Published:Updated:

கொள்ளு உண்டு... புல்லு உண்டு... ஒடு ராஜா!

நாமக்கல் எக்ஸ்பிரஸ்

##~##

நாமக்கல் என்றால் மலைக்கோட்டை, கோழிப் பண்ணை மட்டும் அடையாளங்கள் அல்ல; அதைத் தாண்டி இன்னொன்றும் இருக்கிறது. அது குதிரை வண்டிகள்!

 சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் நகரில் மட்டுமே சுமார் 300 குதிரை வண்டிகள் இருந்தன. ஆனால், இப்போது இருப்பதோ வெறும் இரண்டு வண்டிகள் மட்டுமே!'' - இப்படி ஒரு தகவலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார், நாமக்கல் வாசகர் ஃபைஸ் அஹமது.

அவர் உதவியுடன் குதிரை வண்டிக்காரர் ராஜகோபாலை தேடிச் சென்று பேசினோம். ''குதிரைனாலே கம்பீரம்னு அர்த்தம் சார்! அப்போ எல்லாம் டவுன் இவ்வளவு வளரலை. பஸ் ஸ்டாண்டை ஒட்டி வெளிப் பக்கம் ஒரு புளிய மரம், உள் பக்கம் ஒரு ரப்பர் மரம். அதை ஒட்டி சுப்ரமணியம் ஐயர் லாட்ஜ். கிழக்குப் பக்கம் வட்ட முக கிணறு இருக்கும். பக்கத்தில் குதிரை வண்டி ஷெட். எங்க அப்பாருக்கும் இதே தொழில்தான். ஜோதி தியேட்டர் ஒட்டி இருக்குற தெருவில் நிறைய குதிரை வண்டிக்காரர்கள் வசிச்சாங்க. வண்டிச் சக்கரம் வேலை, குதிரை குளம்புக்கு லாடம் அடிக்குற வேலை அங்க பொழுதன்னிக்கும் நடக்கும். அதனால், அதை கொல்லன் பட்டறைத் தெருவுன்னே சொல்லுவாங்க.

கொள்ளு உண்டு... புல்லு உண்டு... ஒடு ராஜா!

சுமார் மூணு மைல் வரைக்கும் போக 1.50 வாங்குவோம். சமயங்களில் சேலம் வரைக்கும்கூட வண்டி கட்டுவோம். அவ்வளவு தூரம் தொடர்ந்து ஓட குதிரைக்குப் போஷாக்கு முக்கியம். அதுக்குக் காலையில் கொள்ளும், புல்லும் காட்டுவோம். மத்தியானத்துக்கு நாலு கிலோ வேகவெச்ச கோதுமையை உருட்டி ஊட்டுவோம். அப்போ எல்லாம் கொள்ளு கிலோ

கொள்ளு உண்டு... புல்லு உண்டு... ஒடு ராஜா!

1.50-தான். கோதுமையும் விலை சல்லீசு. இப்போ புல்லுகட்டே

கொள்ளு உண்டு... புல்லு உண்டு... ஒடு ராஜா!

40-க்கு விக்குதே!

20 நாளைக்கு ஒரு தடவை புது லாடம் கட்டுவோம். இல்லீன்னா குதிரைக்கு கால் புண்ணாகிடும். ஊருக்குள்ள சேவல் றெக்கையை தேடிப் பிடிச்சு அதுக்கு கலர், கலரா பெயின்ட் அடிச்சி குதிரையோட கழுத்துலயும், தலை உச்சியிலயும் கட்டிவிடுவோம். அது இல்லாம கொண்டைப் பூ, முகப்பட்டா, கடிவாளம், ஜினிகட்டா (முதுகுப் பட்டை) எல்லாம் அணிவிச்சு வண்டியில் குதிரையைப் பூட்டுவோம்.

கொள்ளு உண்டு... புல்லு உண்டு... ஒடு ராஜா!

வண்டி மட்டும் சும்மாவா? ஒரு பக்கம் மானும் மயிலும் ஆடும். இன்னொருப் பக்கம் சுங்குவார் தலையணை, டி.கே.எஸ். பொடி மட்டைனு ஏதாவது விளம்பரம் எழுதி இருப்போம். பிளஷர் காருக்குள்ள கூட எங்க வண்டியில் இருக்குற சொகுசு இருக்காது. உள்ளே ரெண்டுப் பக்கமும் அஞ்சாறு முகம் பார்க்குற கண்ணாடி வெச்சு இருப்போம். அதுக்குக் கீழேயே சீப்பு, பவுடர்லாம் இருக்கும். உட்காரவங்களுக்கு நோகாம இருக்க வைக்கோல் விரிச்சு, அதுக்கு மேல திண்டு வெச்சு இருப்போம். சில பேர் பேட்டரி மாட்டி சின்ன ஃபேன்கூட வெச்சு இருந்தாங்க.

கொள்ளு உண்டு... புல்லு உண்டு... ஒடு ராஜா!

வண்டிக்கு அடியில் டேப்பரா (வலைப்பை) இருக்கும். அதுல எப்பவுமே கொள்ளு, புல்லு இருக்கும். ஏன்னா குதிரைக்கும் எப்ப பசிக்கும்னு சொல்ல முடியாது. குதிரைங்க பசி தாங்காது. பசிச்சா ஓடிட்டே இருக்குறப்ப நின்னு காலை தரையில் குழந்தையாட்டம் உதைச்சு குதிக்கும். அதுங்களும் குழந்தைங்கதானேய்யா!'' என்கிறார் நெகிழ்வாக.

தற்போது மக்கள் யாரும் குதிரை வண்டியை விரும்புவது இல்லை. பள்ளிக் குழந்தைகளுக்கான டிரிப் மட்டுமே இவருடைய வயிற்றுப் பாட்டுக்குப் படி அளக்கிறது. குதிரைக்கும் சேர்த்துதான்!

- டி.எல்.சஞ்சீவிகுமார், படங்கள்: க.தனசேகரன்

அடுத்த கட்டுரைக்கு