Published:Updated:

ஒரு வீட்டுல இத்தனை தலைவர்களா? - இது பிக் பாஸ் அரசியல் வெர்ஷன்!

ஒரு வீட்டுல இத்தனை தலைவர்களா? - இது பிக் பாஸ் அரசியல் வெர்ஷன்!

ஒரு வீட்டுல இத்தனை தலைவர்களா? - இது பிக் பாஸ் அரசியல் வெர்ஷன்!

ஒரு வீட்டுல இத்தனை தலைவர்களா? - இது பிக் பாஸ் அரசியல் வெர்ஷன்!

ஒரு வீட்டுல இத்தனை தலைவர்களா? - இது பிக் பாஸ் அரசியல் வெர்ஷன்!

Published:Updated:
ஒரு வீட்டுல இத்தனை தலைவர்களா? - இது பிக் பாஸ் அரசியல் வெர்ஷன்!

எந்தப் பக்கம் திரும்பினாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி பத்திதான் பேச்சு. 'ஜுலியை டார்கெட் பண்ணுறாங்க', 'கணேஷ் இஸ் எ ஜென்டில்மேன்', 'ஓவியாவுக்கு செம தில்லுனு காக்டெயில் விமர்சனங்கள் குவியுது. இப்ப இருக்குற 14 பேரை மாத்திட்டு கீழே இருக்குறவங்களை அந்த வீட்டுல விட்டா என்னலாம் நடக்கும்? வேறென்ன.. இதுதான்!

மோடி :
    
மே..நரேந்திர தாமோதர்தாஸ் மோடி ஹோ பிக் பாஸ் டீம் ஹே லீடர் ஹை. ஹமாரா விஜய் டிவி ஹே..மேரா பிக் பாஸ் ஹே.. னு ஆரம்பிச்சு தலைவரா பொறுப்பேத்துக்குவார். புதுசா ரூல்ஸ் கொண்டுவர்றோம்னு நினைச்சு பழைய ரூல்சையே தூசு தட்டி அமல்படுத்துவாரு. வீடு க்ளீனா இருக்கணும்னு `ஸ்வச் பிக் பாஸ்`` கொண்டுவருவார். மன் கி பாத்னு நினைச்சு அப்பப்போ தனியே பேசிக்குவார். வானத்துல போற ப்ளைட் சத்தத்தை வச்சே அது எந்த நாட்டுக்குப் போறதுன்னு கணக்குப் பண்ணி டைம்பாஸ் பண்ணுவார். 

ஸ்டாலின் :
    
ஸ்டாலின் பிக் பாஸ் வீட்டுல ஒரு குழுவோட தலைவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடுத்த டீம் தலைவரைக் கேள்வி கேட்டுட்டே இருப்பாரு. கேட்ட கேள்விக்கு எதிரணி பதில் சொல்லலைன்னா கோவப்பட்டு வெளியே கிளம்பிருவாரு பழக்க தோசத்துல. கேஷுவல் டிரஸ் போட்டுகிட்டு நீச்சல் குளத்தைச் சுத்தி வாக்கிங் போவார். ரொம்ப சண்டை வந்தா கிழிஞ்ச சட்டையோட பிக் பாஸ் கேமரா முன்னாடி போய் நின்னு மக்கள்கிட்ட நியாயம் கேட்பார்.  

தமிழிசை செளந்தராஜன் :
    
எது பேச ஆரம்பித்தாலும் 'பாரத பிரதமர் அவர்கள்'னுதான் சொல்லித்தான் ஆரம்பிப்பார். அப்புறம் யார் என்ன கேட்டாலும் 'இவ்வாறு செய்வது எங்கள் நோக்கம் அல்ல. எங்களுக்கு அவசியமுமல்ல'னு சொல்லுவார். 'பிக் பாஸ் வீட்டில் எங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. ஆக, எங்களால் இந்த வீட்டில் நன்றாக காலூன்ற முடியும். பார்க்கத்தான் போகிறீர்கள்'னு கைகளை ஆட்டுவார். 

சீமான் :
    
'பிக் பாஸ் கொடுக்கற துணி எல்லாம் என்னால் போட முடியாது. நான் கருப்பு சட்டைதான் போடுவேன்'னு ஹவுஸ் லீடர்கிட்ட அடம்பிடிப்பார். பிக் பாஸ் ஒரு டாஸ்க்கை படிக்க இவரைக் கூப்பிட்டால் 'என் அன்புத் தம்பிகளே'னு தொடங்கி வாசிச்சு முடிக்கிறதுக்குள்ளே டைம் முடிஞ்சுடும். 'வந்தாரை வாழ வைக்கும் தமிழன் வீட்டில் அடைபட்டுக் கிடப்பதா'னு இவர் அலர்ற சத்தம்தான் நிறைய பேருக்கு அலாரமா இருக்கும்.

தினகரன் :
    
அமைதியாக சிரிச்சுகிட்டே இருப்பார். ஆனா, அப்பப்போ யாருக்கும் தெரியாம பிக் பாஸையே கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுவார். மாட்டிக்குவார். 'நான் மக்களின் தலைவர்'னு சொல்லி டார்ச்சர் பண்ணுவார். இவருக்கு அந்த வீட்டுல நிரந்தர நண்பர்களும் இல்ல, நிரந்தர எதிரிகளும் இல்ல. இவருக்கு யார் சப்போர்ட் பண்றாங்க, யார் சண்டை போடுறாங்கன்னு முடிவு பண்ணவே பத்து சீசன்கள் ஆகும் போல.

வடிவேலு :
    
'அய்யா அய்யனாரே உன் புள்ளைய எப்படியாச்சும் காப்பாத்து'னு வேண்டிகிட்டே பிக் பாஸ் வீட்டுக்குள் காலெடுத்து வைக்குறார் வைகைப் புயல். ஸ்டாலினைப் பார்த்து லேசா சிரிக்குறவர் உள்ளே இருக்குற அரசியல் தலைவர்களைப் பார்த்துட்டு பம்முவார். டெய்லி காலைல எழுந்ததும் 'ட்ரங்கன் மங்கி' ஸ்டைல்ல எக்ஸர்சைஸ் பண்ணி கேமராவையே பல்லைக் காட்ட வைப்பார். யாராவது சண்டை போட்டா... 'ஏரியாவுக்கு வா வா'னு சொல்லி எஸ்கேப் ஆவார்.

ஓ.பன்னீர் செல்வம் :
    
யார் என்ன பண்ணாலும் அமைதியாவே இருப்பார். ஆனா, தினகரன் வேல செய்யலைன்னா மட்டும் கேமரா முன்னால வந்து போட்டுக்கொடுப்பார். காலையில டீ, காபி கொடுத்து எல்லாரையும் எழுப்புறது இவர் ஸ்டைல். சண்டை ஏதாவது வந்தா ஓரமா உட்கார்ந்து தியானம் பண்ணுவார். 'அம்மாவின் ஆன்மா ஆணையிட்டால்தான் செய்வேன்'னு ஒவ்வொரு டாஸ்க் ஆரம்பிக்கும்போதும் கேமரா பார்த்து சொல்லுவார்.

கேப்டன் விஜயகாந்த் :

உள்ளே வந்து வீடு முழுக்க தேடிப் பார்த்துட்டு, 'எங்கே என் தம்பி பிரபாஸ்'னு கேட்பார். 'அய்யோ கேப்டன் அது பிக் பாஸ்'னு சொன்னா கண்ணு சிவக்கும், கன்னம் துடிக்கும், சொல்றவர் பின்னந்தலை அதிரும். 'அப்பப்போ வீட்டை மிஸ் பண்றேன்'னு கண் கலங்குவார். வீட்டோட நிதி நிலைமையை எல்லாம் பக்காவா மெயின்டெயின் பண்றதுல இவரை மிஞ்ச ஆளே இல்ல.

