என் இனிய தமிழ், தெலுங்கு, இந்தி ஹீரோக்களே... உங்க எல்லோர்கிட்டவும் சில டவுட்ஸ் கேக்கணும்னு ரொம்ப நாளா அடிமனசுல மணி அடிக்குது. கொஞ்சம் பதில் சொல்லுங்களேன் ப்ளீஸ்!

ஓப்பனிங் சாங்குனு ஒண்ணு வந்துட்டா, 'மேலே இருக்கிறது வானம்டா, கீழ இருக்கிறது பூமிடா, கடல்ல இருக்கிறது மீனுடா, கண்மாயில இருக்குறது தண்ணிடா’னு வாழ்க்கையோட எல்லாத் தத்துவங்களையும்(!) சொல்லி பாசிட்டிவா எல்லோருக்கும் அட்வைஸ் பண்ணுற நீங்களே, கிளைமாக்ஸ்ல உங்க லவ்வர் கழட்டி விட்டுட்டுப் போனவுடனே தாடி வளர்க்கிறீங்க, இல்லேனா மருந்தை வாங்கிக் குடிச்சிட்டு மல்லாந்துடுறீங்களே... அது ஏன்? அப்போ அட்வைஸ்லாம் அடுத்தவங்களுக்கு மட்டும்தானா?

எப்படியும் வில்லனை அடிச்சு நீங்கதான் ஜெயிக்கப் போறீங்க. பின்னே எதுக்கு வில்லன் மூணு தடவை அடிக்கிற வரைக்கும் வெயிட் பண்ணி டைமை வேஸ்ட் பண்றீங்க? அந்த நேரத்தை மிச்சம் பண்ணி அதுக்குப் பதிலா ஹீரோயினை இன்னும் கொஞ்ச நேரம் காட்டினா எம்பூட்டு நல்லா இருக்கும். அட... பசங்க ஆசைப்படுறாங்கள்ல!

ஸ்கூல்மேட்டா இருந்து காலேஜ்மேட்டா இருந்து கடைசியில வேலைக்குப் போயி ரூம்மேட் ஆகிற வரைக்கும் உங்ககூடவேதான் இருக்கார் உங்க ஃப்ரெண்டு. பின்னே ஏதாவது சண்டை வந்தா மட்டும் கராத்தேவுல இருந்து கம்பாட்டம் வரைக்கும் நீங்களாவே தனி ஆளா நின்னு 15 பேரையும் பறக்கவிடுறீங்களே, நீங்க மட்டும் எங்கே போயி தனியா கோச்சிங் எடுத்தீங்க? ஏன் உங்க ஃப்ரண்டெல்லாம் சண்டை போட மாட்டாரா... வேடிக்கை மட்டும் பார்க்கிறாரு?

டூயட் சாங் வந்துட்டா உடனே உங்க லவ்வரைக் கூட்டிட்டு தன்னந்தனியா நடுக்கடலுக்குள்ளே

போயி படகுல நின்னுகிட்டு பாட்டுப் பாடுறீங்க, இல்லேனா பாத்தாலே பயமா இருக்கிற மலை உச்சியில போய் நின்னுக்கிட்டு ரெண்டுபேரும் 'அமளிதுமளி’ங்கிறீங்க. உண்மையிலே அங்கே போனா மரணபீதிதாங்க வரும். உங்களுக்கு மட்டும் எப்புடிங்க ரொமான்ஸ் வருது ரொமான்ஸு?

லவ் பண்ணணும்னு முடிவு எடுத்துட்டீங்க. பிரச்னை இல்லாம நமக்கு செட் ஆகுற மாதிரி லவ்வரா பாத்து செலக்ட் பண்ணினா என்னங்க? ஏன் எப்போ பார்த்தாலும் பண்ணையார் மகளையும் ரவுடி தங்கச்சியையுமே லவ் பண்ணி அடிவாங்கியே சாவுறீங்க? ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிப்போச்சுனா உங்களை யாரு காப்பாத்துறது... உங்க ஃபேமிலியை யாரு மெயின்டெய்ன் பண்றது?

கடைசியா ஒரு பெர்சனல் கேள்வி. அந்தக் காதைக் கொஞ்சம் பக்கத்துல கொண்டு வாங்களேன்... சரி, இந்த வில்லன்கள்கூட சண்டை போடும்போது கேட்கிற கேள்விக்கு சம்பந்தமே இல்லாம சில பஞ்ச் டயலாக்ஸ்லாம் பேசுறீங்களே... அதெல்லாம் நீங்களா யோசிப்பீங்களா, இல்ல எல்லோரும் சொல்லிக்கிறாங்களே, அந்த மாதிரி 15 பேர் கொண்ட குழு ஏதும் வெச்சிருக்கீங்களா? உண்மையைச் சொல்லுங்க!

- ஜெ.வி.பிரவீன்குமார்