Published:Updated:

‘பரிசாகக் கிடைத்த தங்க லிங்கம்!’

சங்கீத சங்கீர்த்தனம்

‘பரிசாகக் கிடைத்த தங்க லிங்கம்!’

சங்கீத சங்கீர்த்தனம்

Published:Updated:
##~##

இஷ்ட தெய்வம்:

''கச்சேரிக்குப் போற இடங்கள்ல, 'நீங்க பாடுறதுல எந்த ராகம் பிடிச்சிருக்கு’னு சிலர் கேட்பாங்க. குறிப்பிட்ட ஒரே ஒரு ராகம் மட்டும்தான்னு இதுக்கு எப்படி பதில் சொல்ல முடியும்? எல்லா ராகங்களும் சிறப்பானவைதான்! அதே மாதிரி இஷ்ட தெய்வம்னு, ஒரே ஒரு  தெய்வத்தை மட்டும் எப்படிச் சொல்றது? எல்லா தெய்வங்களுமே என் இஷ்ட தெய்வங்கள்தான்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குலதெய்வம்:

''கரூர் பக்கத்தில உள்ள தான்தோன்றிமலை ஸ்ரீசீனிவாச பெருமாள். அவர் திருப்பதி வேங்கடாசலபதிக்கே அண்ணா. எங்க வீட்டுல நடக்கிற சுப நிகழ்ச்சிகளுக்கு குலதெய்வத்தையும் வணங்கிட்டு வருவது வழக்கம்.''

தினமும் கடைப்பிடிக்கும் நல்ல பழக்கம்:

''தியானம்! மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் பண்றது, ஆரம்பத்துல கொஞ்சம் சிரமம்தான். கண்களை மூடி அமைதியா உட்கார்ந்தாலே, 'காத்தால பத்து மணிக்கு அங்கே அப்பாயின்ட்மெண்ட்... சாயங்காலம் இங்கே கச்சேரி’னு சிந்தனைகள் ஓடும். அப்பல்லாம் சாய்ராமை நினைத்துக் கொள்வேன். இப்ப நான் சிரத்தையாக தியானம் பண்ண முடியறதுக்குக் காரணமே சாய்ராம்தான்!''

‘பரிசாகக் கிடைத்த தங்க லிங்கம்!’

தம்பதியாக முதலில் சென்ற கோயில்:

''திருப்பதி.''

விரும்பி வாங்கிய விக்கிரகங்கள்:

''ஒன்றா... இரண்டா? சின்ன வயசிலேருந்தே விநாயகர் விக்கிரகங்களை சேகரிக்க ஆரம்பிச்சேன். அதனால இப்போ எங்க வீட்டுல சுமார் ஐந்நூறு பிள்ளையார் இருக்கார். இது அவரோட வீடுங்கற உரிமையில எப்ப வேணாலும் அவர் இங்கே வருவார். வீட்டின் எல்லா இடங்களிலும் அவர் அருள்பாலிப்பது என் பாக்கியம். எல்லா விநாயகரையும் பிடிக்கும். குறிப்பா சொன்னா, கையில் வீணையுடன் விஷ்ணு வடிவமாக விளங்கும் கணபதி, ஊஞ்சல் பிள்ளையார் விநாயகர்களைப் பிடிக்கும்!''

வீட்டில் தினமும் பூஜை செய்யும் முறை:

''சுவாமிக்குத் தினமும் பூ வச்சு, நைவேத்தியம் செய்து, தூபம் காட்டி அஷ்டோத்திரங்கள் சொல்லுவேன். பத்து நிமிட நேரம் பூஜை செய்தாலும் மனதை ஒருமுகப்படுத்திச் செய்தாலே பலன் அதிகம்னு சொல்லுவாங்க. சங்கீத உபாசனை பண்றது சிறப்புனு சொல்வாங்க. அதனால், இதர நேரங்களிலும் ஸ்லோகங்களை சங்கீதமாகவே பாடிட்டிருப்பேன். 'பாக்கியலட்சுமியே பாரம்மா... குறையொன்றுமில்லை...’ என எல்லாப் பாடல்களையும் பூஜையின்போது பாடுவேன்.''

பரிசாகக் கிடைத்த விக்கிரகம்:

''ஒரு முறை சத்குரு ஜக்கி வாசுதேவின்  தியானலிங்கம் கோயில் பிராகாரத்தில மனமுருகி ரெண்டு பாடல்கள்  பாடினேன். அப்ப ஜக்கி வாசுதேவ், எனக்குப் பிரசாதமாக விபூதி இட்ட சின்ன அழகான, தங்க லிங்கம் ஒன்றை தந்தார். அதைப் பொக்கிஷமாக வைத்து வணங்குறேன்.''

‘பரிசாகக் கிடைத்த தங்க லிங்கம்!’

சென்னையில் அடிக்கடி செல்லும் கோயில்:

''ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், மயிலாப்பூர் கச்சேரி ரோட்டில் உள்ள செங்கழுநீர் பிள்ளையார் கோயில். முந்நூறு வருஷத்துக்கு முன்னால திருவாரூர் அருகிலுள்ள செங்கழுநீர் ஓடையிலிருந்து கிடைக்கப் பெற்றவராம் இந்தப் பிள்ளையார். தேர்வுகளைச் சிறப்பாக எழுதவேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் மாணவர்களுக்கு இவரது பரிபூரண அருள் கிடைப்பதால், அங்கே நிறைய குழந்தைகள் வழிபடுவது வழக்கம்.''

மனதில் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம்:

''சாய்ராம்.''

வெளிநாட்டில் பிடித்த கோயில்:

''ஹவாய் தீவில் அழகான சிவாலயம் ஒன்றைப் பார்த்து, பிரமித்தேன். பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது அந்தக் கோயில். அங்கே மரங்களும், பூக்களும், பழங்களுமாகப் பார்க்க ரம்மியமாக இருந்தது. இறைவனை தியானிக்க நான் கண்ணை மூடியதுமே மனதுக்குள் அத்தனை சந்தோஷம் பரவியது. நல்ல வைப்ரேஷன் உள்ள கோயில் அது.''

செல்ல விரும்பும் புண்ணியத் தலம்:

''மானசரோவர்! அங்கே போகணும்னா 14 நாட்கள் தேவைப்படும்னாங்க. எப்போ அதிர்ஷ்டம் வருமோ தெரியல...''

‘பரிசாகக் கிடைத்த தங்க லிங்கம்!’

கூடவே எடுத்துச் செல்லும் தெய்வம்:

''ஆஞ்சநேயர். பெரும்பாலும் நான் பயணத்துலேயே இருக்கிறதால, அவரை கூடவே எடுத்துட்டு போறேன்.''

தமிழகத்தில் பிடித்த கோயில்:

''கூத்தனூர் சரஸ்வதி கோயில். கலை வாணி என் இஷ்ட தெய்வங்களுள் ஒருவர். கச்சேரிகளின்போது நிறைய கலைவாணி விக்கிரகங்கள் பரிசாகக் கிடைத்திருக்கிறது.''

கடைப்பிடிக்கும் விரதம்:

'கிருஷ்ண ஜயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் எல்லா விசேஷ நாட்களிலும் விரதம் இருப்பேன்.''

வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது மனதில் நினைக்கும் தெய்வம்:

'ஒரு கச்சேரியில் எனக்கு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் படம் ஒன்றை வழங்கினார்கள். அதை வீட்டு வரவேற்பறையில் வைத்துள்ளேன். நான் வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போதும், வீட்டுக்குத் திரும்பி வரும்போதும் அவரை வணங்குவேன்.''

பிடித்த மஹான்கள்:

''பாண்டிச்சேரி அன்னை, ஸ்ரீரமணர், புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா. எனக்குப் பெயர் வைத்தது, முதன்முதலில் படிப்பு சொல்லிக் கொடுத்தது எல்லாமே சாய்பாபாதான். இன்னிக்கு நான் உன்னதமான- சந்தோஷமான ஒரு வாழ்க்கை வாழ்கிறேன் என்றால், அது நிச்சயம் பாபாவின் அருளால்தான். அதையெல்லாம் என் பெற்றோர் புகைப்படங் களாக எடுத்து வைத்துள்ளதை, எனது வாழ்க்கையில் கிடைத்த உயர்ந்த பரிசாக எண்ணுகிறேன்!''

- மை.பாரதிராஜா

படங்கள்: சு. குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism