குஷ்பு படத்தில் அர்விந்த் கெஜ்ரிவால்! ஆச்சர்யமா இருக்குல்ல? ஆனால் இது நம்ம குஷ்பு இல்லை. குஷ்பு ரங்கா. கவனத்தை ஈர்த்த 'ஷிப் ஆஃப் தீசியஸ்’ படத்தின் கதையை அதன் இயக்குநர் ஆனந்த் காந்தியோடு சேர்ந்து எழுதியவர். இவரின் 'கன்டினியம்’ என்ற குறும்படம் அகில உலகத் திரைப்பட விழாக்களில் ஹிட். இவரும் இவரது பள்ளித்தோழன் குறும்பட இயக்குநர் வினய் சுக்லாவும் ( ஹெச்.பி.ஓ சேனல் நியூயார்க் நகரில் நடத்திய குறும்படப் போட்டியில் சிறந்த இயக்குநர் விருது பெற்றவர்) கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக ஆம் ஆத்மி கட்சியின் தோற்றத்தையும் அர்விந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்துவருபவர்கள். நாடு முழுவதும் பயணம் செய்து ஆம் ஆத்மி பற்றி 'ப்ரொபோசிஷன் ஃபார் ரெவல்யூஷன்’ (புரட்சிக்கான அறைகூவல்)என்ற டாக்குமென்ட்ரி படத்தை உருவாக்கிவருகிறார்கள்.

இந்தக் குறும்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் இப்போ இணையத்தில் செம ஹாட். அதிகம் ஆம் ஆத்மி பார்ட்டிகளால் ஷேர் செய்யப்படுகிறது. ஆனால் 'ஷிப் ஆஃப் தீசியஸ்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் காந்தி இதனை மறுத்துள்ளார்.

''இந்தப் படத்தில் அர்விந்த் கெஜ்ரிவாலின் பாசிட்டிவ் விஷயங்களோடு ஜன்லோக்பால் அமைப்பின் சாதக பாதக விஷயங்களையும் தீவிரமாக அலசி ஆராய்ந்து ஸ்கிரிப்ட் அமைத்துள்ளோம். டீஸரைப் பார்த்த அர்விந்த் கெஜ்ரிவாலே எங்களைத் தொடர்புகொண்டு தன்னைப்பற்றிய நெகட்டிவ் பார்வைகளையும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். நடுநிலைமையோடு அந்த அமைப்பைப் பற்றியும் மக்களிடையே உண்டாகி உள்ள ஜன்லோக்பால் தாக்கத்தையும் பதிவு செய்திருக்கிறோம். அவரைப்பற்றிவரும் எதிர்மறை விமர்சனங்களையும் நிச்சயம் பதிவு செய்யப் போகிறோம்'' என்கிறார்.

''அராப் ஸ்பிரிங்ஸ் என வர்ணிக்கப்படும் அரபு நாடுகளில் சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் அடையாளமாகத்தான் ஆம் ஆத்மியின் உருவாக்கத்தைப் பார்க்கிறேன். அதிலிருந்து எழுந்ததுதான் இந்த டாக்குமென்ட்ரி ஐடியா. இதற்காக செல்போன் கேமராவில், நடந்த விவாதக் கூட்டத்தில் ஆரம்பித்து சமீபத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கப்பட்ட சம்பவம் வரை வீடியோ பதிவுகளாகவே தொகுத்திருக்கிறோம். விறுவிறுப்பான வர்ணனைகளோடு தயாராகி இருக்கிறது. இவ்வளவு பெரிய புரோஜெக்ட்டுக்கு நாங்கள் நிர்ணயித்திருக்கும் தொகை 12 லட்சம் மட்டும்தான். எங்கள் கைக்காசைப் போட்டு எடுக்க முடியும். ஆனால் இதையும் மக்கள் பணத்தில் எடுப்பதுதான் ஆம் ஆத்மிக்கு நாங்கள் காட்டும் நிஜ மரியாதையாகவும் இருக்கும்'' என்கிறார் படத்தை இயக்கிய குஷ்பு ரங்கா.

புரொமோவுக்கே தடை கோரி கோர்ட் போயிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர்.

போஸ்ட் புரொடக்ஷனின்போது கன்னத்தில் அறையும் சம்பவங்கள் தொடராமல் இருக்க வேண்டும் கடவுளே!

- ஆர்.சரண்