Published:Updated:

அறிவிழி - 58

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 58

அண்டன் பிரகாஷ்

Published:Updated:

யாராகிவிட்டது Fire TV.

'இருக்கும் டி.வி. சேனல்களைப் பார்ப்பதற்கே நேரம் இல்லை; இதில் இன்னொரு சேனல் தேவையா?’ எனத் திகில்கொள்ளத் தேவை இல்லை. காரணம், இது டி.வி. சேனல் அல்ல; மாறாக, அமேசான் சென்ற வாரத்தில் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட்Gadget.

அதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், 'Gadget  என்பதற்குத் தமிழ்ப் பதம் என்னவாக இருக்க வேண்டும்?’ எனச் சில மாதங்களுக்கு முன்னால் இந்தத் தொடரில் கேட்டிருந்தேன். பல்வேறு பரிந்துரைகளை அனுப்பிய வாசர்களின் உற்சாகம் என்னைப் பிரமிக்க வைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெற்றி பெறும் பதம் 'பணினி’.@mrbhala1 என்ற ட்விட்டர் கைப்பிடிக்குச் சொந்தக்காரரான பாலமுருகன் தேர்ந்தெடுத்த பதம் இது. குறிப்பிட்ட ஒரு பணியைச் செய்யும் எளிய கணினி எனப் புரிந்துகொள்கிற பதமாக 'பணினி’. ஆக, இனி தொழில்நுட்பம் பற்றித் தமிழில் கட்டுரை எழுதுபவர்கள் பாலமுருகன் தமிழ்ப்படுத்தியிருக்கும் இந்தப் பதத்தைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதினால், அது தமிழுக்கு அழகாக இருக்கும்!

Fire TV-க்கு திரும்பி வரலாம். புத்தகங்களை விற்கும் வலைதளமாகத் தொடங்கிய அமேசான், இன்று மிகப் பெரிய ஊடக நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. இசை, திரைப்படம், தொலைக்காட்சி ஷோக்கள் போன்றவை விநியோகம் செய்வதில் ஆப்பிள், கூகுள், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக இறங்கிவிட்டது. இத்துடன் நின்றுவிடாமல், இவற்றைத் தயாரிக்கும் தொழிலிலும் இறங்கி ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கும் சவால் விடுகிறது.

அறிவிழி - 58

கோடம்பாக்கப் படங்கள், இன்னும் சில வருடங்களில் அமேசானால் தயாரிக்கப்படலாம். இப்போதைக்கு, கணினிகளிலும் கிண்டில் சாதனங்களிலும் அமேசானால் விநியோகிக்கப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்க முடிகிறது. Fire TV சாதனம், உங்களை அவர்களுடன் வலுவாக இணைத்து, நிரந்தர வாடிக்கையாளராக மாற்ற அமேசான் எடுத்திருக்கும் ஸ்மார்ட் முயற்சி.

Fire TV - திரை இல்லாத கிண்டில் சாதனம் என்று எளிதாகச் சொல்லலாம். உங்களது தொலைக்காட்சி சாதனம்தான் திரை. தொலைக்காட்சியுடன் Fire TVயை இணையத்தில் இணைத்துவிட்டால் போதும். கிண்டில் பயனீட்டாளராக இருந்தால், நீங்கள் பார்த்து/படித்து/கேட்டுக்கொண்டிருப்பதை, அதன் சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு ஒரு விரல் சொடுக்கில் கொண்டுசெல்லலாம்.

இந்த Fire TV-யின் மிகப் பெரிய பலம், அவர்களின் சந்தா முறை. Prime எனப்படும் இந்தச் சந்தா திட்டத்தில் இருப்பவர்களுக்கு அமேசானிடம் இருக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களும், டி.வி. ஷோக்களும் இலவசம். 100 டாலர்களுக்கு Fire TVயை விற்கும் அமேசானின் இந்தத் திட்டத்துக்கு வருடச் சந்தாவாக 100 டாலர்களை வசூலிக்கிறது.

சென்ற வாரத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு நிகழ்வைப் பதிவுசெய்ய வேண்டும்.

இணைய இணைப்பே இல்லாத மூன்றாம் உலக நாடுகளுக்கு இணைய இணைப்பைக் கொண்டுசெல்லும் நோக்கத்தில், பலூன்களை விண்வெளியில் மிதக்கவிட்டு அதன் மூலம் கம்பி இல்லா இணைப்பைக் கொடுக்க கூகுள் தீட்டும் Loon (http://www.google.com/loon) திட்டத்தைப் பற்றி இந்தத் தொடரில் பார்த்தோம்.

உலக மக்கள் எப்போதும் இணையத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதில், கூகுளைவிட அக்கறைகொள்ளும் நிறுவனம் ஃபேஸ்புக். www.internet.org என்ற அமைப்பை, பல்வேறு அலைபேசி சாதனத் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து தொடங்கிய ஃபேஸ்புக், அவர்களது தள இயக்கத்துக்கான Data / Bandwidth செலவை பல நாடுகளில் தானே ஏற்றுக்கொண்டது. ஆனால், இது மட்டுமே ஃபேஸ்புக்கில் சேரும் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு, கூகுள் போலவே பிரமாண்டத் திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது.

தானாக இயங்கும் ட்ரோன் விமானங்களை விண்வெளியில் பறக்கவிட்டு, அதிலிருந்து இணைய இணைப்பு கொடுக்கவைப்பதுதான் ஃபேஸ்புக்கின் திட்டம். இது பலூன் திட்டம் போலவே தோன்றினாலும், ஃபேஸ்புக்கின் ட்ரோன் திட்டத்தில் பல சாதகங்கள் உண்டு.

பலூன் போல அல்லாமல் விமானத்தைத் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும். எந்த இடத்துக்கு இணைய இணைப்புகள் அதிகம் வேண்டும் என்பதைக் கண்டறிந்து அந்த இடத்துக்கு நேராக ட்ரோன்களைக் கொண்டுசென்று இணைய இணைப்பு கற்றையை வலுவாக்க இயலும். பூமிப்பந்து முழுக்க நிரப்ப வேண்டும் என்றால், மில்லியன் கணக்கான பலூன்கள் தேவை. ஆனால், ட்ரோன் விமானங்களைப் பயன்படுத்தினால் அத்தனை எண்ணிக்கை தேவை இருக்காது.

பலூன்களின் சராசரி ஆயுள், மூன்று வருடங்கள். இந்த ஆயுள் முடிந்ததும் அவற்றை அந்தரத்தில் அவிழ்த்து விட்டுவிட்டு புதிய பலூன்களைச் செலுத்திக்கொள்ளலாம் என்றுதான் கூகுள் திட்டமிட்டு இருக்கிறது. அது போலவே, பழுதாகிப்போன பலூன்களை மீண்டும் பூமிக்கு வரவழைத்துச் சரிசெய்ய முடியாது. ட்ரோன்கள் அப்படி அல்ல; தேவைப்பட்டால் அவற்றை வரவழைத்துக்கொள்ளலாம்.

இறக்கைகள் இருப்பதால், சூரிய ஒளி இருக்கும் பகல் நேரங்களில் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்துகொண்டு, இரவு நேரத்தில் பேட்டரியில் இயங்குவதை எளிதாக வடிவமைக்க முடியும்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism