Published:Updated:

“பிரைலி திருமண அழைப்பிதழ்...காதல் திருமணம்” - அசத்திய தம்பதி

“பிரைலி திருமண அழைப்பிதழ்...காதல் திருமணம்” - அசத்திய தம்பதி

“பிரைலி திருமண அழைப்பிதழ்...காதல் திருமணம்” - அசத்திய தம்பதி

“பிரைலி திருமண அழைப்பிதழ்...காதல் திருமணம்” - அசத்திய தம்பதி

“பிரைலி திருமண அழைப்பிதழ்...காதல் திருமணம்” - அசத்திய தம்பதி

Published:Updated:
“பிரைலி திருமண அழைப்பிதழ்...காதல் திருமணம்” - அசத்திய தம்பதி

ங்களது வித்தியாசமான திருமண அழைப்பிதழ் வழியே அனைவரையும் நெகிழவைத்திருக்கிறார்கள் முத்துச்செல்வி - பாண்டியராஜ். பார்வையற்ற இந்தத் தம்பதிகள் மனம் முழுவதும் நிறைந்திருக்கும் நம்பிக்கை ஒளியால் இந்த உலகத்தை தங்களுக்குரியதாக மாற்றிக்கொண்டுள்ளனர். வங்கிப் பணியோடு சமூகப் பணிகள் மூலமும் இரு உள்ளங்களும் கருத்தொருமித்து காதலில் விழுந்து, இன்று திருமணம் செய்து மணவாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.

முருகன்-பிரேமா தம்பதியருக்கு இரண்டு பெண் மற்றும் ஓர் ஆண் குழந்தை. மூவருமே பார்வையற்றவர்கள். எனினும், மனம் தளராமல் மூவரையும் படிக்கவைத்து நல்ல நிலைக்கு உயர்த்தினார்கள். அவர்களில் மூத்தவர்தான் முத்துச்செல்வி. சட்டம் படித்தவர். தற்போது சென்னை தியாகராய நகரில் இயங்கிவரும் அலகாபாத் வங்கியின் மண்டல அலுவலகத்தில் மேலாளராக உள்ளார். அகில இந்திய பார்வையற்றோர் கூட்டமைப்பிலும் செயலாளர். பார்வையற்றோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். பார்வையற்ற வளர் இளம் பெண்களுக்குப் பாலியல் பாதுகாப்புக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார். 

இலக்கியப் புத்தகங்கள், நாவல்கள், கதைப் புத்தகங்கள், சுட்டி விகடன் உள்ளிட்ட தமிழின் பல பிரபல பத்திரிகைகளை பிரெய்லி மொழியில் அச்சிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள பார்வையற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவதிலும் பெரும் பங்காற்றிவருகிறார். பார்வையற்றோர் கணினியில் தங்களது திறனை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான பயிற்சிகளையும் தனது அமைப்பின் வழியாகச் செய்துவருகிறார். இப்படி இவரது சமூகப் பணிகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று (14.06.2017) மணவாழ்க்கையில் இணையும் முத்துச்செல்வி, தனது திருமண அழைப்பிதழைப் பார்வையுள்ளோர் மற்றும் பார்வையற்றோர் இருவருமே படிக்கும்வகையில் டூ இன் ஒன் பத்திரிகையாக அச்சிட்டுள்ளார். இது பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. இவரின் மனம் கவர்ந்தவர் பாண்டியராஜ், சென்னை அம்பத்தூர் இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். 'அந்தகக்கவிப் பேரவை' என்ற இலக்கிய அமைப்பின் உறுப்பினர். பார்வையற்றோர் திறன் மேம்பாட்டுக்காகப் பல வகையிலும் சமூகப் பணிகளைச் செய்பவர். 

உறவுகளும் நண்பர்களும் புடைசூழ திருமணம் முடிந்த உற்சாகத்தில் முத்துச்செல்வி. ‘‘பார்வையற்றவர்களின் உணர்வுகளையும் வாழ்க்கை முறைகளையும் எல்லோரும் புரிஞ்சுக்கணும்.பார்வைக் குறைபாடு உள்ள ஒரு பொண்ணுக்கு அவ மனசுக்குப் பிடிச்ச மாதிரி திருமணம் நடக்கிறது பெரிய விஷயம். அவங்க மனசுல தன்னம்பிக்கை துளிர்விடணும், பார்வை உள்ளவர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புஉணர்வு ஏற்படணும் என்கிற நோக்கத்தில் எங்களின் திருமண அழைப்பிதழை இப்படி அச்சிட்டோம். என் தங்கை மற்றும் தம்பிக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிடுச்சு. அவங்க பார்வையுள்ள இணையைத் திருமணம் செய்துக்கிட்டாங்க. ஆனா, நான் என்னை மாதிரியே பார்வையற்ற, என் மனசைப் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தரைத்தான் திருமணம் செய்துக்கணும்னு உறுதியா இருந்தேன். 

அந்தச் சமயத்தில் ஒரு நண்பராக பாண்டியராஜன் அறிமுகமானார். அவரும் பார்வையற்றவர்களின் மேம்பாட்டுக்காக நிறைய விஷயங்கள் பண்ணிட்டிருந்தார். நான் பயிற்சிப் பட்டறைகள் நடத்தினப்போ உதவியா இருந்தார். நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். நாம வாழ்க்கையிலும் இணைந்தால் இன்னும் சிறப்பா செயல்படலாமேனு சொன்னார். அவரது வார்த்தைகள் எனக்குப் பெரிய நம்பிக்கை கொடுத்துச்சு. எங்கள் காதலை பெற்றோரிடம் சொன்னோம். இதோ, இன்னிக்கு மண மேடை ஏறியிருக்கோம். இனி சமூகப் பணிகளில் இணைந்து பயணிப்போம்'' என்றார் முத்துச்செல்வி.

இந்தத் தம்பதிகளை மனதார வாழ்த்துவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism