Published:Updated:

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த் சிங்!

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த் சிங்!

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த்  சிங்!
கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த்  சிங்!

இப்போதுதான் குஷ்வந்த்சிங்கைப் பற்றி எழுதினோம். இந்த வாரம் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் இந்தியாவின் மூத்த பத்திரிகையாளரும் வித்தியாசமான பெர்சனாலிட்டியுமான குஷ்வந்த்சிங் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்...

''எதை மிகவும் மிஸ் செய்வீர்கள்?''

''செக்ஸை. அதை ஏற்கெனவே பல காலமாக மிஸ் செய்துவிட்டேன். ஆனால், அதைப்பற்றி நான் இப்போதும் கற்பனை செய்கிறேன்'' தன் வாழ்வின் அந்திமக் காலத்திலும் செக்ஸ் குறித்து மனதில் பட்ட கருத்துகளை இப்படி 'பொளேர்’ என வார்த்தைகளாக்கி வீசும் தைரியம் குஷ்வந்த்சிங்குக்கே உண்டு.

ஒரிஜினல் பெயர் குஷால் ஷோபா சிங். பெயரிலேயே குஷால் இருப்பத£ல், விடலைப் பருவத்தில் எல்லோரும் 'லேடி நேம்’ என்று கிண்டல் செய்ய தன் பெயரைத் தானே குஷ்வந்த்சிங் என மாற்றிக்கொண்டார்.

'சிங் இஸ் கிங்’ என்ற ரைமிங் பன்ச் குஷ்வந்த் சிங்குக்கே பொருந்தும். ஓர் அட்டகாச உதாரணம்.

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த்  சிங்!

லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தில் குஷ்வந்த்சிங் வேலை பார்த்தபோது ஓர் இந்திய சமஸ்தானத்தின் ராணி இறந்து போனார். அந்த ராணி தன்னை எரியூட்டும்போது, தான் புடவை அணிந்திருக்க வேண்டும் என்று தன் இறுதி ஆசையைச் சொல்லி இருந்தார். கென்யாவைச் சேர்ந்த மயானப் பணியாளர்கள் சிங்கிடம் வந்து, ''எப்படிப் புடவை கட்ட வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ''மன்னிக்கவும், எனக்குப் புடவையை அவிழ்க்க மட்டும்தான் தெரியும்'' என்று சொல்லி இருக்கிறார் குறும்போடு. அவர்கள் கடுப்பாகி அப்போதைய ஹை கமிஷனர் கிருஷ்ணன் மேனனிடம் அதைப்பற்றி புகார் சொல்ல, 'அவர் அப்படித்தான்’ என பதில் சொல்லி இருக்கிறார். இது எப்படி இருக்கு?

நேரு குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்திருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து விமர்சித்தும் வந்திருக்கிறார். ''இந்திராவும் அவரது மகன் சஞ்சய் காந்தியும் கொண்டுவந்த எமர்ஜென்சியை நான் ஆதரித்தேன். அதை இப்போதும் நான் தவறாகக் கருதவில்லை. நாட்டின் சில முக்கியமான குறைகளைக் களைய அந்த அவசரகால நிலை நிச்சயம் உதவியது. சஞ்சய் காந்தி சொல்வதைச் செய்பவர். அவர் மனசாட்சிப்படி செயல்பட்டவர். நாட்டை உடனடியாக அப்படியே மாற்றிப் போட வேண்டும் என்று அவசரப்பட்டவர். அவரிடம் பொறுமை மட்டும்தான் இல்லை. குடும்பக் கட்டுப்பாட்டைக் கட்டாயமாக்கி அமல்படுத்த முயன்றது, குடிசைகளை இரவோடு இரவாக இடித்துத் தள்ளியது என்று அராஜகச் செயல்களை அவர் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், நாட்டை மாற்ற வேண்டும் என்ற அதீத ஆர்வத் தில் அவர் செய்த செயல்கள்தான் அவை. சஞ்சய் எனக்கு நெருக்கமானவராக இருந்தார், எனக்கு நிறைய உதவிகள் செய்தார், பிர்லாவிடம் பேசி என்னை ஹிந்துஸ் தான் டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக நியமிக்கவைத்தார். என்னை ராஜ்யசபா எம்.பி-யாக்கினார் என்பதற்காக மட்டும் இதைச் சொல்லவில்லை. உண்மையிலேயே அவருக்கு ஒரு தீர்க்கதரிசனம் இருந்தது. ஆனால், அதை யாரும் புரிந்துகொள்ளவில்லை.

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த்  சிங்!

ராஜீவ் காந்தியைப் பொறுத்தவரை ஒரு ஸ்கவுட் பாய் மாதிரிதான். அவர் ஒரு தலைவரே அல்ல. சஞ்சய் போல பல பரிமாணம்கொண்ட நபரும் அல்ல. அவருக்கு அரசியலும் வரவில்லை, எதுவும் தெரியவில்லை. தனது தாயின் வழியில் நடந்தார். அதே பாணியில் பல தவறுகளையும் செய்தார். ஷா பானு வழக்கு, பாபர் மசூதி விவகாரங்களை மிகத் தவறாகக் கையாண்டார். அவர் செய்த தவறுகளின் விளைவுகள் மிக மிக மோசமானவை, நீண்ட காலம் நாட்டைப் பாதித்தவை. சஞ்சயின் மனைவியான மேனகா காந்தியும் ஒரு மட்டமான அரசியல்வாதிதான். அவரும் அவரது குடும்பமும் என்னை அவர்களுக்கு வசதியாகப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசியவர்கள். மேனகாவின் மகன் வருண் வளர்க்கப்பட்ட விதமே சரியில்லை. அவரைப் போன்ற ஒரு நபருக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதே தவறு. இதை அவர் சார்ந்துள்ள கட்சி உணர வேண்டும். அவரைத் தேர்தல்களில் போட்டியிடுவதில் இருந்து தடை விதிக்க வேண்டும். வளர்ப்பு சரியில்லாத வருண் போன்றவர்கள் நாட்டின் ஒற்றுமைக்கே ஆபத்தானவர்கள். ஆனால், ராகுல் காந்தி பரவாயில்லை. தனது தந்தை ராஜீவை விட நல்ல திறமைசாலியாக, புத்திசாலியாகவே இருக்கிறார். அவருக்கும் நல்ல தீர்க்கதரிசனம் இருக்கிறது. இந்தியாவுக்கு இதுவரை கிடைத்த பிரதமர்களிலேயே மிகச் சிறந்தவர் மன்மோகன் சிங் என்பது என் கருத்து. நேருவை விட இவரை சிறந்த பிரதமராக நான் கருதுகிறேன்'' இப்படி பகிரங்கமாக நேரு குடும்பத்தைப் பற்றிய கருத்துகளை முன்வைத்தவர் குஷ்வந்த்சிங்.

''இறந்த பிறகு எப்படி தாங்கள் நினைக்கப்பட வேண்டும்?'' -இப்படி ஒரு கேள்வி ஒரு பேட்டியின்போது கேட்கப்பட்டது.

''விளைவுகளைப் பற்றிக் கவலையேபடாமல் மனதில் பட்டதைப் பேசிய ஒரு மனிதனாக'' என்று பதில் அளித்தார். அதுதான் குஷ்வந்த்சிங்!

குஷ்வந்த்சிங் பத்திரிக்கையாளராக ஜொலித்தாலும் இலக்கியத் துறையில், இவர் ஆற்றிய

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த்  சிங்!

பங்களிப்பு பெரிது. இந்தியாவின் உயரிய விருதான 'பத்மவிபூஷன்’ விருதினைப் பெற்றவர். லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் சட்டம் பயின்றவர், 1947-ம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடர்ந்தார். அதன் பின் எழுத்தாளராக வாழ்க்கையைத் தொடங்கியவர், தன்னுடைய முதல் நாவலை 'மனோ மஜ்ரா’ என்ற பெயரில் எழுதினார். 'கரூவ் ப்ரெஸ்’ என்ற பதிப்பகம் இந்திய நாவலுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு மனோ மஜ்ராவை அனுப்பிவைத்தார். அந்தப் போட்டியில், பரிசை வென்ற அந்த நூல் பிறகு, 'பாகிஸ்தான் போகும் ரயில்’ (கி ஜிக்ஷீணீவீஸீ tஷீ றிணீளீவீstணீஸீ’) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை மையக்கருவாகக்கொண்டு எழுதப்பட்ட சிறந்த படைப்பு அது. 'தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ், 'தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்’, 'தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரிஸ்’, 'ஐ ஷல் நாட் ஹியர் த நைட்டிங்கேல், தி ஃபால் ஆஃப் பஞ்சாப், ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்’, 'எண்டு ஆஃப் இந்தியா’, 'தில்லி’ என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், ஜோக்ஸ் புத்தகங்களையும் படைத்துள்ளார்.

1957-ல் யோஜனா (தமிழில் திட்டம் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் எனப் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. 1979 முதல் 1980 வரை 'இந்தியா இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ என்ற பத்திரிக்கையில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 1980 முதல் 1983 வரை, 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ பத்திரிக்கையின் ஆசிரியராகப் பணியாற்றினார். பத்திரிக்கையின் சனிக்கிழமை பதிப்பில் தோன்றும் 'வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்’ சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒரே நேரத்தில் வாரிக் குவித்தது.

தன் எழுத்தில் பாலியல் விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் பேசிய குஷ்வந்த்சிங்கிற்கு எதிராகவும் குரல்கள் ஒலிக்காமல் இல்லை. 'குஷ்வந்த் சிங் இனிமேல் எழுதக் கூடாது. அவருடைய எழுத்துக்குக் கட்டுப்பாடும் சென்சாரும் தேவை’ என்று சொன்னார்கள் சிலர். அப்போது சிங் அளித்த பதில் என்ன தெரியுமா? ''பேனாவுக்கான ஆணுறையை யாரும் கண்டுபிடிக்கவில்லை!''

கொண்டாட்டத்தின் மறு பெயர் குஷ்வந்த்  சிங்!

''ப்பா உங்களுக்கு இருட்டைக் கண்டால் பயமா?'' குழந்தை கேட்டது.

''இல்லையே... யார் சொன்னார்கள்? எனக்கு இருட்டைக் கண்டால் பயமென்று?'' அப்பா சொன்னார்.

''பின்னே நீங்கள் ஏன் அம்மாவின் படுக்கையில் ஏறி அவளுடைய போர்வைக்குள் புகுந்துகொள்கிறீர்கள்?''

சிலையானார் அப்பா. குழந்தை மறுபடியும் கேட்டது.

ரு நடிகையிடம் பத்திரிகை நிருபர், ''நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு அந்த நடிகை, ''நான் என் அம்மாவின் காலடித் தடத்தில் நடக்க விரும்புகிறேன். அவளைப்போல் வாழ்நாள் முழுதும் சிங்கிளாக வாழ விரும்புகிறேன்'' என்றாளாம்.

சீக்கியர்களை அவர் அளவுக்கு யாரும் கிண்டல் அடித்ததில்லை. இதோ...

ஓர் அமெரிக்கர், ஒரு ரஷ்யர், ஒரு சர்தார்ஜி என மூன்று பேர் 'லை- டிடெக்டர்’ எனப்படும் உண்மை கண்டறியும் கருவிக்கு முன்னால் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

''நான் 20 பீரை ஒரே நேரத்தில் குடிப்பேன்'' என்றாராம் அமெரிக்கர். அந்த லை-டிடெக்டர் கருவி 'நோ’ என சிவப்பு விளக்கின் ஒளியை உமிழ்ந்தது. உடனே எண்ணிக்கையைக் குறைத்துச் சொல்ல பச்சை விளக்கு எரிந்தது. அடுத்து ரஷ்யர், ''நான் 10 பர்கரை ஒரே வாயில் தின்பேன்'' என்றாராம். வழக்கம்போல சிவப்பு ஒளிர பயந்து போன ரஷ்யர், '' இல்லை இல்லை... ஐந்து பர்கரைத் தின்பேன்’ என்றதும் பச்சை விளக்கு ஒளிர்ந்தது. இறுதியாக சர்தார்ஜியின் முறையும் வந்தது.

சர்தார்ஜி தொண்டயைச் செருமியபடி, ''நான் நினைக்கிறேன்...'' என ஆரம்பித்தாராம். சிவப்பு விளக்கு உடனே ஒளிர ஆரம்பித்ததாம்!

- ஆர்.சரண்

அடுத்த கட்டுரைக்கு