Published:Updated:

புதிரோடு விளையாடு!

அருணா எஸ்.சண்முகம், ஓவியம்: பிள்ளை

பிரீமியம் ஸ்டோரி
##~##

 1. பூக்கள் எத்தனை?

மூக நல ஆர்வலர் ஒருவர், பக்கத்து ஊரில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமத்துக்குக் கிளம்பினார். ''நாம போறது குழந்தைகள் தின விழாவுக்கு. அங்கே 150 குழந்தைகள் இருக்காங்க. ஒரே கலரில் 150 ரோஜாப் பூக்களை வாங்கி வா'' என்றார் உதவியாளரிடம்.

சிறிது நேரத்தில் பூக்களுடன் வந்த உதவியாளர், ''ஐயா, ஒரே கலரில் கிடைக்கலை. நான்கு விதமாக வாங்கினேன். நீங்கதான் கணக்கு ஆசிரியரா இருந்தவராச்சே. நான் சொல்றதைவெச்சு எந்த எந்த கலரில் எத்தனை பூக்கள் இருக்குனு சொல்லுங்க'' என்று, பட்டியல் கொடுத்தார்.

ரோஸ் நிறப் பூக்களை 7-ஆல் வகுத்தால், மீதம் ஒன்று வரும். சிவப்பு ரோஜாக்களை 8-ஆல் வகுத்தால், மீதம் 2 வரும். மஞ்சள் ரோஜாக்களை 9-ஆல் வகுத்தால், மீதம் 3 வரும். வெள்ளை ரோஜாக்களை 4-ஆல் வகுத்தால், மீதம் வராது. ஆக மொத்தம் 150 பூக்கள்'' என்றார்.

புதிரோடு விளையாடு!

நீங்களும் கணக்கில் கில்லிதானே... எந்த எந்த வண்ணத்தில் எத்தனை பூக்கள் எனச் சொல்லுங்க பார்ப்போம்!

2. தமிழ்க் கணக்கு!

மிழ்ப் பாடத்தை நடத்தி முடித்த ஆசிரியர், ''நாளை நமது பள்ளியில் நடக்கும் மரம் நடு விழாவுக்கு நீங்கள் 30 மரக்கன்றுகளைக் கொண்டுவர வேண்டும். அதைத் தமிழும் கணக்கும் கலந்த புதிரில் சொல்கிறேன். கண்டுபிடிச்சு சரியாகக் கொண்டுவாங்க'' என்றவர், தமிழ்க் கணக்குப் புதிரைச் சொன்னார்.

A. திருக்குறளின் அறத்துப் பால் மற்றும் காமத்துப்பால் பாடல்களைக் கூட்டி, நாயன்மார்களின் எண்ணிக்கையால் வகுத்து, வரும் எண்ணிக்கையில் மா மரக்கன்றுகளைக் கொண்டுவர வேண்டும்.

B. ஆய கலைகளை ஆழ்வார்களால் வகுத்து, வேதங்களின் எண்ணிக்கையில் அதைக் கூட்டி, விடையாக வரும் எண்ணிக்கையில் வாழைக் கன்றுகளை எடுத்துவர வேண்டும்.

C. மிச்சத்துக்கு தென்னங் கன்றுகளைக் கொண்டுவர வேண்டும்.

புதிரோடு விளையாடு!

இப்படிச் சொல்லிவிட்டுக் கிளம்பினார், அந்தத் தமிழ் (கணக்கு) ஆசிரியர். நண்பர்களுக்கு நீங்க உதவுங்களேன்!

3. அழகே... அழகே!

ழகுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, தாங்கள் தயாரிக்கும் பொருட்களின்  விளம்பரத்துக்காக, கடை வீதியில் வருகிறவர்களிடம் பேசி, அதைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. அப்போது, வயதாகியும் முகச் சுருக்கம் இல்லாமல், இளமையாகத் தெரிந்த ஒரு பெண்மணியைக் கண்டார்கள். அவரிடம், ''உங்கள்

புதிரோடு விளையாடு!

