Published:Updated:

உங்க சென்டிமென்டைக் குப்பையில போடுங்க!

Vikatan Correspondent

வாழ்க்கையில் கொஞ்சம் சூப்பரா, நிறைய மொக்கையா, கொஞ்சம் ஓவரா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான சென்டிமென்ட்ஸ். என் நட்பு வட்டாரத்தைச் சேர்ந்தவர்களின் வினோத சென்டிமென்ட்ஸ் இவை...

சாப்பிடுறதுக்கு முன்னாடியும் சாப்பிட்டதுக்கு அப்புறமும் கை கழுவுறதுங்கிறது அடிப்படையான விஷயம். ஆனா 'சாப்பிட்ட கையைக் கழுவ லேட் ஆனா, அவனுக்குக் கல்யாணம் லேட்டாகுமாம்’கிறது எங்க ஊர்ப் பக்கம் இருக்கிற சென்டிமென்ட்.

'அடிக்கிற 'தம்’மை இரண்டு விரலுக்கிடையில் வெட்டி வாங்கக் கூடாது. அப்படி வாங்கினா, ஃப்ரெண்ட்ஷிப் 'கட்’ ஆயிடும்’னு சொல்லுது இன்னொரு சென்டிமென்ட். காசு கொடுத்து சிகரெட் வாங்காம, வெட்டியா 'வெட்டி’ வாங்கி அடிக்கிற அவனோட ஃப்ரெண்ட்ஷிப் இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?

'பீரோ, பிராந்தியோ... சியர்ஸ் சொன்னதுக்கப்புறம் கீழே வைக்கக் கூடாது’னு சென்டிமென்ட் சொல்ற துக்குக் காரணம், வேற எவனாவது எடுத்து அடிச் சிடக் கூடாதுங்கிறதுக்காக இல்லை பாஸ். கீழே வெச்சுட்டா, அடுத்த 'தீர்த்தவாரி’க்குள்ளே சேர்ந்து குடிச்ச எவனாவது ஒருத்தன் அந்த டீமுக்கு எதிரி ஆகிடுவானாம். இதுக்கெதுக்குய்யா சென்டிமென்ட்? அடுத்த ரவுண்டுல எதிரியானா, அதற்கடுத்த ரவுண்டுல அவனே நண்பனாகிடப்போறான். என்ன நான் சொல்றது?

உங்க சென்டிமென்டைக் குப்பையில போடுங்க!

மறுபடியும் ஃப்ரெண்ட்ஷிப்தாங்க. 'ஒரே தீக்குச்சியில் மூணு பேரோட சிகரெட்டைப் பத்தவைக்கக் கூடாது’ அப்படிப் பற்றவைத்தால், சுற்றி நிற்பவர்கள் அவர்களுடைய ஃப்ரெண்ட்ஷிப்புக்குள் தீயைப் பற்றவைத்து விடுவார்கள் என்கிறது சென்டிமென்ட் அகராதி. ஒரே ஒரு 'தம்’மை வாங்கி, நாலு குச்சியை இழுத்துத் தேய்க்கிற ஒருத்தனைப் பார்த்து டென்ஷனான ஏதோ ஒரு பெட்டிக் கடைக்காரரின் பலே ஐடியாவாத்தான் இருக்கும் இது. இது மட்டும் இல்ல, 'நண்பன் இன்னொரு

உங்க சென்டிமென்டைக் குப்பையில போடுங்க!

நண்பனுக்குப் பேனா பரிசா கொடுக்கக் கூடாது’ மீறிக் கொடுத்துட்டா, டூதான்.

அப்படியே 'வலது கண்ணோ, இடது கண்ணோ ஏதாவது ஒரு கண் விட்டுவிட்டுத் துடிக்குதா?’னு செக் பண்ணுங்களேன். கோபப்படாதீங்க பாஸ்... அப்படி துடிச்சதுனா, உங்களுக்கு எங்கே இருந்தோ காசு வரப்போகுதுனு அர்த்தம்.

இது மட்டுமா? 'உள்ளங்கால்ல அரிப்பு வந்தா, காசு கைக்கு வரும்’ (கால்ல அரிப்பு... கையில காசு. வாட் எ ரைமிங்), 'வானத்துல எரிகல்லைப் பார்த்துட்டா, அடுத்த செகண்டே பச்சை மரத்தைப் பார்க்கணும்’ (சென்னையில வசிக்கிறவங்களுக்கு எதுவும் விதிவிலக்கு இருக்கா), காலண்டரைக் கிழிக்கும்போது, 'நாளைக்கு நம்ம ராசிக்கு என்ன போட்டிருக்கு?’னு இன்னைக்கே பார்க்கக் கூடாது. இப்படி 'சென்டிமென்ட்’ பேர்ல ஏகப்பட்ட காமெடியான நம்பிக்கைகள் நம்ம ஃலைப்ல இருக்கு பாஸ்!

- கே.ஜி.மணிகண்டன்