Published:Updated:

கலாசாரம் கசக்குதய்யா...

கலாசாரம் கசக்குதய்யா...

கலாசாரம் கசக்குதய்யா...

கலாசாரம் கசக்குதய்யா...

Published:Updated:
##~##

''எங்களிடம் வரும் புகார் பெரும்பாலானவை கலாசாரம் சார்ந்தவைதான். பெண்களுக்குத் தரப்பட்டுள்ள அதிகப்படியான பொருளாதாரச் சுதந்திரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் வம்புகளே இந்த வழக்குகள். அதுவும் ஐ.டி. கம்பெனி பெண்களின் பப், கிளப் கலாசாரமே பெரும்பாலான பிரச்னைகளுக்கான மையம்'' என்கிறார் மாலதி. சென்னை அண்ணா சாலையில் உள்ள 'மாலதி பெண்கள் துப்பறியும் நிறுவன’த்தின் இயக்குநர். கடந்த 10 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை கையாண்டு இருக் கும் மாலதியைச் சந்தித்தோம்.

கலாசாரம் கசக்குதய்யா...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''இப்படிச் சொல்வதன் மூலம் எல்லாப் பெண்களையும் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதாக நினைக்க வேண்டாம். நகர வாழ்க்கையின் இன்னொரு முகத்தைப் பற்றிப் பேசுகிறேன். அந்தப் பெண்ணைப் பார்த்தால் மகாலட்சுமியேதான். அப்படி ஓர் அம்சம். எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் எங்கள் அலுவலகத்துக்கு வந்தவர், 'என் புருஷன்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கித் தாங்க. அவருக்கு ஜீவனாம்சமா சுளையா 22 லட்ச ரூபாய் கொடுத்துடுறேன்’ என்று சொன்னார். அந்தப் பெண் முன்னணி ஐ.டி. கம்பெனி ஒன்றில் பொறுப்பான பதவியில் இருப்பவர். சின்ன வயதில் மகன் இருக்கிறான். அலுவலக வேலையாக மாதக் கணக்கில் வெளிநாடு சென்றவருக்குக் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுவிட்டது. சென்னை திரும்பியவர், நேராக எங்கள் அலுவலகம் வந்துவிட்டார். 'எப்படியாவது விவாகரத்து வாங்கிக் கொடுங்க’ என்று துடித்தார். 'உங்க புருஷனுக்கு எதுக்கு 22 லட்ச ரூபா கொடுக்குறீங்க?’னு கேட்டதும், 'அவருக்குக் கொஞ்சம் கடன் இருக்கு. அதை அடைச்சுட்டு மீதிப் பணத்தில் ஏதாவது தொழில் செய்து பொழைச்சுக்கட்டும்’னு சொன்னார். அந்தக் கணவருக்கோ, இந்தப் பெண்ணை பிரிய மனம் இல்லை. நிலைமை கை மீறிடுச்சுங்கிறதை உணர்த்தி விவாகரத்துக்குச் சம்மதிக்க வெச்சோம். மகனை புருஷன்கிட்டே கொடுத்துட்டு, கள்ளக் காதலனோடு அந்தப் பெண் வெளிநாடு போயிட்டார்.

கலாசாரம் கசக்குதய்யா...

சமீப காலமாகக் கணவன்-மனைவி இரு தரப்பிலும் சந்தேகப்படுவது அதிகரித்து உள்ளது. குடும்பம் என்கிற கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாகச் சீரழிவதுதான் இதற்கு முக்கியக் காரணம். இது, இப்படி என்றால் வயசுப் பெண்களால் ஏற்படும் பிரச்னை வேறு மாதிரி இருக்கின்றன'' என்பவர் சற்று நிறுத்தி தொடர்கிறார்.

''அவருக்கு 25 வயதுதான் இருக்கும். ஐ.டி. கம்பெனி வேலை. கிட்டத்தட்ட 100 மாப்பிள்ளை வரை பார்த்தும் யாரையும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டார். லேட் நைட்டில் வீட் டுக்கு வருவது, செல்போனில் பேசிக்கொண்டே இருப்பது என மகளின் நடவடிக்கை வீட்டாருக்குச் சந்தேகத்தை வரவழைத்தது. எங்களிடம் வந்தார்கள். அந்தப் பெண்ணை ஃபாலோ பண்ணினால் பேரதிர்ச்சியாக இருந்தது. ஒரு வாலிபருடன் தனியாக ஃப்ளாட்டில் வாடகைக்குத் தங்கி இருந்தார். 'இவர் துணி துவைக்கிறது, சமைக்கிறது, பாத்திரம் கழுவுறதுனு எல்லா வேலையும் செய்வார். நான் நிம்மதியாக ஆபீஸ் போயிட்டு வருவேன். நீங்க பாக்குற மாப்பிள்ளைங்க இந்த வேலைகளை செய்வாங்களா? அதனால் தான் இவரை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்’னு கூலா சொன்னாள். இதைத் தவிர வீட்டுக்குத் தெரியாமல் திருமணமும் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் லிவிங் டு கெதர் கலாசாரமும் நகரத்தில் பரவி வருகிறது.

கலாசாரம் கசக்குதய்யா...

நம் பிள்ளைகளின் உலகத்தைப் புரிந்துகொள்வதும் அவர்கள் தவறான பாதையில் செல்வதற்கு முன்பே அதைக் கண்டுபிடித்து களைவதும் ரொம்ப முக்கியம். இல்லை என்றால் இப்படித்தான் பெரிய அதிர்ச்சியில் சிக்கிக்கொள்ள நேரிடும்'' என எச்சரிக்கிறார் மாலதி!

- சி.சரவணன், படங்கள்: ஜெ.தான்யராஜு