என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
Published:Updated:

கப்பல் கட்டும் கடலூர்!

கப்பல் கட்டும் கடலூர்!

##~##

டலூரில் சத்தமே இல்லாமல் இயங்குகிறது ஒரு மினி கப்பல் கட்டும் துறைமுகம்!

கடலூரின் பழைய டவுனில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் இடதுபக்கம் திரும்பி 1 கி.மீ. சென்றால் வருகிறது தைக்கால் தோணிதுறை கிராமம். கடல் முகத்துவாரத்தில் இருக்கும் இந்த ஊர் மக்களுக்கு, மீன்பிடித் தொழில்தான் ஆதாரம். மீன்பிடி வேலை இல்லாத நாட்களில் கைகொடுப்பது இந்தத் தோணிகட்டும் தொழில்தான்.

கப்பல் கட்டும் கடலூர்!

தோணி என்றால் உடனே சின்ன விசைப் படகைக் கற்பனை செய்ய வேண்டாம். இங்கே 'தோணி’ என்பது சரக்குகளை மட்டுமே ஏற்றிச்செல்லும் குட்டி சரக்குக் கப்பல்.  இதைக் 'கோட்டியா’ என்றும் அழைக்கின்றனர். இந்தக் கோட்டியா சுமார் 10 டன் வரை சுமந்து செல்லும் திறன்கொண்டது. சாலை மார்க்கமாக லாரியில் கொண்டுசெல்வதைவிட, இந்தக் குட்டி சரக்குக் கப்பல் மூலமாக எடுத்துச் சென்றால் செலவு குறைவாம். சிமென்ட் மூட்டை, உப்பு மூட்டை போன்ற சரக்குகளைக் கொண்டுசெல்லத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது இந்தக் கோட்டியாக்கள். துறைமுகத்துக்குள் வரமுடியாத பெரிய பெரிய சரக்குக் கப்பல்களில் இருந்து சரக்குகளை இந்தக் கோட்டியாக்களில் மாற்றி துறைமுகத்துக்கு எடுத்து வருவார்களாம்.

பெரிய அளவிலான தொழில்நுட்ப வசதிகளோ, இயந்திர உதவிகளோ இல்லாமல் அனுபவத்தைக்கொண்டே கோட்டியாவைத் தயார் செய்கிறார்கள். ஒரு கோட்டியா கட்ட எப்படியும் ஒரு வருடத்தில் இருந்து ஐந்து வருடங்கள் கூட ஆகுமாம். ''கிடைப்பதற்கு அரிதான ஆயில் கோங்கு, இலுப்பை மரங்களைக் கொண்டுதான் கோட்டியா கட்ட முடியும். கட்டி முடித்ததும் இடைவெளிகளில் தேங்காய் மட்டை நாரை இடித்துப் பலப்படுத்தி வார்னிஷ் அடித்துவிட்டால் 30 வருடங்கள்கூட தண்ணியில் மிதந்துகொண்டு இருக்கும்!'' என்கிறார் தச்சர் நாராயணன். மரங்களை மலேசியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்களாம்.  

கப்பல் கட்டும் கடலூர்!

சுமார் 20 அடி உயரம், 50 அடி நீளம்கொண்ட கோட்டியா செய்ய

கப்பல் கட்டும் கடலூர்!

50 லட்சத்தில் இருந்து

கப்பல் கட்டும் கடலூர்!

1 கோடி வரை ஆகும். மரங்கள் சகாயமாகக் கிடைத்து வேலையைச் சீக்கிரமாக முடித்துக் கொடுத்தால் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால், மரங்கள் வரத்து தொடர்ச்சியாக இல்லாததால், இடைவெளிவிட்டு தொழில் செய்யும்போது வாங்கிய வட்டியே கிடைக்கும் சொற்ப லாபத்தை விழுங்கிவிடும். சுமார் 50 குடும்பத்தினர் முழுக்கவே இந்தத் தொழிலை நம்பித்தான் இருக்கிறார்கள்.  

கப்பல் கட்டும் கடலூர்!

இதுவும் கப்பல் மாதிரிதான். சரக்கை ஏற்றிக்கொண்டு கிளம்பினால் கரை இறங்க ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதம்கூட ஆகலாம். பணியாளர்கள், கேப்டன் என ஒரு கப்பலுக்கு உண்டான எல்லா ஏற்பாடுகளும் உண்டு. இந்த குட்டிக் கப்பலின் கேப்டன்.... அனுபவம் உள்ள ஏதாவது ஒரு மீனவர்தான்!''

-நீரை.மகேந்திரன், படங்கள்: எஸ்.தேவராஜன்