Published:Updated:

ஹேஹேய்... மொய் வசூலுக்கும் வந்திருச்சு ஆப்! செக்கானூரணி கண்டுபிடிப்பு #Moitech

ஹேஹேய்... மொய் வசூலுக்கும் வந்திருச்சு ஆப்! செக்கானூரணி கண்டுபிடிப்பு #Moitech
ஹேஹேய்... மொய் வசூலுக்கும் வந்திருச்சு ஆப்! செக்கானூரணி கண்டுபிடிப்பு #Moitech

ஹேஹேய்... மொய் வசூலுக்கும் வந்திருச்சு ஆப்! செக்கானூரணி கண்டுபிடிப்பு #Moitech

நேக வீடுகளில் அவ்வப்போது கேட்கிற வசனம்; "நாளைக்கு ஒரு கல்யாணத்துக்கு போறேன், பீரோல இருக்க மொய்  நோட்ட எடுத்து வா, அவங்க நமக்கு எவ்வளவு மொய் வச்சுருக்காங்கனு பாக்கணும்"  கரையான் அரித்து, எழுத்து கரைந்து, மொய் நோட்டு கிழிந்து மொய் வைத்தவர்கள் பெயரை கண்டுபிடிப்பதே சிரமமாகிவிடுகிறது. சில வீடுகளில் மொய்  நோட்டு தொலைந்து எவ்வளவு தொகை வைப்பதென தெரியாமல் ஏதோ ஒரு தொகையை வைத்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மொய்  விஷயமும் இப்போது  E மொய்யாக அப்டேட் ஆகி விட்டது மக்களே!!! இனி பரணில் பீரோவிலும் பழைய மொய் நோட்டை தேட வேண்டியதில்லை. கணிணி பட்டனையோ மொபைல் பட்டனையோ தட்டினால் கண்முன்னே வந்து விடுகிறது உங்களின் மொய் விவரமும், நீங்கள் செய்த மொய் விவரமும். மொய் விஷயத்தில் பெயர் போன மதுரையில் மொய் வசூலிப்பதற்கென்று ஒரு சாப்டவேர் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப் உருவாக்கியிருக்கிறார்  ஒருவர்.

என்னோட பேர்  பிரபு;  எனக்கு மதுரை  செக்கானுராணி பக்கத்துல  இருக்கும்  சிக்கம்பட்டி தான் சொந்த ஊர். ஊர்ல சொந்தமா  ஒரு மொபைல் கடை வச்சிருக்கேன்,  எங்க ஊர்ல  விசேஷ நாள்களில்  மொய் என்பது மிகவும் முக்கியமான ஒரு  அங்கமா இருக்கு. மூணுவருசத்துக்கு முன்னாடி என்னோட பொண்ணுக்கு காது குத்து வச்சிருந்தேன், அப்போ நெறய பேர் எனக்கு மொய் செஞ்சிருந்தாங்க, அதுக்கடுத்த கால கட்டத்துல எனக்கு மொய் செஞ்சவங்க எல்லாரும் வீட்டுக்கு வந்து பத்திரிக்கை வச்சிட்டு போனாங்க, சில சமயம் வீட்டுக்கு தினம் அஞ்சி ஆறு விசேஷ பத்திரிகைகள் வரை வர ஆரம்பிச்சுச்சு. நமக்கு யாரு எவ்வளவு மொய் செஞ்சாங்கன்னு தெரிஞ்சாதான் நாம திரும்ப மொய் செய்றதுக்கு வசதியா இருக்கும். அப்படி மொய்  செய்தவர்கள் விவரத்தை தேடி எடுக்குறதுக்கு ரொம்ப கடினமா இருந்துச்சு, ரெண்டு மூணு மணி நேரம் வீணா  போச்சு,  மொய் செய்தவங்க  விவரத்தை ரொம்ப ஈஸியா கண்டுபிடிக்கணும்னு யோசிக்கும் போதுதான் இந்த ஐடியா கெடச்சது.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே இதுக்கான சாப்டவேர் கண்டு பிடிச்சிட்டேன். என்னோட மொபைல் கடைக்கு வரும் எல்லோர்கிட்டையும் இத பத்தி சொன்னேன், கடைக்கு வருகிற எல்லார்கிட்டயும் அவங்களோட பழைய மொய் நோட்ட வாங்கி ஊர் வாரியாக எவ்வளவு தொகை வந்திருக்கிறது என அச்சடித்து  புது புத்தகமா போட்டு  கொடுத்து விடுவேன். அவங்களுக்கு யார் எவ்வளவு மொய் செஞ்சிருக்காங்கனு கண்டுபிடிக்கிறது ரொம்ப ஈஸியா இருந்துச்சு. அந்த சமயம் கடைக்கு வந்த ஒருத்தர் அவரோட வீட்டு விசேஷத்துக்கு வந்து "லைவ்"வா மொய் வசூலித்து காட்டச் சொன்னாரு, நாங்களும் போய் நல்ல படியா செய்துகொடுத்தோம், எல்லாருக்கும் எங்களோடவேலை  பிடிச்சிருந்தது.

மொய்  முழுவதுமே டிஜிட்டல்தான், விசேஷ வீடுகளுக்கு போகும்போது சிஸ்டம் பிரிண்டர் எடுத்துட்டு போயிடுவோம், மொய்   வைக்கிறவங்களுக்கு அங்கேயே ரசீது குடுத்துருவோம், எந்த ஊரு, எவ்வளவு மொய், எல்லாமே அந்த ரசீதுல  இருக்கும், மொய்  செலுத்திய நபருக்கு எஸ்எம்எஸ் உடனே போய்டும். மொய் குடுத்தவங்க முழு விவரமும் எங்க சிஸ்டத்துல பதிவாகிடும், விசேஷம் முடிந்ததும் வசூலான மொத்த தொகையவும், கூடவே மொத்த மொய் விவரத்தையும் ஒரு புத்தகமா போட்டு அப்பவே வீட்டுகாரங்க கைல குடுத்துருவோம். எங்களுடைய இணையத்தளத்திலயும் மொய்  விவரத்தை பதிவு பண்ணிடுவோம், யார் வேணும்னாலும் எப்போது வேண்டுமானாலும்  அவங்களோட மொய்  விவரத்தை ஆன்லைன்ல பாத்துக்கலாம். மொய்  செய்யாதவர்கள் விவரமும் ஊர் வாரியாக தனியாக அதில்  பதிவேற்றப்பட்டிருக்கும் என்கிறார்.  இதுவரை இருபத்தி ஐந்து விசேஷங்கள் வரை வெற்றிகரமா நடத்திட்டோம். இப்போ "மொய்  டெக்" பத்து பேர் வேலை செய்கிற நிறுவனமாக இருக்கிறது என்கிறார் பெருமையாக.

மொய் வைப்பவர்களின் விவரங்கள் முதல் கொண்டு ஊர் வாரியாக எவ்வளவு மொய் செய்திருக்கிறோம் என்பது வரை இந்த வெப்சைட்டில் பார்க்கலாம். இதன் அடுத்தபடியாக வருகிற பதினெட்டாம் தேதி "மொய் டெக்" என்ற புதிய ஆண்ட்ராய்ட் ஆப்பையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள்.  தமிழகத்தில் மொய், சீர், சீதனம்  கொடுத்தல் என்பதை வெளிப்படுத்துகிற பாடலாக  கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் இருக்கிற "மானூத்து மந்தையில் மான்குட்டி பெத்தமயிலே" பாடல்தான் இருந்து வருகிறது. அதற்குப் பதிலாக தாய் மாமன்களுக்கு சமர்ப்பணமாக  "மொய் " பாடல்  ஒன்றையும்  அன்றைய  தினம் வெளியிட இருக்கிறார்கள். 

நவீனமயமாக்கத்தில் ஒன்றுக்கு மாற்று இன்னொன்று என்றாகிவிட்டது.  எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட காலத்தில் இந்த ஆப்கூட காலத்தின் கட்டாயம்தான். அடுத்த தலைமுறைக்கு மொய் வைப்பது சம்பந்தமான மொபைல் ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். மொய்  டெக்  அப்படியான ஆப்களுக்கு முன்னோடியாக இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு