Published:Updated:

எந்தெந்த துறையில் எவ்வளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...?

எந்தெந்த துறையில் எவ்வளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...?

எந்தெந்த துறையில் எவ்வளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...?

எந்தெந்த துறையில் எவ்வளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...?

எந்தெந்த துறையில் எவ்வளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...?

Published:Updated:
எந்தெந்த துறையில் எவ்வளவு குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள்...?

ன்று ஏடு தூக்கும் சிறுவர்கள் நாளை நாடு காக்கும் தலைவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அதில் பல சிறுவர்கள் ஏட்டைச் சுமப்பதற்குப் பதில் தலையில் ஓடுகளைச் சுமக்கிறார்கள். இன்னும் சிலரோ தீக்குச்சி அடுக்குவதும், பட்டாசு செய்வதும், பீடி சுருட்டுவதும், பாலிஷ் போடுவதும்,  ஹோட்டல்கள் மற்றும் கடைகளில் வேலை செய்வதுமாய் இருக்கிறார்கள். இதுதவிர, இன்னும் பிற மாநிலங்களில் வைரக்கல் மெருகூட்டுதல், சிலேட்டுக் குச்சிகள், கண்ணாடி வளையல்கள் தயாரித்தல் எனப் பல தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இப்படிக் குழந்தைத் தொழிலாளர்கள் மாநிலத்துக்கு மாநிலம், நாட்டுக்கு நாடு வேறுபட்டு இருந்தாலும், தேசிய அளவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பணியமர்த்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படவில்லை என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.
2011-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 10 - 19 வயதுடையோர் இந்தியாவில் 25 கோடி பேர் உள்ளனர். இவர்களில் 15 முதல் 25 வயதுவரை உள்ளவர்கள், விவசாயப் பணிகளில் 18 சதவிகிதமும் விவசாயக் கூலிகளாக 48 சதவிகிதமும் உள்ளனர். 15 வயதிலிருந்து 18 வயதுவரை உள்ள சுமார் 75 சதவிகிதக் குழந்தைகள்தான் உழைப்புச் சந்தையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  மேற்சொன்ன பல தொழில்களில் இவர்கள்தான் அதிகமாக ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளிகள் கணிசமாகக் குறைந்திருக்கிறார்கள் என்றபோதிலும், முழுநேர தொழில் செய்தவர்கள் பகுதிநேர தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்திதான்.

குடும்ப வறுமை, இருபது ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உலகமயமாதல், ஏற்றத்தாழ்வு முதலியவற்றால்தான் குழந்தைகள், தொழிலாளர்களாக மாறுகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். ஆனால், குடும்பத்தில் ஏற்படும் அதிக வறுமையினால்தான் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைவினால் நோய்வாய்ப்படுகிறார்கள்; கல்வியைத் துறக்கிறார்கள்; குழந்தைத் தொழிலாளி ஆகிறார்கள்; வேலைச் சந்தைக்குக் கடத்தப்படுகிறார்கள்; சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்; இடம்விட்டு இடம்பெயர்கிறார்கள். இவற்றை மையப்படுத்தி உடல்ரீதியான பாதிப்பு, உளவியல் அல்லது மனரீதியான பாதிப்பு, உணர்வு மற்றும் சமூகரீதியான பாதிப்பு ஆகியன குழந்தைத் தொழிலாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளாகக் குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பு நிறுவனமான யுனிசெப் வெளியிட்டுள்ளது.

இன்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்புத் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  '' 'குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலம்’ என்ற நிலையை  தமிழகம் எய்திட  நம் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோர், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிலையில், குழந்தைத் தொழிலாளி உருவாவது குறித்தும் அதை ஒழிப்பதற்கான காரணம் குறித்தும் குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர் அ.தேவநேயனிடம் பேசினோம். “பெரியவர்களின் உழைப்பைவிடக் குழந்தைகளின் உழைப்பை எளிதாகப் பெற முடிகிறது. குழந்தைகளின் உழைப்பு அதிகமாகச் சுரண்டப்படுவதுடன் அவர்களுக்கான ஊதியம் குறைவாக வழங்கப்படுகிறது. நிறுவனங்களில்வைத்து வேலை வாங்குவதைவிடக் குழந்தைகளை வீட்டிலேயேவைத்து வேலை வாங்குகின்றனர். விடுமுறை, இன்சூரன்ஸ், மெடிக்கல் போன்றவை கிடைப்பதில்லை. தொழிலாளர் சட்டத்தை மீறிச் செயல்படுதல் போன்றவை குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன'' என்றவர், தொடர்ந்து குழந்தைத் தொழிலாளிகளை ஒழிக்கவும் வழிவகை சொன்னார்.

“குடும்பத்தில் பெற்றோர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான இருப்பிடத்திலும், வாழ்வாதாரத்திலும் அரசு பங்குகொள்ள வேண்டும். வறுமை, வறட்சி, இடம் மாறுதல் போன்றவற்றில் ஏற்படும் சூழ்நிலையை அரசு சரி செய்ய வேண்டும். 18 வயதுவரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாகக் கட்டாய சமகல்வி வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு அருகாமையிலேயே இருக்க வேண்டும். கல்வியைச் செலவு என்று பார்க்கக் கூடாது. நாட்டின் ஆளுமைக்குக் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண்டும். தேசியக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். குழந்தைத் தொழிலாளிகள் குறித்த விழிப்பு உணர்வு விரிவுப்படுத்தப்பட வேண்டும்'' என்றார் அவர்.

குழந்தைத் தொழிலாளர் என்பது நாட்டுக்கு அவமானம்.