Published:Updated:

புதிரோடு விளையாடு !

அருணா எஸ்.சண்முகம் படங்கள் : ராம்கி

புதிரோடு விளையாடு !

அருணா எஸ்.சண்முகம் படங்கள் : ராம்கி

Published:Updated:

 1. அடுக்கு மாடியும் கடை வீதியும்!

##~##
A. அது, 20 வீடுகள்கொண்ட 5 அடுக்கு மாடி. ஒவ்வொரு மாடியிலும் நான்கு வீடுகள். அவற்றுக்கு 1 முதல் 20 வரை வரிசையாக எண்கள் உள்ளன. எனில், இதில் 1 என்ற எண் எத்தனை முறை வரும்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

B. ஒரு கடை வீதி. அங்கு மொத்தம் 30 கடைகள். அவற்றுக்கு 1 முதல் 30 வரை வரிசையாக எண்கள் உள்ளன. எனில், இதில் 2 என்ற எண் எத்தனை முறை இடம்பெறும்?

புதிரோடு விளையாடு !

 2. அடடா... என்ன சிறப்பு!

ரஞ்சனின் அப்பா, வேடிக்கையான புதிர்கள் போடுவதில் வல்லவர். அவர் ஒரு மலையாளி. ரஞ்சனின் அம்மா தமிழர், ஒருநாள் சாப்பாட்டு நேரத்தில், ரஞ்சனிடம் குறும்பாக ஒரு புதிர் போட்டார். ''இந்த SIR- க்கு இல்லாத சிறப்பை உன் அம்மாவான MADAM பெறுகிறார். அம்மாவின் தமிழுக்கு இல்லாத சிறப்பை என் MALAYALAM  பெறுகிறது. எந்த வகையில்?'' என்று கேட்டார்.

ரஞ்சன் யோசித்தான். நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்.

புதிரோடு விளையாடு !

 3. வயதைக் கண்டுபிடி!

வாக்காளர் பெயரைச் சரிபார்க்க வந்த அலுவலர், ''உங்கள் வீட்டில் எத்தனை பேர்? வயது என்ன?'' என்று கேட்டார். ''நானும் என் அப்பாவும். என் பெயர் சீதா. என் அப்பா பெயர் கோவிந்தன். எங்கள் வயதைப் புதிராகச் சொல்கிறேன். இரண்டு இலக்க எண்தான் என் வயது. இரண்டும் ஒரே எண். இரண்டும் கூடினால், 'நதி’. என் முதல் எண்ணை, இரண்டாலும் அடுத்த எண்ணை, மூன்றாலும் பெருக்கி, அதைச் சேர்த்து எழுதினால், அப்பாவின் வயது'' என்றார். அலுவலர் வயதைக் கண்டுபிடித்துவிட்டார். நீங்கள்?

புதிரோடு விளையாடு !

 4. எத்தனை நாட்கள்?

கிராமத்திலிருந்து தனது பேத்திகளான மாலினி, தாரிணியைப் பார்க்க வந்தார் பாட்டி. அவரிடம் ஏதாவது புதிர் சொல்லும்படிக் கேட்டார்கள் பேத்திகள்.

''கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பதில் சொல்லணும் கண்ணுகளா! வாரத்துக்கு ஏழு நாட்கள் தெரியும். அதில், 'று’ என்ற எழுத்து இடம்பெறும் நாட்கள் மூன்று. 'ன்’ என்ற எழுத்து இடம்பெறும் நாட்கள் மூன்று. அவை எவை? அது எப்படி?'' என்று கேட்டார்.

பேத்திகள் திகைத்தார்கள். உங்களுக்குத் தெரியுமா?

புதிரோடு விளையாடு !

5. என்ன உடை?

அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா, மறுநாள் நடக்க இருந்தது. அன்று, யார் யார் எந்த விதமான உடையில் வரப்போகிறார்கள் என்பது பற்றிப் பேச்சு வந்தது.

ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு உடை பற்றிச் சொல்ல, ஷங்கர் அமைதியாக இருந்தான். ''உன் டிரெஸ் பற்றி நீ எதுவும் சொல்லவில்லையே'' என்று கேட்டார்கள். ''க்ளூ கொடுக்கிறேன். கண்டுபிடியுங்கள். முதல் மூன்று எழுத்துகள் சுமையைக் குறிக்கும். அடுத்த இரண்டு எழுத்துகள் குதிரையைக் குறிக்கும்'' என்றான்.

அது என்ன உடை?

புதிரோடு விளையாடு !
புதிரோடு விளையாடு !