Published:Updated:

விழிகளில் ஏற்றுங்கள் விளக்குகளை!

விழிகளில் ஏற்றுங்கள் விளக்குகளை!

##~##

பொதுவாகக் கண் மருத்துவர்கள் மற்றவர்களின் கண்களைப் பார்ப்பதும், பரிசோதிப்பதும் உண்டு. ஆனால், புதுச்சேரி கண் மருத்துவர் வனஜா வைத்திய நாதன், பரிசோதிப்பதோடு மட்டும் அல்லாது, பார்க்க இயலாதவர்களைப் பார்க்கவைக்கும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார்.

200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இலவச கண் சிகிச்சை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிராம மக்க ளுக்கும் குழந்தைகளுக்கும் இலவச கண் சிகிச்சை, 400-க்கும் மேற்பட்டவர்களுக்குக் கண் தானத்தின் மூலம் கண் ஒளி அளித்தது என வனஜாவின்சாதனைப் பட்டியல்கள் நம்மை மலைக்கவும் மனிதநேயத்தோடு வாழ்த்தவும் வைக்கின்றன!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
விழிகளில் ஏற்றுங்கள் விளக்குகளை!

''அப்பா சண்முகம் கடலூரில்  புகழ்பெற்ற மருத்து வர். அவர்தான் எனக்கு மருத்துவம் மீது ஈடுபாடு வருவதற்கான இன்ஸ்பிரேஷன். என் அக்காவுக்குபள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்யாணம் பண்ணிக் கொடுத்துட் டாங்க. அதே மாதிரி எனக்கும் கல்யாணம் பண்ணித் தர வீட்டில் முடிவு எடுத்தாங்க. ஆனால், நான் படிச்சே ஆகணும்னு உறுதியா இருந்தேன். சென்னை எம்.எம்.சி- யில் மருத்துவப் படிப்புப் படிக்கும்போதே எனக்குத் திருமணம் நடந்தது. வாரம் முழுக்கக் கல்லூரி, சனி- ஞாயிறுகளில் ஊரில் குடும்ப வாழ்க்கைன்னு நடந்துக்கிட்டு இருந்தது. பஸ் பயணத்தில் படிச்சு எக்ஸாம் எழுதுனதுதான் அதிகம்.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பகுதிநேர வேலை, தனியார் மருத்துவமனை களில் வேலைன்னு நாட்கள் நகர்ந்தது. அப்புறம் நானே சொந்தமா கிளினிக் ஆரம்பிச்சேன். முன்பெல்லாம் சென்னை யில் கிடைச்ச பல தொழில்நுட்ப வசதிகள் இப்போ பாண்டிச்சேரியிலும் கிடைக்க ஆரம்பிச்சிடுச்சு. நான் வெளி மாநிலங் களுக்கெல்லாம் போய் அங்கே நடை முறையில் உள்ள அப்டேட் ஆன வசதிகளைப் பார்த்துட்டு வந்து, அதை இங்கு நடைமுறைப்படுத்துவேன்.  

2001-ல் இருந்துதான் இலவசக் கண் சிகிச்சை முகாம்கள், கண் தானம் பக்கம் என் கவனம் திரும்ப ஆரம்பிச்சது. கல்லூரி, பள்ளிகளில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தி ஒரு லட்சம் கண்களுக்கு மேல் இலவச சிகிச்சை அளித்தேன். கண் தானம் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி 4,254 பேரிடம் இருந்து உறுதிப் படிவங்கள் வாங்கி இருக்கேன். 400 பேர் வரை கண் தானம் பெற்றுக் கண்கள் பொருத்தி இருக்கேன்.

விழிகளில் ஏற்றுங்கள் விளக்குகளை!

இறந்த வீட்டுக்குப் போய் கண் தானம் பெறு வதற்கு ரொம்பவே போராட வேண்டியிருக்கும்.   ஆனால், முறைப்படி எடுத்துச் சொன்னால் மக்கள் கண் தானத்தின் அவசியத்தை உணர்ந்து கொள்வார்கள் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்தேன்.

இப்போதெல்லாம் சின்ன வயதிலேயே பார்வைக் கோளாறுகள் வர ஆரம்பித்துவிட்டன. டி.வி., கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களைச் சின்ன வயதிலேயே குழந்தைகள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். குறைந்தது இரண்டு அடி தூரமாவது இடைவெளி விட்டுத்தான் டி.வி, கம்ப்யூட்டர் பார்க்கணும். மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் கண்களுக்கு மருந்துகள் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான பச்சைத் தண்ணீரில் அடிக்கடி கண்களைக் கழுவுவது நல்லது. இப்போது என் மகள் அமிர்தாவும் மருத்து வம்தான் படிக்கிறார். அவரும் ஒரு மக்கள் மருத்துவராக வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்!''  அம்மாவின் விருப்பத்தை புன்னகை மூலம் ஆமோதிக்கிறார் அமிர்தா.

- நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்