Published:Updated:

என் ஊர்!

விளையாடிய இடத்தில் விமானம்! : மீனம்பாக்கம் சோகப் பக்கம்

##~##

''விமானத்தில் இருந்து இறங்கியதும், யாசர் அராஃபத் தன் மண்ணை முத்தமிட்ட பிறகுதான் நாட்டுக்குள் செல்வாராம். இப்போ அப்படி யாராவது செய்றாங்களானு தெரியலை. தேசத்தை ஒருவன் எப்படி நேசிக்கணும் என்பதற்கு அதுவே மிகச் சிறந்த உதாரணம். சொந்த மண்ணின் பாசம் என்பது ஒவ்வொருவரின் ரத்தத்தில் ஊறிய விஷயம் இல்லையா?'' -  எளிமையாகப் பேசத் தொடங்குகிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ. மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளரான இவரின் தலைமையில்தான் மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு எதிரான போராட்டம் நடந்தது.

 ''நங்கநல்லூர் கிராமமும் இல்லை. நகரமும் இல்லை. இரண்டும் கலந்த கலவை. அப்போது மீனம்பாக்கம், குரோம்பேட்டை இவை நங்கநல்லூருடன் இணைந்தே இருந்தன. இங்கு ஏரி இருந்தது. அது பக்கத்தில் 'ரோஷன் லெதர் கம்பெனி’. அருகில் 'குரோம் லெதர் ஃபேக்டரி’. அந்த கம்பெனியின் பெயரால்தான் அந்த இடத்துக்கு குரோம்பேட்டைனு பெயர் வந்ததாகச் சொல்வார்கள். ரோஷன் லெதர் கம்பெனி இடத்தில்தான் பிற்காலத்தில் ஜெயின் காலேஜ் வந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

மீனம்பாக்கத்தில் உள்ள ஆதி திராவிட நல வாரிய பள்ளியில்தான் எட்டாம் வகுப்பு வரை படிச்சேன். பிறகு ஒன்பதாம் வகுப்புக்காக குரோம்பேட்டை ஸ்கூலுக்குப் போனோம். அந்தச் சமயத்தில் எங்கள் ஆதி திராவிட பள்ளி ஆசிரியர்களின் போராட்டத்தினால் பள்ளியை எஸ்.எஸ்.எல்.சி. வரை தரம் உயர்த்தினார்கள். பிறகு குரோம்பேட்டை பள்ளியில் இருந்து டி.சி. வாங்கி மறுபடியும் ஆதி திராவிட பள்ளியில் சேர்ந்தேன். காரணம், எங்கள் பள்ளியில் அறிவியல் பாடத்தை அவ்வளவு அருமையாக நடத்துவார்கள்.  

என் ஊர்!

பள்ளியில் படிக்கும்போது விளையாடுவதற்கு கிரவுண்ட் எதுவும் கிடையாது. அதனால் எங்கள் பி.இ.டி. மாஸ்டர் மகாலிங்கம், உயரமான பெஞ்சு மேல் ஏறி உட்கார்ந்துகொண்டு ஏகப்பட்ட கதைகள் சொல்வார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். ஊரைப் போன்றே அந்தக் கதைகளும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. மீனம்பாக்கம் ஏர்போர்ட் அப்போது மிகப் பெரிய மைதானமாக இருந்தது. உயரப் பறக்கும் ஒன்றிரண்டு விமானங்களை துரத்தியபடி ஓடிய எம் மக்களின் இடத்தை இன்று பிரமாண்டமான விமானங்கள் ஆக்கிரமித்து நிற்கின்றன.  

இது தலித் மக்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி. மற்றவர்கள் எல்லாம் இடம்பெயர்ந்து இங்கே வந்தவர்கள். சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள். முன்பு, இங்கு விவசாயம்கூட நடந்தது. ஆலந்தூர், பல்லாவரம் சந்தைகளில் எல்லாப் பொருள்களும் கிடைக்கும்.  ஒரு பைசா கொடுத்தால் நாலு கடலை உருண்டையும் கமர்கட்டும் கொடுப்பார்கள்.

ஆடி மாசம் என்றால் ஏழூர் அம்மன் கோயில் திருவிழா விசேஷமாக இருக்கும். சிறு வயதில் அந்தக் கோயில் திருவிழாவில் ரெங்கராட்டினம், லைட் அலங்காரங்களை ஆச்சர்யமாகப் பார்த்தபடி அங்கேயே பொழுதைக் கழிப்போம். வயதும் படிப்பும் ஏற ஏற... கோயில் பக்கம்

என் ஊர்!

போவது நின்றுபோனது. ராஜு என்ற நண்பர்தான் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரக் காரணம். சாராயக் கடைகளை மூடுவது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்துகள் மீது புகார் தருவது, பழவந்தாங்கல் சுரங்கப் பாதைக்காக ரயில் மறியல் என பரபரப்பாக இருந்தோம். திடீர் என வேலைக்காக இரண்டு வருடம் டெல்லி வாழ்க்கைக்குச் சென்றுவிட்டேன். என் ஊரின் பெருமையை உணர்ந்த காலகட்டம் அதுதான். எது எப்படியோ, எல்லாக் களமும் நலமாக இருக்கவேண்டும் என்பதே ஒரு கம்யூனிஸ்ட்டின் விருப்பம். அந்த வகையில் மண்ணும் மனிதனும் நல்லா இருக்கணும்!''

- ந.வினோத்குமார், படங்கள்: உசேன்