ஆர்.ஜே. பாலாஜி :
    
காலைல பிரஷ் பண்றப்போ திறக்குற வாய் நைட் தூங்குறப்போதான் மூடும். வீட்டுக்குள்ளேயே க்ராஸ்டாக் பண்ணி இருக்குறவங்களை வெறுப்பேத்துவார். 'நான் ரொம்பப் பெரிய ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்'னு சொல்லி எல்லாரையும் மேட்ச்சுக்குக் கூப்பிடுவார். அப்பப்போ மைக் இருக்குற மாதிரி பாவ்லா பண்ணிகிட்டு ஏதாவது கருத்துச் சொல்றது இவரோட மெயின் டைம்பாஸ். 

எடப்பாடி பழனிசாமி :
      
பார்க்க ஒரு குழுவோட தலைவர் மாதிரி இருந்தாலும் மோடியோட ஸ்லீப்பர்செல் தான் இவர். மோடி என்ன முடிவெடுத்தாலும் முதல்ல ஓகே சொல்றது இவர்தான். என்ன கேள்வி கேட்டாலும் ஒரு வார்த்தைல பதில் சொல்லிட்டு ஒதுங்கிக்குவார். இவரோட செய்கைகள் பிடிக்காம ஸ்டாலின் குழு எழுந்து பொய் நீச்சல் குளம் பக்கத்துல உட்கார்ந்துக்குவாங்க. 

டிடி :
    
சும்மாவே ஹைப்பர் ஆக்டிவ் நம்ம டி.டி. இதுல ஒரு வீட்டுக்குள்ள போட்டு அடைச்சா? காலைல, சாயங்காலம்னு ரெண்டு வேளையும் வீட்டுல இருக்குறவங்களைப் பேட்டி எடுக்குறதுதான் இவங்களோட வேலை. யாராவது பகல்ல தூங்கினா டிடியை சிரிக்க சொல்லிதான் எழுப்பிவிடுவாங்க. இவங்களும் பாலாஜியும் சேர்ந்துட்டா அப்புறம், 'ஒய் பிளட் சேம் பிளட்தான்'.

கோவை சரளா :
    
பழக்க தோஷத்துல வடிவேலு கூட வந்த நாள்ல இருந்தே வாக்குவாதம் பண்ணுவார். 'என்னை நீயா நானால கூப்பிட்டாக, சூப்பர் சிங்கர்ல கூப்பிட்டாக, என் கெரகம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன்னு அடிக்கடி சலிச்சுக்குவார். இருக்குற எல்லாத் தலைவர்களையும் பாரபட்சம் பார்க்காம கலாய்ச்சுத் தள்ளுவார்.

ரோபோ சங்கர் :
    
விஜய் டிவியோட ஆஸ்தான ஆர்ட்டிஸ்ட் இல்லாம இந்த ஷோ எப்படி நடக்கும்? இவர் பண்ணுற மிமிக்ரில அடிக்கடி யாரு ஒரிஜினல் விஜயகாந்த்னு வீட்டுல இருக்குறவங்க குழம்பிப் போவாங்க. ஸ்நேக் டான்ஸ், ட்ரங்கன் டான்ஸ்னு எக்கச்சக்க வெரைட்டி காட்டி  என்டர்டெயின் பண்ணுவார் இந்த ரோ... ரோ... ரோபோ!  

டி.ஆர் :
    
'சிம்பு பேமஸ் டான்சுக்கு.. ரஜினி பேமஸ் மாஸுக்கு.. நா வந்துடேன்டா பிக் பாசுக்கு... டன்டனக்கா'னு சவுண்டோட என்ட்ரியானா அப்புறம் வெளியே போகிறவரை இசை மழைதான். ஏதாவது வேணும்னா கேமரா முன்னால ஆப்ரிக்கன் மியூசிக் போட்டு கேட்பார். சத்தம் தாங்க முடியாம அவங்களே கதவைத் திறந்து கையில கொடுத்துட்டு போயிடுவாங்க. இவரை வச்சே இந்த டீம் வேண்டியதை சாதிச்சுக்கும்.