Published:Updated:

புத்தக விமர்சனம்!

புத்தக விமர்சனம்!

புத்தக விமர்சனம்!

புத்தக விமர்சனம்!

Published:Updated:
புத்தக விமர்சனம்!

உடல் உண(ர்)வு மொழி!

புத்தக விமர்சனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

  இன்றைய பரபரப்பு மிகுந்த வாழ்க்கை சூழலில், அவசிய உணவு என்பது அவசர உணவாகவும், ஆரோக்கியத்தைத் தரக்கூடிய சத்தான உணவு, உயிர்ச் சத்துக்களை இழந்த சக்கை உணவாகவும் மாறிவிட்டது. இயற்கை உணவின் மூலம் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்குப் பாதை வகுத்துத் தந்திருக்கிறது, உடல் உண(ர்)வு மொழி என்ற இந்த நூல்.

கொழுப்பு, மாவுச்சத்து, புரதம் போன்ற அமிலச் சத்துள்ள உணவைவிட, பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்ற காரச்சத்து நிறைந்த உணவுகள் கூடுதலாக இருப்பது ஆரோக்கியத்துக்கு ஆதாரம். செரிமானம் சிறப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்... எப்படிச் சாப்பிடவேண்டும்... சாப்பிட்டு முடித்தவுடன் செய்யக்கூடாதவை என்னென்ன... போன்ற விவரங்களை விரிவாக இந்த நூலில் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் தே.சௌந்தரராஜன்.

மேலும், பழங்கள், காய்கள், தானியங்கள், கிழங்குகள்... இவை நேரடியாக நம்மிடம் பேசுவது போல் எழுதியிருப்பது கூடுதல் சுவாரஸ்யம். தொப்பையைக் குறைக்கவும், கொடி போல் உடல் இளைக்கவும் எளிய எட்டு ஐடியாக்களைச் சொல்லி, ''சாப்பிடும்போது, இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கும் நாம், பிறர் பார்க்கும்போதும் இன்னும் கொஞ்சம் பார்க்கும்படியான ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டும் என்று நினைப்பதில்லை'' என்கிறார் ஆசிரியர். அனைவருமே படித்துப் பயன்பெறக்கூடிய அற்புத நூல்.

நூலின் பெயர்: உடல் உண(ர்)வு மொழி

ஆசிரியர் - தே. சௌந்தரராஜன்

பதிப்பகம்: விஜயா பதிப்பகம், கோவை.

தொலைபேசி - 0422 - 2382614

விலை

புத்தக விமர்சனம்!

80/-

புத்தக விமர்சனம்!

 இயன்முறை மருத்துவம்

புத்தக விமர்சனம்!

சில நோய்கள் தாக்கும் போது குளித்தல், உணவு உண்ணுதல், சிறுநீர் கழித்தல் என அன்றாட வேலைகளைக் கூட, தானே செய்து கொள்ளமுடியாத நிலைக்கு அந்த நோயாளிகள் தள்ளப்படுகிறார்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் திரும்பப் பெற இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி) பேருதவியாக இருக்கிறது.

''மூட்டு வாதம், எலும்புச் சிதைவு, தோலில் பிரச்னை, தோள் பட்டை வலி, கழுத்து வலி, கால் சுளுக்கு போன்ற பிரச்னைகளின்போது வீக்கம், வலி ஏற்படும். இந்த வலிகளைக் குறைக்கவும், மூட்டுகளை இலகுவாக்கவும் மெழுகு ஒத்தடம், சுடுநீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியின்றி வாழ வழிவகுக்கமுடியும் என்று இயன்முறை மருத்துவம் பற்றிய விரிவான தகவல்களைத் தந்துள்ளார் இந்த நூலின் ஆசிரியர் தி.செந்தில்குமார். நாளுக்கு நாள் முதுகுவலி, மூட்டு வலி, கை, கால் வலி என வலிகளோடு வாழ்க்கையை ஓட்டுபவர்களுக்கு இந்த நூல் ஒத்தடமாக இருக்கும்.

 நூலின் பெயர்: இயன்முறை மருத்துவம் (பிசியோதெரபி)

ஆசிரியர் - தி.செந்தில்குமார்

பதிப்பகம்: ஓவியா பதிப்பகம்

திண்டுக்கல்.

தொலைபேசி: 04543 262686

விலை

புத்தக விமர்சனம்!

90/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism