Published:Updated:

ஏன் இப்படி?

அறிவியல் விந்தைகள்!பாலாஜி சம்பத், படங்கள்: பா.கார்த்திக்

பிரீமியம் ஸ்டோரி
##~##

உலகின் மாற்றங்கள் பற்றிய விஷயங்களைப் புரிந்துகொள்ள உதவுவது அறிவியல். புதிய வடிவங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத்தருவது அறிவியல் மட்டுமே.

மின்சாரம் செப்புக் கம்பியின் வழியே செல்லும்போது, காந்தப் புலம் உருவாகும் என்பதை அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் கண்டுபிடித்தார். அதனை ஒரு சோதனை மூலம் அறிவோம்.

தேவை: பெரிய பேட்டரி - 1, செப்புக் கம்பி - 20 சென்டிமீட்டர், சேஃப்ட்டி பின் - 2, ரப்பர் பேண்ட் - 2, வட்டமான காந்தம் - 1.

செய்முறை: முதலில், பேட்டரியின் இரு முனைகளிலும் இரண்டு சேஃப்ட்டி பின்களை வைத்து, ரப்பர் பேண்டால் இணைக்கவும்.

அடுத்து, செப்புக் கம்பியை ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு வட்டமாகச் சுற்றவும். கம்பியின் இரு முனைகளும் நேராக இருக்கும்படிச் செய்யவும். காந்தத்தை பேட்டரியின் நடுப் பகுதியில் வைக்கவும். அதை இன்னொரு ரப்பர் பேண்டால், கீழே விழாமல் பிணைக்கவும்.

அடுத்து, கம்பியின் இரு முனைகளையும் தீட்டிக்கொண்டு, சேஃப்ட்டி பின்னின் இரு துளைகளிலும் நுழைக்கவும். அப்போது, கம்பி வேகமாகச் சுழல்வதைக் காணலாம். இது ஏன்?

ஏன் இப்படி?

கம்பியின் வழியே மின்சாரம் பாய்வதால், காந்தப்புலம் உருவாகிறது. அது, கீழே இருக்கும் காந்தத்தில் உள்ள காந்தப்புலத்தின் காரணமாகச் சுற்றுகிறது.

மாடல்: கு.சந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு