Published:Updated:

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

பென் டிரைவ் !

Published:Updated:
பென் டிரைவ் !
பென் டிரைவ் !

ஐஸ்க்ரீம் குச்சிகளை நவீன ஓலைச்சுவடிகளாக மாற்றி, அதில் 1,330 திருக்குறள்களையும் எழுதி இருக்கிறார், மதுரை ஸ்ரீவாணி வித்யாலயா பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் கௌசிக்.

''எனக்கு, தமிழ் மீது ஆர்வம் அதிகம். 'திருக்குறளை வித்தியாசமாக எழுத வேண்டும்’ என்று நினைத்து, ஐஸ்க்ரீம் குச்சியில் 1,330 குறள்களையும் ஏழு நாட்களில் எழுதி முடித்தேன்'' என்கிற கௌசிக், கராத்தே, யோகா மற்றும் சிலம்பம் போன்றவற்றிலும் பல்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கிறார்.

- டி.பி.ஜி.சாமுவேல் டேவிட் டில்டன்
படம்: பா.காளிமுத்து

பென் டிரைவ் !

 கடலில் இருந்து திரவ இயற்கை எரிவாயு எடுப்பதற்காக, தென்கொரியா துறைமுகத்தில்... உலகின் மிகப் பெரிய கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. Prelude என்ற இந்தக் கப்பலின் நீளம் 1,601 அடிகள். அகலம் 243 அடிகள். ஷெல் (Shell)நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பலின் எடை 6,00,000 டன். இந்தக் கப்பலை உயரவாக்கில் நிறுத்தினால், எம்பயர் ஸ்டேட் பில்டிங்கைவிட உயரமாக இருக்கும். இதில், திரவ இயற்கை எரிவாயு நிரப்ப உள்ள தொட்டியில், 175 ஒலிம்பிக் நீச்சல் குளங்களில் இருக்கும் நீரை நிரப்பலாம். அதனால், இந்தக் கப்பலை மிதக்கும் தீவு என்று அழைக்கிறார்கள்.

பென் டிரைவ் !

சென்னையில், ஸ்டார் மார்க் மற்றும் ஸ்கூல் ஆஃப் சக்ஸஸ் அமைப்பினர் இணைந்து, சுட்டிகளுக்கான  க்ராஃப்ட் பயிற்சி முகாம் நடத்தினர். இதில், க்ராஃப்ட் மற்றும் ஹாலோவின் முகமூடி தயாரிக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தாங்களே தயாரித்த ஹாலோவின் முகமூடிகளை அணிந்துகொண்டு, சுட்டிகள் ஜாலியாக நடனம் ஆடியது மனதை அள்ளியது.

பென் டிரைவ் !

 1,600 அடி உயரமான கட்டடத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு கடகடவெனஏறுகிற இந்தோனேஷியாவின் 35 வயது சர்டி (Sardi), அதே வேகத்தில் ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்கிறார்.

இதில் என்ன ஸ்பெஷல்? உலகம் முழுக்க நிறையப் பேர் இந்த வேலையைச் செய்கிறார்களே...   சர்டி, இதை 'ஸ்பைடர்மேன்’ ஆடையில் செய்வதுதான் ஸ்பெஷல். ''செய்யும் வேலையை ரசித்து, வித்தியாசமாகச் செய்தால், களைப்புத் தெரியாது'' என்கிறார் சர்டி. இதனால், இவருக்கு அந்த நாட்டில்... சுட்டி ரசிகர்கள் நிறையப் பேர் உருவாகி இருக்கிறார்கள்.

பென் டிரைவ் !

 பொழுதுபோக்கு பூங்காக்களில் இருக்கும் ரோலர்கோஸ்டர், கனடாவைச் சேர்ந்த நிக் கோத்ரியா (Nick Cottreau) என்ற இளைஞரை மிகவும் ஈர்த்தது. அதன் காரணமாக, தனது படுக்கை அறையில் மினி ரோலர்கோஸ்டரை அமைத்திருக்கிறார்.  அதில் ஆட்களுக்குப் பதிலாக, பந்து மட்டுமே உருண்டோடிச் செல்லும்.  தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களால் இதை வடிவமைத்து இருக்கிறார். இதற்காக சுமார்

பென் டிரைவ் !

2 லட்சம் செலவு செய்திருக்கிறார். ஒரு முனையில் பந்தை உருட்டிவிட்டால்... அது, 7 நிமிடங்கள் பயணம் செய்து மறுமுனையை அடைகிறது.

பென் டிரைவ் !

 பல்வேறு வேலைகளுக்காக, புதுப் புது வடிவங்களில்... தினம் தினம் ரோபோக்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில், மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச்சென்று பத்திரமாகத் திரும்ப அழைத்துவரும் ரோபோவை உருவாக்கியுள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள். இதற்கான சோதனை ஓட்டம், சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் வெற்றிகரமாக நடந்தது. நான்கு சக்கரங்களைக்கொண்ட இந்த ரோபோ, பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்துச் சென்று திரும்பியது. இனி, வேறு துறைகளில் சரியாக வேலை செய்யாத ரோபோக்களை, 'நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு’ என்று திட்டுவார்களோ!