இளமையின் ரகசியத்தைச் சொல்லுங்கள்'' என்றார்கள்.

அந்தப் பெண்மணி அழகு சாதனங்கள் எதையும் உபயோகிப்பது இல்லை. மஞ்சள், பயத்தம் பருப்பு மாவு என இயற்கையாகக் கிடைப்பதையே பயன்படுத்துபவர். ஆனால், இதைச் சொன்னால் தொலைக்காட்சியில் தன் முகத்தைக் காட்ட மாட்டார்கள். அவருக்கோ, 'தொலைக்காட்சியில் தனது முகம் தெரிய வேண்டும்’ என்று ஆசை. அதனால், தந்திரமாகவும் குசும்பாகவும் ஒரு பதிலைச் சொன்னார். அவர்களைத் திகைக்கவைத்து, அந்த ஒளிபரப்பில் இடம்பெற்றார். அந்தப் பெண் என்ன சொல்லி இருப்பார்?

4. காவலுக்குக் கெட்டிக்காரன்!

னியார் நிறுவனம் ஒன்று, 'ஊர்க் காவல் படை’ என்ற அமைப்பை நிறுவியது. ''இந்த அமைப்பில் சேர உடல் திறமை, வலிமை மட்டும் போதாது. எந்த ஒரு சூழ்நிலையையும் கையாளும் சமயோசிதப் புத்தி அவசியம்'' என்று அறிவித்தது.

புதிரோடு விளையாடு!

நேர்முகப் போட்டிக்குச் சென்ற சேது, ''எங்கள் குடும்பமே இந்த தேசத்துக்காக உழைத்தது. என் அப்பா ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, என் தாத்தா இந்திய ராணுவத்தில் இருந்தார். அதற்கான சான்றிதழ்கள் இதோ. உயரக் குறைவு காரணமாக என்னால் ராணுவத்தில் சேர முடியவில்லை'' என்றான்.

''நல்லது. இப்போது உன் சமயோசிதப் புத்திக்கு ஒரு டெஸ்ட். இந்த அறையில் இருக்கும், 70 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பொருளைக் காட்ட முடியுமா?'' என்று கேட்டார் அதிகாரி.

அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான் சேது. அங்கிருந்த எல்லாமே நவீனமாக இருந்தன. சட்டென முகம் மலர்ந்து, அவன் எடுத்துக்கொடுத்ததைக் கண்ட அதிகாரி, ''சபாஷ், உனக்கு நிச்சயம் வேலை உண்டு'' என்றார்.

சேது, அப்படி எதைக் காட்டி இருப்பான்?

விடைகள்:

1. ரோஸ் நிற ரோஜாக்கள் 50, சிவப்பு 50,

மஞ்சள் 30, வெள்ளை 20, மொத்தம் 150 ரோஜாக்கள்.

2. A. அறத்துப்பால் 380 + காமத்துப்பால் பாடல்கள் 250 = 630.

  நாயன்மார்கள் எண்ணிக்கை 63, வகுத்தால் வருவது, 10 மாமரக் கன்றுகள்.        

B. ஆயகலைகள் 64, ஆழ்வார்கள் 12, வகுத்தால் மீதம் 4.

  வேதங்கள் 4. எனவே, 4 4 = 8 வாழைக்கன்றுகள்.  

C. மொத்தம் நட வேண்டியது 30 மரக்கன்றுகள்.

    மா + வாழை (10 + 8) = 18                              

    மீதம் உள்ளவை 12 தென்னங் கன்றுகள்.

3. அந்தப் பெண் சொன்ன பதில்: ''உங்கள் அழகு சாதனம், கடைக்கு வரும் வரை எனக்குப் பொறுமை கிடையாது. அதனால், நீங்கள் எதையெல்லாம் அதில் சேர்ப்பீர்கள் எனத் தெரிந்துகொண்டு, அந்த மூலப் பொருட்களை நானும் உபயோகிக்கிறேன்.''

4. சேது, கையில் இருந்த அவனுடைய தாத்தா, அப்பாவின் சான்றிதழ்களைக் காட்டினான்.    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு