Published:Updated:

என்ன அழகு... எத்தனை அழகு!

அழகிய கண்ணே...!

'அழகுக் கலை அரசி’ வீணா குமாரவேல்

கண்களில் எத்தனை வகை... என்பதை முந்தைய இதழ்களில் பார்த்துவிட்டோம். இப்போது, கண்களுக்கு எப்படி மேக் - அப் போடுவது என்பதை, மூன்று மாடல்களின் உதவியோடு பார்ப்போமா..?

'பிள்ளையார் பிடித்து வைத்து விட்டுத்தான் பூஜையை ஆரம்பிக்க வேண்டும்’ என்பதுபோல, 'சிடிஎம்' (சிஜிவி) எனப்படும் க்ளென்ஸர், டோனர், மாய்ஸ்ச்சரைஸர்... ஆகியவற்றைப் போட்டுவிட்டுத்தான் மேக் - அப் ஆரம்பிக்க வேண்டும் என்பதை எப்போதும் மறக்கக் கூடாது!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என்ன அழகு... எத்தனை அழகு!

இப்போது ரியல் மேக் - அப் ஆரம்பம்....

##~##

முதலில் ரஜிதா... இவரைப் போலவே கண்களைச் சுற்றி கருவளையம் பலருக்கும் இருக்கும். சிலருக்கு கண்களைச் சுற்றிலும் உப்பலாகவும் இருக்கும் (பஃபினஸ்). அதையெல்லாம் மறைப்பதற்கு 'ஐ - கன்சீலர்’ அவசியம். இதையடுத்து இடம் பிடிப்பது... ஃபவுண்டேஷன் (முகத்துக்கு அப்ளை செய்யும் ஃபவுண்டேஷன்தான்). கன்னத்தின் நிறம்தான் கண்களைச் சுற்றியும் இருக்க வேண்டும். எனவே, அடர்த்தியான கருவளையம் கொண்டவர்கள்... ஆரஞ்சு வண்ண கன்சீலரையும், சிவப்பாக இருப்பவர்கள் பச்சை நிற கன்சீல ரையும் ஃபவுண்டேஷனோடு மிக்ஸ் செய்து அப்ளை செய்யலாம். கன்னம், கண்களைச் சுற்றி என முகம் முழுவதும் ஒரே நிறத்தை இது கொடுக்கும். இதன் பிறகு, காம்பேக்ட் பவுடர் அப்ளை செய்ய வேண்டும். ஹெவி மேக் - அப் போட விரும்புகிறவர்கள், பிரைமர் பயன்படுத்தலாம்.

'ஐ ஷேடோ' போடுவதற்கு ஒரு ரூல் உண்டு. மூக்கை ஓட்டி இருக்கும் பகுதியில் மெலிதாகத் துவங்கி, போகப் போக அடர்வாக 'ஐ  ஷேடோ'  கொடுக்க வேண்டும். சிலருக்கு ஐ ஷேடோவை எங்கே நிறுத்துவது என்பதில் குழப்பம் ஏற்படலாம். முந்தைய இதழ்களில் சொன்னது போல, மூக்கின் நுனிக்கும்... கண்கள் முடியும் இடத்துக்கும் ஒரு குச்சியை வைத்துப் பார்த்தால்... குச்சியைத் தாண்டி 'ஐ ஷேடோ' போகக் கூடாது.

என்ன அழகு... எத்தனை அழகு!

ரஜிதாவின் கண்கள் சிறியதாக இருப்பதால், பெரிய கண்கள் போன்று காட்ட அவர் விரும்பினார். அதனால் அவருக்கு வெள்ளை நிற ஐ பென்சிலை உள்ளேயும், கறுப்பு நிற ஐ லைனரை வெளியேயும் அப்ளை செய்திருப்பதைக் கவனியுங்கள். கண்கள் சிறியது என்பதால், ஐ லைனர் கூடுமான வரை மெல்லியதாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மஸ்காரா போடுவது, அடுத்த ஸ்டெப். ஆபீஸ் போகும் பெண்கள் மஸ்காரா போட்டுக்    கொள்வதை பகட்டாக உணர்ந்தால், 'டிரான்ஸ்பரன்ட் மஸ்காரா’ பயன்படுத்தலாம்.

வட்டமான கண்கள் கொண்டவர் கேல். இவரின் விழிகள் ஒன்றுக்கு ஒன்று அருகில் இருக்கும் 'குளோஸ்டு செட்’ வகையைச் சேர்ந்தது. தன் தோழி ஒருத்தியின் திருமண ரிசப்ஷனுக்கு கிராண்டாகச் செல்ல விரும்பினார் கேல். அதனால் இவருடைய கண்களை சொக்க வைக்கும் 'ஸ்மோக்கி ஐஸ்’ மாதிரி காட்டியிருக்கிறோம்.

வட்டமான கண்கள் என்பதால் ஐ லைனரை மெல்லியதாகப் பயன்படுத்தாமல், அடர்வாகப் பயன்படுத்தியிருக்கிறோம். கூடுமானவரை அதை கொஞ்சம் நீட்டித்தும் இருக்கிறோம். இவருக்கு ஐ ஷேடோவோடு நிறுத்தாமல், ஜிகினா மாதிரி தோன்றும் ஷிம்மரையும் பயன்படுத்தி இருக்கிறோம். அதோடு, செயற்கையான இமை முடிகளை இவருக்கு ஒட்டியிருப்பதையும் கவனியுங்கள். இதுபோன்ற 'ஸ்மோக்கி ஐஸ்’ போட்டுக் கொள்ளும்போது அது எடுப்பாகத் தெரிய லிஸ்ப்டிக்கை கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். லிப்ஸ்டிக்கே வேண்டாம்... க்ளாஸ் மட்டும் போதும் என்று நிறுத்திக் கொண்டால்கூட ஓகே!

என்ன அழகு... எத்தனை அழகு!

கறுப்பு - வெள்ளை என்ற தீமில் 'ஸ்மோக்கி ஐஸ்’ மேக்கப் போட்டிருக்கிறார் கேல். கோல்ட் - பிளாக், பிங்க் - பர்பிள், லைட் கிரீன் - டார்க் கிரீன் என்றுகூட இதே 'ஸ்மோக்கி ஐஸ்’ மேக்கப் போடலாம். எந்த காம்பினேஷனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை, என்ன கலர் டிரெஸ் போடப்போகிறீர்கள் என்பதையும் மனதில் வைத்து முடிவு செய்ய வேண்டும்.

பாலிவுட் பரிசு வழங்கும் விழா, ஃபேஷன் ஷோ போன்ற இடங்களுக்கு வரும் பெண்கள் இப்படி 'ஸ்மோக்கி ஐஸ்’ மேக்கப் போட்டுக் கொள்ளும்போது தலைமுடியை ஃபங்கியான ஸ்டைலில் அலங்காரம் செய்திருப்பார்கள். இந்த ஃபங்கி ஸ்டைல் தலைமுடியும், ஸ்மோக்கி ஐஸும் ஒன்றோடு ஒன்று இயைந்து போகக் கூடியவை.

என்ன அழகு... எத்தனை அழகு!

ரம்யாவுக்குப் பெரிய கண்கள். அவை இரண்டுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதால்... இதை 'வைடு செட்’ என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். கண்கள் பெரியதாக இருக் கிறது என்பதால் வெள்ளை நிற ஐ லைனர் வேண்டாம். பிளாக் ஐ லைனர் மட்டுமே போதுமானது. இவர் டி.வி. ஷூட்டிங் போவதால் இவருக்கு செயற்கையான இமை முடிகளைப் பொருத்தி இருக்கிறோம். மஸ்காராவும் போட்டு இருக்கிறோம். கண்ணின் கீழ் பகுதி, பிறைநிலா மாதிரி சீராக இல்லாமல் இருந்தாலும், அதை கறுப்பு ஐ லைனரால் பிறை நிலா மாதிரியே மாற்றியிருப்பதையும் கவனியுங்கள்.

ஐ லைனர் சில சமயம் கசிந்து, அழிந்துவிடும். ஜெல் வடிவில் வரும் ஐ லைனரைப் பயன்படுத்தி னால் அது உடனடியாகக் காய்ந்துவிடும் என்பதால்... இந்தப் பிரச்னை இல்லை. யாக குண்டம் முன்னால் உட்காரும் மணப்பெண்களுக்கு, புகையினால் கண்கள் கலங்கி, ஐ லைனர் அழிந்து படுத்தி எடுக்கும். அவர்கள் வாட்டர் ப்ரூஃப் ஐ லைனரைப் பயன்படுத்தலாம்.

கண்கள்... பெண் அழகின் வாசல்!

- மிளிரும்...

படங்கள்: பொன்.காசிராஜன்