கண்ணனில் களைகட்டிய கூட்டம்
##~## |
'ஜாலி ஜாலி போட்டிகள், ரேடியோ ஜாக்கியின் கலாய்ப்பு, அசத்தலான பரிசுகள், அட்டகாச ஆஃபர்கள் என 'என் விகடன் கொண்டாட்டம்’ விழாவில் வாசகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள். 'கொண்டாட வாருங்கள் கோவைவாசிகளே!’ என்ற விகடனின் அழைப்பு அத்தனை வீட்டுக் கதவுகளையும் தட்டி இருக்க வேண்டும். அதனால்தான் திருவிழா கூட்டம்!
என்விகடனுடன் கண்ணன் டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் இணைந்து, கோவையில் ஜூலை 23-ம் தேதி அன்று ஒரு அதிரடி ஆஃபர் திருவிழாவை நடத்தியது. ரேடியோ பார்ட்னராக ஹலோ எஃப்.எம். மற்றும் கேபிள் பார்ட்னராக யு டி.வி-யும் இணைந்துகொள்ள, மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா என்ன! விகடன் இதழ்களுக்காக சந்தா கட்டுபவர்களுக்கு ஆச்சர்யப்படுத்தும் வகையில் கிஃப்ட் வவுச்சர் வழங்குவதுதான் கொண்டாட்டத்தின் சாராம்சம். இச்சலுகைகள் கிராஸ்கட் ரோடு, சிங்காநல்லூர், கணபதி உள்ளிட்ட கோவை நகரத்தில் உள்ள கண்ணனின் ஆறு கிளைகளிலும் கிடைக்கும் என அறிவிக்கப் பட்டு இருந்தது.

கிராஸ் கட்ரோடு, கணபதி கிளைகளில் கடை திறக்கும் முன்பே கூட்டம். வந்த இடத்தில் சந்தா ஆஃபரை பார்த்து உச்சி குளிர்ந்து போய்விட்டார் கள். ஆனந்த விகடனுக்கு வருட சந்தாவாக

900 கட்டினால், அப்படியே பாதி பணத்துக்கு அதாவது

450-க்கு பரிசு பொருட்கள் கிடைத்ததை பார்த்து கிறங்கிப் போனார்கள். இது மட்டுமல்ல... யூத் பேக், லேடீஸ் பேக், நியூஸ் பேக், ஃபேமிலி பேக், சூப்பர் ஃபேமிலி பேக் மற்றும் எல்டர்ஸ் பேக் என்று ஏழு விதமாகப் பிரித்து ஆறு மாதத்துக்கான சூப்பர் பேக்கேஜ் ஆஃபரும் கிடைத்தது சந்தோஷம். அதிலும் 50சதவிகிதம் ஆஃபர் கிடைத்தது சந்தோஷ உச்சம்.

உதாரணத்துக்கு ஆனந்த விகடன், மோட்டார் விகடன் மற்றும் நாணயம் விகடன் மூன்று இதழ்கள் அடங்கிய 'யூத் பேக்’குக்கு ஆறு மாத காலத்துக்கு வெறும்

1,000-தான் சந்தா தொகை. இதில்

500 கிஃப்ட் வவுச்சர் வடிவில் திரும்ப கிடைத் தது. அந்தப் பணத்துக்கு கண்ணனில் கண்ணில்பட்டதை எல்லாம் வாங்கி ஆனந் தப்பட்டார்கள் சந்தாதாரர்கள்.
ஆஃபர் மயக்கத்தில் கிறங்கி நின்றவர்களை குட்டிக் கேள்விகளால் கிச்சுகிச்சு மூட்டி சிரிக்க வைத்தது ஹலோ எஃப்.எம்-ன் ஆர்.ஜே. டீம். சுட்டி விகடன் அடங்கிய 'ஃபேமிலி பேக்’ வாங்க சந்தா கட்டிய சிறுவனிடம் 'டோனியோட ஃபுல் நேம் சொல்லு?’ என்று கேட்க, 'மஹேந்திர சிங் தோனி. ஸ்கிப்பர் (கேப்டன்) ஆஃப் இண்டியன் கிரிக்கெட் டீம்’ என்று கூடுதல் பதிலையும் சொல்ல அவன் கையில் ஒரு கிரிக்கெட் பந்து பரிசாக சென்று அடைந்தது.
'மீந்து போன முந்தைய நாள் இட்லியை என்ன பண்ணுவீங்க?’ என்று ஒரு இல்லத்தரசியிடம் கேட்க... அவரோ, ''உதிர்த்து உப்பு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிச்சு கொஞ்சம் மஞ்சள் பொடியும் தூவி இறக்கிடுவேன். நாங்க 'அவள் விகடன்’ வாசகிகளாக்கும்'' என்று பதில் சொல்லி டபுள் கிஃப்ட் அடித்துச் சென்றார்.
காலையில் இருந்து மாலை வரை என்று ஃபிக்ஸ் செய்யப்பட்டு இருந்த இந்த ஆஃபர் திருவிழா, கோவை மக்களின் அமோக ஆர்வத்தினால் இரவு வரை நீண்டது விசேஷம். விழா முடிந்து நகரும்போது அத்தனை பேரும் சொன்னது 'கொண்டாட்டம்னா அது என் விகடன் கொண்டாட்டம்தான்!’
சூப்பருல்ல!
- எஸ்.ஷக்தி, படங்கள்: வி.ராஜேஷ்