக இருக்கணும். உதாரணத்துக்கு, 10 ரூபாய் நோட்டு எடுத்தால், அதில் 10 இருக்கணும். அது மாதிரியே நீ எடுத்த நோட்டு மற்றும் நாணயங்களின் எண்ணிக்கையும் 555 இருக்கணும். முடியுமா?'' என்று கேட்டார்.

''இவ்வளவுதானே... இதோ'' என்று உள்ளே ஓடினான் குரு. ஐந்து நிமிடங்களில், நிபந்தனையை மீறாமல் 555 ரூபாயை எடுத்து வந்தான். அப்பா, அவனைப் பாராட்டி, மேலும் 10 ரூபாய் கொடுத்தார்.

குருசரண், பணத்தை எடுத்துவந்த வரிசை என்ன?

இது, கிளிக் கடி!

ஒரு கிளிக்கு மூன்று குஞ்சுகள். அன்று, தாய்க் கிளி வெளியே போக முடியாதபடி அதன் கால்களைக் கட்டிக்கொண்டு குஞ்சுகள் அடம்பிடித்தன. ''சரி, கொஞ்ச நேரம் ரயில் விளையாட்டு விளையாடலாம்... அப்புறமா நான் போறேன். நீங்க ஒருவர் பின்னால் ஒருவராக என் வாலைப் பிடிச்சுக்கங்க'' என்று தாய்க்

கிளி சொல்ல, குஞ்சுகள் ஆர்வமாக சிறகை அடித்துக்கொண்டன.

ரயில் விளையாட்டு ஆரம்பமானது. தாய்க் கிளி, ''எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருகின்றன'' என்று சொல்லிவிட்டு, முதலாவது நின்ற குஞ்சிடம் கேட்டது, ''நீ சொல்லு, உனக்குப் பின்னாலே எத்தனை பெட்டிகள்?''

உடனே முதல் குஞ்சு, ''எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருகின்றன'' என்றது.

இரண்டாவதாக வந்த குஞ்சும் ''எனக்குப் பின்னாலே மூன்று பெட்டிகள் வருகின்றன'' என்றது. மூன்றாவது குஞ்சும் அப்படியே சொன்னது.

ஏன்? எப்படி?

ஆடு...மாடு...குதிரை !

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அபிஷேக்கை அழைத்த அம்மா, ''இரண்டு கிலோ அரிசியும் அரை கிலோ உளுந்தும் வாங்கிட்டு வா, அவசரம்'' என்றார்.

''பக்கத்துத் தெருவில் புதுக் கடை திறந்திருக்காங்க. அங்கே வாங்கிட்டு வர்றேன்'' என்று ஓடிய அபிஷேக், சற்று நேரத்தில் வாங்கிவந்த பொருட்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டு ஓடத் தயாரானான்.

''எது எது எவ்வளவு விலைன்னு சொல்லிட்டுப் போ'' என்ற அம்மாவிடம், ''அரிசி 15 ஆட்டுக் கால், பருப்பு 20 மாட்டுக் கொம்பு, கல்கண்டு விலை குதிரைக் கொம்பு'' என்றான்.

''புதிரிலேயே பேச ஆரம்பிச்சிட்டியா? இந்தா, குதிரைக் கொம்பை நீயே வச்சுக்கோ'' என்று கல்கண்டு பாக்கெட்டை அபிஷேக்கிடம் கொடுத்தார் அம்மா.

இப்போ கேள்வி என்னவென்றால், பொருட்களின் விலையாக அபிஷேக் சொன்னது என்ன?