##~##

''போன வருஷம் 40 சிலைகள். இந்த வருஷம் நம்ம டார்க்கெட் 60 சிலைகள். ஆசை நிறைவேற விநாயகர்தான் அருள் புரியணும்'' - கடவுள் சிலைகளை கையெடுத்து கும்பிட்டபடி பேசுகிறார்கள் ராமு-பூங்கா. காஞ்சியில் இருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் உள்ள சிலை கூடத்தில் விநாயகர் சதுர்த்திக்காக பிரமாண்ட சிலைகளை செய்யும் கலைத் தம்பதி.  

''தொழிலுக்கு வந்து எட்டு வருஷமாச்சு. பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் சிலைகள் கடல் மீன்களுக்குக் கெடுதிங்கறதால் அதைத் தடை பண்ணிட்டாங்க. இப்போ பேப்பர் மெஸ் சிலைகளை செய்கிறோம். வீணாப்போன பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படுவதுதான் பேப்பர் மெஸ் சிலைகள். பீங்கான் கம்பெனிகளில் உடைஞ்சு விழும் டேமேஜ் பீஸ்களை கிலோ கணக்கில் வாங்கி அரைச்சு பவுடராக்குவோம். பெரிய சைஸ் நூல் சுற்றிவைக்க உதவும் கூம்பு வடிவ பொருளையும் பவுடராக்குவோம். இதோட மரவள்ளிக் கிழங்கு கூழைச் சேர்த்து, கிடைக்கும் மாவுக் கூழுடன் சிலை பிடிக்க வசதியான பதத்துக்காக முகத்துக்குப் போடுற பவுடரை சேர்ப்போம். இதுக்காகவே பாண்ட்ஸ், கோகுல் சாண்டல் கம்பெனிகளில் வேஸ்ட்டேஜை வாங்கி வருவோம்.

கலை... சிலை... கவலை!

இந்தக் கலவையைக் கை, கால்னு உடல் உறுப்புகளா இருக்கும் அச்சுகளில் போட்டு பூசி காயவைத்து உறுப்புகளை ஒன்றுசேர்த்தால் பளபள வெள்ளை விநாயகர் ரெடி. விநாயகர் சதுர்த்தி முடிஞ்சு

கலை... சிலை... கவலை!

சிலையைக் கடலில் கரைக்கும்போது அது கரைவதும் கரையாம இருக்குறதும் இந்தக் கலவை தயாரிப்பில்தான் இருக்கு. இந்த மாவு தயாரிக்கறதுக்குனு தனியா மெஷின் இருக்கு. அது 30 ஆயிரம் ரூபாய். ஆனால், அந்த மெஷின் வாங்குற அளவுக்கு ஏது பணம்?'' என்கிறார் ராமு.

கற்பக, வரசித்தி, சிவசக்தி, கோமாதா, நத்தீஸ்வர விநாயகர்களோடு சிவன், பார்வதியை தன் இரு கைகளில் ஏந்தியபடி இருக்கும் பார்வதி விநாயகர், முருகனை தாங்கியபடி காட்சி தரும் முருக விநாயகர், ஐயப்பனை அடக்கத்துடன் வைத்து இருக்கும் ஐயப்ப விநாயகர் என விதவிதமாக வரிசை கட்டி நிற்கின்றன விநாயகர் சிலைகள். உடனே பெயின்ட் அடித்தால் சிலைகள் மீது தூசிப் படிந்து சேல்ஸ் பாதிக்கும் என்பதால், சதுர்த்திக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் பெயின்ட் பூசுவார்களாம். உயரத்தைப் பொறுத்து

கலை... சிலை... கவலை!

500 இருந்து

கலை... சிலை... கவலை!

5,000 வரை இவை விற்கப்படுகின்றன.

''பெரிய சிலைகளைப் பாதுகாப்பாவைக்கப் பெரிய இடத்தை வாடகைக்கு எடுத்தால் கட்டுப்படியாகாது. அதனால்தான் இப்படி ரோட்டில் கஷ்டப்படுகிறோம்'' என்கிற ராமு, ''ஆந்திர அரசு எங்களை

மாதிரி பொம்மை சிலை செய்யறவங்களுக்கு என்.டி.ராமராவ் காலத்தில் பெரிய வளாகம் கட்டிக்கொடுத்துச்சு. காஞ்சிபுரத்தில் மட்டும் எங்களை மாதிரி 200 குடும்பங்கள் இந்தத் தொழிலை செய்யுறாங்க. நம்ம கவர்மென்ட்டும் ஏதாவது வசதி பண்ணிக்கொடுத்தா நல்லா இருக்கும். செய்வாங்களா சார்?'' என்று எதிர் பார்ப்போடு கேட்கிறார் ராமு.

கடவுளோ, கவர்மென்ட்டோ இவர்களை கவனித்தால் நல்லது! நடக்குமா?

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு