Election bannerElection banner
Published:Updated:

90'ஸ் கிட்ஸ் vs 2k கிட்ஸ்..! - ஒரு டீப் ஜாலி கேலி அலசல் #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

பவர் கட்டானால் பக்கத்து வீட்ல எட்டிப்பார்த்து அங்கேயும் இல்லையென்றால் பெட்ரோல் விலை ஏறாதது போன்ற பெரும் திருப்தி ஏற்படும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்றைக்கு இணையத்தில் விஜய் அஜித் சண்டைக்குப் பிறகு அதிகம் அடித்துக்கொள்வது 90-களில் பிறந்தவர்களும், 2000-ல் பிறந்தவர்களுமே. "மாம்ஸ்! மாம்ஸ்"னு சொன்னாலும் மின்னல் மாதிரி அதிக மீம்ஸ் வருவதும் இவங்களை வச்சுதான்.

மவுசு பிடிச்சு விளையாடினது இந்தக் காலம்னா மண்ணு கொழிச்சு விளையாடினது 90-களின் காலம். அனுபவம்தான் அருமையான ஆசான்னு 90-களும், அலம்பாம டெக்னாலஜிதான் தெய்வம்னு இருப்பாங்க 2K கிட்ஸ்.

Social Media
Social Media

Kit-Kat, Lollipop னு சொன்னதும் சாக்லெட்டை நினைத்துக்கொண்டால் 90's kids ஆன்ட்ராய்ட் வெர்சனை நினைத்தால் 2k kids. இப்படியாக இருக்கும் இடைவெளியை அலசிப்பார்த்தால்.

#பச்சப்புள்ளைக

90'ஸ் கிட்ஸ்:

பவர் கட்டானால் பக்கத்து வீட்ல எட்டிப்பார்த்து அங்கேயும் இல்லையென்றால் பெட்ரோல் விலை ஏறாதது போன்ற பெரும் திருப்தி ஏற்படும். கேபிள் டிவியில புதுப்படம் போட்டாலோ, உப்புத்தண்ணி பைப்பில சப்பைத் தண்ணி வந்தாலோ ஓடிப்போய் எல்லோர் கதவையும் தட்டுவர். அம்மா, "நான் மாது வந்திருக்கேங்கிற" ரேஞ்சுக்கு அன்னியோன்னியமா கதவுதட்டி தகவல் சொன்னவங்க. 'வகிடு' எடுத்து வாரி வழித்துச்சீவி, நெத்தியில் திருநீறு வைத்துப்பார்த்தால் மனசுக்குள் ஹானஸ்ட் ராஜ் மாதிரியும், ஆளைப் பார்த்தா ஆனந்தராஜ் மாதிரியும் தெரியுவாங்க 90-களின் தெய்வக் குழந்தைகள்.

2K கிட்ஸ்:

பக்கத்து வீட்டில பவர் இருக்கானு பார்த்துட்டு வா எனச் சொன்னாலே அடப் போமானு சொல்லிட்டு எலக்ட்ரிசிட்டி போர்டுக்கே போன் செய்து நாட்டாமை டு பங்காளி ரேஞ்சுக்கு டீல் செய்வாங்க. பக்கத்து வீட்டுக்கு வாட்ஸ் அப்பிலியே பவர் இருக்கானு சாட் பன்னி டெரர் செய்வாங்க. ஏ.சி ரூம்லதான் ஹேர்கட், பேசியல் செய்வாங்க.

முடிகொட்டுற பிரச்னை வந்ததால எல்லா ஷாம்பும் யூஸ் பன்னிட்டு கடைசியா சீயக்காய் தூளுக்கு மார்க்கெட்டிங் செய்வாங்க. ஸ்பைக் ஹேர், சுடிதார் பேன்ட், கழுத்துல செயின் என ஜிம்பாடியாய் டைட் பனியனுடன் எப்பவும் இரண்டு கையிலும் தம்புல்ஸ் இருப்பது போலவே நடந்துபோவாங்க.

#பொழுதுபோக்கு

90'ஸ் கிட்ஸ்:

90-கள்ல மாலைநேர மண்டல ஒளிபரப்புக்காக மணிக்கணக்கா காத்திருப்பது, மொழியே தெரியலைனாலும் பார்க்கிறதுக்கு கண்ணு இருந்தாபோதும்னு 10 காசு குடுத்து பக்கத்து வீட்டில குஜராத்தி படம் பார்ப்பது, வாடகை சைக்கிள் ஓட்டுவது, இங்கிலாந்து (இன்லேன்ட்) லெட்டர் வாங்கி "பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்"னு கேள்விகேட்டு பதில் அடுத்த கடிதத்தில் அனுப்புனு அலம்புவது, என ராயல் பேக்கரியில் டீ குடிப்பதே ராயல் பேமிலியாய் ஃபீல் பண்ணுவாங்க. ஒரு பெண்ணைத்தான் விரும்பியிருப்பார்கள். அதுவும் முக்கால்வாசி ஃபெயிலியர்தான்.

லவ் பெயிலியரையும், கிட்னி பெயிலியரையும் ஒன்றாகவே நினைத்து சோக பாடல் கேட்டு தாடி வளர்த்தனர் 90's kids.

Old model TV
Old model TV
Pixabay

2k-கிட்ஸ்:

புரட்சி செய்வதை பொழுது போக்காக்கிய பெருமை ட்விட்டரையே சாரும். எல்லாத்துக்கும் கருத்து, எந்த சண்டைக்கும் முட்டுக்கொடுப்பது, 'ஹேஷ்டேக்' போட்டு விரலை வச்சே 'வெற்றிவேல் வீரவேல'னு வேட்டையாடுவது என களேபரம் செய்வர். சினிமாவுக்குப்போவதே விமர்சனம் எழுதி விளையாடுறதுக்குதான். நெட்டை திறந்தால் நேரம் போவதே தெரியாம முங்கி கிடக்கிறது. 'நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்', 'வேர்டு எமோசன்' ( Word Emotion)-னு எமோஜியைக் கூட்டி விளையாடுவோம். கேம்ஸ் விளையாட ஆரம்பிச்சா கேப்விடாம விளையாண்டு 'பேட்டரி லோ' (Battery Low) ஆனால் மட்டுமே கேப் விடுவாங்க.

#பள்ளி வாழ்க்கை

90'ஸ் கிட்ஸ்:

வீட்ல வந்து மத்தியானம் சாப்பிட்டு, கொஞ்சம் சன் மூவிஸ்ல படம் பார்த்திட்டு, ஹாயா மதியம் ஸ்கூலுக்குப் போவாங்க. செய்யது பீடி, நிஜாம் பாக்கு பைகள்தான் அன்று புத்தகப்பை. காலண்டர் அட்டையில கொஞ்சம் வேப்பிழையை சொருகிட்டுப் போய், பரிட்சைப் பேப்பர்ல மாரியம்மன் துணைனு போட்டாலே பாதி பாஸானதுக்கு சமம்.

கெட்டவார்த்தை பேசாமலும், நாகப்பாம்புனு சொன்னால் கூட தப்புத்தாளம் போட்டவங்க, சபரிமலைக்கு மாலை போட்டவர்களை சாமியாவே கும்பிடுவாங்க. பள்ளிக்கூடத்தில் யார் விபூதி கொடுத்தாலும் நெற்றியில் வைத்ததுபோக மீதியை வாயில் போட்டுக்கொண்டு முக்தி அடைந்த எஃபெக்ட் ஆவது.

School Children
School Children
Aman Shrivastava on Unsplash

2K கிட்ஸ்:

காலையில 7 மணி பஸ்ஸுக்கு 6 மணிக்கு எழுந்திருச்சு.. அப்படியே பஸ்ல பந்தாவா போவோம். எல்லா பட லிங்கையும் வாங்கி பார்த்துட்டு விமர்சனம் போட்டால்தான் வருங்கால சமூகத்துக்கு விதை போட்டது மாதிரி.

பவர் க்ளாஸையே கூலிங் க்ளாஸ் மாதிரி போட்டுக் கொள்வது. ஆறு வயசு பையனுக்கு டபுள் எக்ஸ். எல் சட்டை எடுப்பது.

பள்ளிக் கூடத்துக்கு சேர இன்டர்வியூக்கு படிச்சிட்டு போய் பரீட்சை எழுதற நீங்க எங்க "முழங்கையைத் தலைக்கு மேல தொட்டு அட்மிசன் சேர்கிற நாங்க எங்க" இரண்டாவது நாளிலேயே ஹாஸ்டலுக்கு அட்மிசன் போடுவீங்க. பரிட்சை லீவுக்கு பாட்டிய பார்த்த காலம் போய் அப்பா அம்மாவையே ஸ்டடி லீவுலதான் விசிட் அடிக்கிறீங்க மக்கா.

#சினிமா

*90'ஸ் கிட்ஸ்

பிடிச்ச நடிகரோட பேரை பைக்கில் எழுதுவதுக்கு முன்னோடியே நாங்கதான். சைக்கிள் செயின் மக்கேடுல 'குணா', 'தளபதி', "மகாநதி'னு எழுதினவங்கதான் 90's kids. ஆடி வெள்ளி படத்துக்கு தலைக்கு குளிச்சிட்டு போறது, 'அரண்மனைக்கிளி' படத்துக்கு அரைக்கிலோ ஈரல் எடுத்துட்டுப் போய் இடைவேளையில் எடுத்து சாப்பிடுவது, பங்க் வைக்கிறது, பாண்டியன் படத்தைப் பார்த்து சட்டையில் ரைட் போடுவது, கரகாட்டக்காரன் படத்துக்கு ராமராஜன் சட்டைபோட்டு போவது...

என இப்பிடி சினிமாவையே கரைச்சு குடிச்சு அந்த கேரக்டராகவே வாழ்ந்துட்டு வந்தோம். 100 நாள் படம் ஓடினால் இரண்டாம் முறை மறு எழவுக்கு போவது மாதிரி மறுபடியும் போவது. ரஜினி - கமல் மன்றத்தில் இணைந்து நற்பணி செய்வது எனச் சமூக சேவையில் சமுத்திரகனியாய் இருந்த காலம்.

Village children
Village children
Yulia Agnis on Unsplash

*2k கிட்ஸ்

வெள்ளிக்கிழமை எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டு வருதோ இல்லயோ புதுப்படம் வந்திடுது. இரண்டு நடிகர்களின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருதுனா உலகளவில் டிரெண்ட் ஆக்காம ஓயமாட்டாங்க. அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் என உலகப் படத்தையெல்லாம் பார்த்துட்டு அடுத்து என்னனு கேட்டுப் போவாங்க. நம்ம படம் நல்லாயில்லனா துவன்டு விடாம எதிர் ரசிகரை வம்புக்கு இழுப்பதை வாலன்டியரா வச்சு செய்வாங்க. படம் ஓடுவதைவிட படம் முதல் நாள் வசூல்தான் முக்கியம் பாஸ்.

#பிரம்மிப்பு

காதலியின் கையை முதல்முறை தொட்டுப்பார்ப்பது போல இருக்கும்... அம்பாசிடர் காரை முதலில் தடவிப்பார்ப்பது. கார் ஊருக்குள்ள வரும்போதெல்லாம் அதைத் தொரத்திக்கிட்டே அரைகிலோ மீட்டர் ஓடினால்தான் ட்ரைவர் ஆன திருப்தி வரும். பேலன்ஸ் வீல் இல்லாமல் சைக்கிளில் குரங்குப்பெடல் ஓட்டுவது, டிவிஎஸ்ஸில் ஹாரன் அடிப்பது, போன் ரிசீவரை முதன்முதலில் தலைகீழாய் காதில் வைத்தது, ஹோட்டலில் வாங்கி சாப்பிட தவமிருப்பது என பிரம்மிப்போட நகர்ந்த நாள்களின் ருசியை அறியாதவங்கதான் 90-களை கிண்டல் செய்வாங்க.

School Children
School Children
Yannis H on Unsplash

பங்களா வீட்டை பார்த்தால் பவ்யமாய் நடப்பது, பேய்க் கதை கேட்டு 12 மணிக்கு பேய் வருகை எதிர்பார்ப்பது, இங்க்லீஸ் பேப்பர் படிப்பவனை இமயமலையிலிருந்து வந்தவனைப் போல பிரம்மிப்பாய் பார்த்ததெல்லாம் சுகமோ சுகம்.

2k கிட்ஸ்

புதுமாடல் போனை இ.எம்.ஐ-யில் வாங்கினால்தான் ஷங்கர் படம் பார்த்த பிரம்மிப்பு. ராயல் என்பீல்ட் ரவுன்ட் கேட்பது, கூலரை கடன் வாங்குவது, ஆயிரம் லைக் வருமான்னு பார்த்துட்டு வரலைனா அம்பது பேருக்கு அதை டேக் செய்வது, ஒண்ணுமே இல்லனா ஓப்பன் பன்ன you tube channel இருக்கவே இருக்கு என எங்களுக்கும் பிரம்மிப்பு உள்ளது.

#பெண்கள்

காபி ஷாப் இல்லாத காலத்திலயும் டைப் ரைட்டிங் இன்ஸ்ட்டியூட்தான் காதலை சொல்ல ஏற்ற இடம். "இந்தச் செருப்பு மண் மீது இருக்க வேண்டிவை அல்ல உன் கன்னத்தின் மீதும்னு" விருப்பமில்லாத காதலைச் சொன்னவனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மகளிர்.

ஃபேசியலே அறிமுகமாகாதபோது இயற்கை வைத்தியத்தில முகத்தை சர்வீஸ் விட்ட பைக் மாதிரி பொலிவா வச்சிருப்பாங்க. வி நெக் மிடி, நதியா வளையல், கனகா பாசினு மருதாணி வச்சு டோட்டலா கத்துக்கிட்ட மொத்த வித்தையிலும் வெரைட்டி காமிப்பாங்க. லேடீஸ் பைக் வாங்கினதன் முந்தைய வெர்சன்தான் பார் கம்பி இல்லாத லேடீஸ் சைக்கிள். என்னதான் 45 ரூபாய் ஜிமிக்கி போட்டாலும் அந்தக் காலத்து கல்வெச்ச மொட்டு கம்மல்தான் ஃபேமஸ்.

Tik Tok
Tik Tok
Kon Karampelas on Unsplash

2k கிட்ஸ்

ரே‌ஷன் கார்டில் பேர் இல்லைனாலும் பரவால்ல. இன்ஸ்டாகிராமில் அக்கவுன்ட் இல்லைனா மனசு ரணமாயிடும். டிக்டாக் செய்யலைனா இ.எம்.ஐ கட்ட பணமில்லாதது மாதிரி ஏக்கம் வந்திடும்.

காஸ்ட்லி மொபைலை கையில் எடுத்துச் செல்வது ஒரு கெத்துதான். ஃப்ரீ ஹேர் விட்டுட்டு ப்ரீயா போகணும். லிஸ்பா பைக்கில் கலர் ஹெல்மெட் போட்டு வந்து இறங்குவது மாஸ். என்னதான் இருந்தாலும் யாரையும் அடிக்கடி அண்ணானு கூப்பிடாத அந்த மனசு இருக்கே அதான் க்ளாஸ்.

90'கிட்ஸ் காரங்க, 2k கிட்ஸ் வாழ்வை அனுபவிக்கிறாங்க பட்சே 2k கிட்ஸ் காரங்க ஒரு நாளும் 90-களின் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு