Published:Updated:

என் ஊர்!

நிலக்கரி மண்ணில் சில நீர் ஓவியங்கள்!

என் ஊர்!

நிலக்கரி மண்ணில் சில நீர் ஓவியங்கள்!

Published:Updated:
##~##

''என் படங்களின் பெரும்பாலான காட்சி களுக்கான இன்ஸ்பிரேஷன், பயணங்களில்தான் எனக்குக் கிடைக்கும். இயேசுவின் அருகாமையோடு என் பயணங் களில் தனிமை நிறைஞ்சிருக்கு. ஆனா, எந்த ஊரும் தந்தத் தனிமையைவிட என் ஊர் நெய்வேலி டவுன்ஷிப் தந்த தனிமை ரொம்பவும் அலாதியானது!''- 'மைனா’வைப் பேசவைத்த இயக்குநர் பிரபு சாலமன் தன் ஊரான நெய்வேலி பற்றிப் பேசத் தொடங்கினார்...

''நெய்வேலி டவுன்ஷிப் பொது மருத்துவமனையில் பிறந்தேன். 10-வது வரை செயின்ட் பால்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

பள்ளியில் படிச்சேன். அப்போ எல்லாம் நான் ஃபுட்பால் பிளேயர். டவுன்ஷிப்பில் ஃபோர்த் பிளாக் கிரவுண்டில் பந்தைத் துரத்திக்கிட்டு ஓடினதை நினைச்சா இப்பவும் பந்தை உதைக்கக் கால் துடிக்கும். அந்த ஸ்கூல்ல ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ-வுல ஃபுட்பால் விளையாட முடியாதுங்கிறதால, நெய்வேலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

நெய்வேலி டவுன்ஷிப் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் நிலக்கரி பூமி. எல்லாமே குவார்ட்டர்ஸ்தான். சொல்லப்போனா, அந்த மண் விவசாயத்துக்கான மண். ஆனா, நிலக்கரி வளம் காரணமா விவசாயம் விலக்கப்பட்டு விட்டது. இயற்கையாவே வளமான மண் என்பதால் டவுன் ஷிப் முழுக்க மரங்களா இருக்கும். சின்ன வயசில் சலிக்கச் சலிக்க பலாப் பழம் சாப்பிட்டதால் இப்போ பலாச்சுளை சாப்பிடவே பிடிக்கிறது இல்லை. ஒவ்வொருத்தர் வீட்டிலும் மாமரம், கொய்யா மரம்னு ஏராளமான மரங்கள் இருக்கும். மழை பெய்தால் இலையில் சொட்டும் தண்ணீர், தண்ணீர் தேங்காத சாலைகள், தூரத்தில் கேட்கும் குயில் ஓசைனு... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரம்மியத்தைச் சுமந்து நிற்கும்.

சைக்கிளில்தான் எப்பவும் பயணம். நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டு பூமியில் இருக்கும் வெள்ளை மண், கல் எல்லாத்தையும் ஓர் இடத்தில் குவிச்சு வெச்சு இருப்பாங்க. பார்க்கிறதுக்கு ஒரு வெள்ளை மலை மாதிரி இருக்கும். விரல் பட்டாலே வெள்ளைக் கட்டிகள் உதிர்ந்துவிடும். அந்தக் குவியல் மேல கால்வெச்சு ஏறிடுவேன். அங்கே மழை நீர் தேங்கி ஏரிபோல இருக்கும். ஆள் காட்டிப் பறவை 'குக்கூ’னு ஒலி எழுப்பிக்கிட்டே இருக்கும். அந்த இடத்தில் உயிர் நடமாட்டம் இருப்பதற்கான ஒரே சாட்சி அந்த குக்கூதான்.

என் ஊர்!

ஒவ்வொருத்தர் வீடும் நாலு, அஞ்சு கிரவுண்ட் சேர்ந்த மாதிரி இருக்கும். திருவிழாக்கள்னு குறிப்பிட்டுச் சொல்லும்படியா எதுவும் இருக் காது. ஆனா, தீபாவளி சமயத்தில் எல்லார் வீட்ல இருந்தும் பலகாரம் வந்துடும். கிறிஸ்துமஸ் அன்னிக்கு நாங்க ஆள்வெச்சு பலகாரம் செஞ்சு அவ்வளவு பேருக்கும் கொடுப்போம். இப்போ எல்லாம் ஸ்வீட் பாக்ஸோடும், சின்ன எஸ்.எம்.எஸ்ஸோடும்  கொண்டாட்டங்கள் மறைஞ்சுப் போயி டுது!

அப்போ அமராவதி, கணபதினு ரெண்டு தியேட்டர்கள் இருந்துச்சு. மூணாவது, நாலாவது ரிலீஸ் படங் கள்தான் பெரும்பாலும் வரும். தமிழ், ஆங்கிலம், இந்தினு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஒரு படம் போட்டுருவாங்க. அமராவதி தியேட்டர் எனக்கு ஒரு நூலகம் மாதிரி. படம் பார்த்துட்டு வந்து, முத்து காமிக்ஸ், ராணி காமிக்ஸ்ல இருக்குற படங்களை எல்லாம் வெட்டி நானே ஒரு ஸ்டோரி போர்ட் மாதிரி வெச்சுப் பார்ப்பேன். அப்பவே சினிமா ஆர்வம். கால மாற்றத்தில் அமராவதி தியேட்டர் குடோன் ஆக மாறிடுச்சு.

என் ஊர்!

பெரிய ஹோட்டல்கள் எதுவும் இல்லை. புதுகுப்பம் ரவுண்டானாவில் முன்ன ஒரு புரோட்டா கடை இருந்துச்சு. எனக்கு புரோட்டானா பிரியம். லாரி ஓட்டுறவங்க சாப்பிட்டுப் போறதுக்காக அந்தக் கடை வெச்சிருந்தாங்க. அங்க போய் சாப்பிட்டதுக்காக சின்ன வயசுல வீட்ல திட்டுவிழும். திருட்டுத்தனமா சாப்பிட்ட அனுபவங்கள்  நிறைய இருக்கு. இப்போ அந்தக் கடையும் இல்லை.

வீட்ல ஒரு பலா மரத்தை ரொம்ப ஆசை ஆசையா வளர்த்தோம். அப்பா இறந்த பிறகு அந்தப் பலா மரமும் விழுந்துடுச்சு. இப்ப அம்மா, சகோதரி எல்லாம் நெய்வேலியில்தான் இருக்காங்க. அடூர் கோபாலகிருஷ்ணனின் படம் பார்க்குற மாதிரி இருக்கும் சார் எங்க ஊர். இப்போ சென்னையின் இரைச்சல்களுக்குப் பழகிட்டேன். ஆனா, நெய்வேலியின் தனிமை இன்னும் எனக்குள்ள நிறைஞ்சிருக்கு!''

   - ந.வினோத்குமார், படங்கள்: எஸ்.தேவராஜன்