Published:Updated:

மை டியர் ஜீபா...

ஓவியம் :ஹாசிப்கான்

மை டியர் ஜீபா...

ஓவியம் :ஹாசிப்கான்

Published:Updated:
##~##

''மை டியர் ஜீபா... குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது சரியா?''

 - என்.கவியரசன், ஈரோடு.

''டார்வின் தனது பரிணாம வளர்ச்சிக் கொள்கை தத்துவத்தில், 'மனிதனும் குரங்குகளும் ஒரே

மை டியர் ஜீபா...

மூதாதையர் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்’ என்று சொல்கிறார். அதாவது... 22 கோடி ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த ஊர்வனவற்றில் இருந்துதான், 'பாலூட்டி’ உருவானது. இவை, அப்போது நிலத்தில் வாழ்ந்த டைனோசர் போன்ற பெரிய விலங்குகளிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும் உணவுக்காகவும் மரங்களில் ஏறி, அங்கேயே தங்கின. அவையே குரங்கின் மூதாதையர்கள். டைனோசர் இனம் அழிய ஆரம்பித்ததும், மரத்திலிருந்த சில பாலூட்டிகள் நிலத்துக்கு வந்து சிம்பன்ஸி, உராங்குட்டான் எனப் பரிணாம வளர்ச்சி அடைந்தன. அதில் ஒரு வகையே, 'ஹோமோசேபியன்ஸ்’ என்ற மனிதனாக மாறியது. எனவே, குரங்கிலிருந்து நேரடியாக மனிதன் உருவாகவில்லை.''

''ஹாய் ஜீபா... கோழிகளின் தாயகம் நமது இந்தியாதான் என்கிறார்களே...''

   - சி.நவீன்குமார், விராலிமலை.

''ஆமாம் நவீன். இந்தியக் காடுகளில் காணப்பட்ட ஒரு சிவப்பு நிறப் பறவை இனம், 'சிவப்புக் காட்டுக் கோழி’ (Red Jungle Fowl). இதை எகிப்து, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு எடுத்துச்சென்றார்கள். சேவலை சண்டைக்காகவும் பெட்டையை முட்டை மற்றும் இறைச்சிக்கும் பயன்படுத்தினார்கள். இப்போது, உலகில் அதிகமாக இருக்கும் பறவை இதுதான். ஆனால், இவை எல்லாம் மனிதனின் வயிற்றுக்குத்தான் போகின்றன.''

மை டியர் ஜீபா...

''ஹலோ ஜீபா... புயல் எப்படி உருவாகிறது?''

   - சின்னராஜா, மயிலாடுதுறை.

''ஓர் அலமாரியில், வரிசையாக உள்ள புத்தகங்களின் இடையில் இருந்து ஒரு தடிமனான புத்தகத்தை எடுத்தால் என்ன நடக்கிறது... அந்த வெற்றிடத்தை நிரப்ப, முன்னால் இருக்கும் புத்தகங்கள் சரியும். அப்படித்தான் நமது பூமியைக் காற்று ஒரு போர்வையாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. சூரியனின் வெப்பம், சில சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காற்றில் அதிகமாகும்போது, அந்தக் காற்று லேசாகி, மேலே சென்றுவிடும். அப்போது ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப, வேறு பகுதியில் இருக்கும் காற்று வேகமாக வரும். இதுதான் புயல். இது வரும் வழியைத்தான் வரைபடத்தில் காட்டி, நமக்கு வானிலை அறிக்கையில் சொல்கிறார்கள்.''

''டியர் ஜீபா... தலைவலி மாத்திரை எப்படி தலை வலியை நீக்குகிறது?''

   - கே.ஹரிதா, புதுச்சேரி.

மை டியர் ஜீபா...

''தலைவலிக்காக, பல நிறுவனங்கள் பல பெயர்களில் மாத்திரைகளைக் கொடுத்தாலும் அவற்றில் இருக்கும் விஷயம் ஒன்றுதான். 1758-ல் எட்வர்ட் ஸ்டோன் என்பவர் வில்லோ மரப்பட்டையில் இருந்து 'சாலிசின்’ என்ற ரசாயனத்தை எடுத்து, மருந்தைத் தயாரித்தார். கசப்பான இந்த மருந்து, ஜுரம் மற்றும் தலைவலியை நீக்கியது. பின்னாளில், இந்த சாலிசின் ரசாயனத்தில் இருந்து 'அஸிடில் சாலிஸிலிக் ஆஸிட்’ என்ற ரசாயனத்தைத் தயாரித்தார்கள். இதுதான், உடனடி நிவாரணத்தை அளிக்கும் இன்றைய தலைவலி மாத்திரைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு விஷயம்... தலைவலி ஏற்பட்டால், முடிந்தவரை ஓய்வின் மூலமே விரட்டப் பாருங்கள். அடிக்கடி தலைவலி மாத்திரையைப்பயன்படுத்துவது உடம்புக்கு நல்லதல்ல.''

மை டியர் ஜீபா...

''டியர் ஜீபா... புகழ்பெற்ற ஆஸ்கர் விருதுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது?''

   - வி.சாய்விஷ்ணு, திருச்செங்கோடு.

''அமெரிக்காவின் பிரபல சினிமா தயாரிப்பாளர் லூயிஸ் பர்ட் மேயர் (Louis Burt Mayer).. இவர் சினிமா துறைக்கு விருது வழங்குவதற்காக, 'அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’ (Academy of Motion Picture Arts and Sciences)என்ற அமைப்பை உருவாக்கினார். சுருக்கமாக 'அகாடமி அவார்ட்ஸ்’. மனித உருவம் கொண்ட சிறிய சிலையை உருவாக்கி, முதல்முறையாக 1929-ல் ஹாலிவுட்டின் ஒரு ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில், 15 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த அமைப்பின் செயலாளர்களில் ஒருவர், 'இந்தச் சிலை எனது மாமா ஆஸ்கர் போலவே இருக்கிறது’ என்று சொன்னார். அந்தப் பெயர் புகழ்பெற்றுவிட்டது. 15 நிமிடங்களில் விருது வழங்கும் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. இன்று உலகமே பார்க்கும் மிகப் பெரிய சினிமா விருது நிகழ்ச்சி இதுதான்.''

மை டியர் ஜீபா...