'என் மகன் சண்முகப் பாண்டியனோடு நானும் நடிக்கப்போறேன் மக்கழே...’னு கேப்டன் சொன்னாலும் சொன்னார். ஒட்டுமொத்த தமிழ்நாடும் அலறிக்கிடக்கிறது. 'எலெக்ஷன் டைம்ல இந்த விஷப்பரீட்சை தேவையா கேப்டன்?’ என்பதே தே.மு.தி.க தொண்டனின் மைண்ட் வாய்ஸ். ஆனாலும் கேப்டன் கேட்பாரா என்ன? ஒருவேளை 'குக்கூ’ படத்தில் தினேஷ§க்கு பதில் கேப்டன் நடிச்சிருந்தார்னா எப்படி இருந்திருக்கும்? கற்பனையை ஓட்டுவோமா?

ஆரம்பத்துலேயே அலெர்ட்டா இருந்துக்கங்க. கேப்டனுக்கு ஏற்ற ஜோடி இன்னிய தேதிக்கு தமிழ் சினிமாவிலேயே... ஏன் உலக சினிமாவிலேயே நமீதா மட்டும்தான். ஏற்கெனவே 'எங்கள் அண்ணா’ படத்தில் இந்த காம்போ ஹிட் அடிச்சதனால, திரும்பவும் 'குக்கூ’ல ஒண்ணா நடிக்கிறாங்கப்பா. ரயிலுக்கும் கேப்டனுக்கும் 'செந்தூரப் பூவே’ காலத்துப் பந்தம். அதனால முதல் சீன்லேயே ரயில்ல வர்றாரு கேப்டன். கண்ணு தெரியாத அவர் 'சின்ன மணிக்குயிலே...’னு பாட்டுப் பாடி டார்ச் லைட் விற்கிறார். தலையில் பெட்ரோமாக்ஸ் லைட்டைக் கட்டியபடி ஒவ்வொரு பெட்டியாகப் போய் விற்கும்போதே எல்லோரும் அவரது திறமையைப் பார்த்துப் பொருளை வாங்குகிறார்கள். கண் பார்வையற்ற நமீதாவை அவரின் தோழிகள் கேப்டனுக்கு அறிமுகப்படுத்திவைக்க, பார்வை இல்லாவிட்டாலும் கண்கள் சிவக்க கேமராவை நேருக்கு நேராகப் பார்த்து, 'ஏ புள்ள சுதந்திரக்கொடி. நான் தாய்நாட்டையும் தேசியக் கொடியையும் என் உசிரா நினைக்கிறவன். அப்படித்தான் உன்னையும்’ என்று சொல்லி விறைப்பாய் நடந்துபோகிறார். பின்னணியில் தே.மு.தி.க கொடியும் தேசியக் கொடியும் படபடக்கின்றன. நமீதாவுக்கு அதுவரைக்கும் ஒன் சைடாய் வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்த காதல் கன்ஃபார்ம் ஆகுது. அந்த இடத்துல ஃபாஸ்ட் பீட்டில் 'செக்கச் செக்க சிவந்த பொண்ணு... இந்த சிங்கத்துக்கு சமைஞ்ச பொண்ணு’ என்ற 'வல்லரசு’ பாட்டைப் போடுகிறார்கள். பாடல் முடிந்ததும்தான் தன் அண்ணன் தன்னை ஜிலாக்கியிடம் மூன்று லட்சத்துக்காக கட்டிக்கொடுக்கும் விஷயம் நமீதாவுக்குத் தெரியவருகிறது. 'நான் கட்டினா கேப்டனைத்தான் கட்டுவேன்’ என அழுது அடம்பிடிக்கும் நமீதாவிடம் கோபப்பட்ட அண்ணன் 'ஏன்டி... அந்தக் கண்ணு தெரியாதவன்கிட்ட அப்படி என்னடி இருக்கு?’ என கேட்கிறார். அங்கே ஓப்பன் பண்ணுகிறார் தன்னோட ஃப்ளாஷ்பேக்கை.

கேப்டன் பாட்டுப் பாடி டார்ச்லைட் விற்கிறார். 'மக்கழே... நம்ம பி.எம்-மை டெல்லியில நான் சந்திச்சப்போ, மக்கள்தொகை மேட்டரை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டார். பவர்கட்டுக்கும் ஜனத்தொகைக்கும் நிறைய சம்பந்தம் உண்டு மக்கழே... அதனால தயவுசெஞ்சு இந்த டார்ச்லைட்டை ஒருவாட்டியாச்சும் வாங்கிட்டுப் போங்க மக்கழே. இந்தியாவோட மக்கள்தொகை 1,256,795,497. ஒரு வருஷத்துக்கு 1,55,31,000 பேரு பிறக்கிறாங்க. ஒரு மாசத்துக்கு 12,73,033 பேரு. ஒரு நாளைக்கி 42,434 பேரு. ஒரு மணி நேரத்துக்கு 1,768 பேரு. ஒரு நிமிஷத்துக்கு 19 பேரு’ - கேப்டனின் புள்ளி விபரத்தைப் பார்த்ததும் செம உற்சாகமாகி எல்லோரும் டார்ச்லைட்டை வாங்குகிறார்கள். அப்போது நமீதா குறுக்கே புகுந்து கலாய்க்கிறார். 'ஒரு நிமிஷத்துக்கு 29 பேர் என்பதுதான் சரியான கணக்கு. உங்க புள்ளிவிபரத்துல தப்பு இருக்கு’ என்கிறார். கடுப்பான கேப்டன், 'ஏய் புள்ள... உன் பேரு என்ன?’ எனக் கேட்கிறார். 'ஆங்... சுதந்திரக்கொடி’ என்றதும், 'இனி உன் பேரை தே.மு.தி.க கொடினு மாத்தி வெச்சுக்க... தமிழ்நாட்டுக்கே தெரியும் நான் யார்னு’ என ஸ்க்ரீனைப் பார்த்துப் பேசுகிறார். கூகுளில் சர்ச் செய்து ஒருவர், ''ஆமாம் அவர் கரெக்ட்டாத்தாம்மா சொல்லி இருக்கார்’ என்றதும் ஸாரி கேட்பதற்காக கன்னத்தைத் தொடுகிறார். இதுநாள் வரை பெண்ணின் ஸ்பரிசம் படாத கேப்டனுக்குக் காமம் தலைக்கேற 'ஒத்த நொடியிலதான்’ பாடலை 'கடை வீதி கலகலக்கும்’ மெட்டில் ஈவ் டீஸிங் பாடலாகப் பாடி டான்ஸ் ஆடுகிறார்.

இப்படி ஒரு மொக்கை ஃப்ளாஷ்பேக் முடிஞ்சதும் அண்ணன்காரன் வெயில் நேரத்துல வெந்நீர் குடிச்ச எஃபெக்ட்டுக்குப் போக மாட்டானா? செம கடுப்பாகி இரவோடு இரவாக ஜிலாக்கிக்குக் கல்யாணம் செய்து கொடுப்பதற்காக வேறு ஊருக்கு ஷிஃப்ட் ஆகிறான். எல்லா சிம்மையும் உடைத்துப் போட்டுவிட்டு புது சிம்மைப் போட்டு தன் மொபைலை ஆன் செய்கிறான் நமீதாவின் அண்ணன். முதல் காலே கேப்டனிடமிருந்து. ஷாக்கான அண்ணன்காரன், 'ஏய்... ஏய்ய்ய்ய்... எப்ப... எப்படிடா இந்த நம்பரை கண்டுபிடிச்சே?’ என குரல் நடுநடுங்கக் கேட்கிறான்.

'ஐ ஃபில் ஃபைண்ட் யூ... அண்ட் கில் யூ’ என்று சொல்லி போனை கட் செய்கிறார் கேப்டன்.

பயந்துபோன ஜிலாக்கியும் நமீ அண்ணனும் அங்கிருந்து கள்ள ரயிலேறி மும்பைக்குச் செல்கிறார்கள். மும்பை ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி கண் தெரியாத நமீதாவைத் தரதரவென இழுத்து நடந்து போகும் அவர்களுக்கு ஷாக். அஞ்சாம் நம்பர் ப்ளாட்ஃபார்மில் மும்பை போலீஸ் கமிஷனர் தன் டீமோடு நிற்கிறார். அவர் ஒரு சிங், ஐ.பி.எஸ் அதிகாரி. 'யூ ஆர் அண்டர் அரெஸ்ட்’ என்று நமீ அண்ணனையும் ஜிலாக்கியையும் கைது செய்கிறார். அவரே க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை உடைக்கிறார்.

'இத்தனை நாள் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷன்ல அஞ்சாம் நம்பர் ப்ளாட்ஃபார்ம்ல அஞ்சாம் நம்பர் படிக்கட்டுல படுத்துட்டு ரயில்ல பொருள் விற்ற தமிழ் வேற யாரும் இல்லை. ஹி இஸ் இண்டியன் இன்டலிஜென்ஸ் ஸ்பெஷல் ஆபீஸர் தமிழ்ச்செல்வன் ஐ.பி.எஸ். பாகிஸ்தான் தீவிரவாதிகளை வேட்டையாடுறதுக்காக ஸ்பெஷலா அமெரிக்க அதிபரால் நியமிக்கப்பட்டவர். அவருக்கு புல்லட்டை விட ஷார்ப்பான ஐ பவர் உண்டு'' என்றதும் மான்டேஜ் சீன்களாக காலேஜில் பென்சில் மீசையோடு முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் கேப்டன், புரொபஸர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே கையைத் தூக்கி அடுத்து எழுதப்போவதைச் சொல்கிறார். ஹைதராபாத் போலீஸ் அகாடமியில் கோல்டு மெடல் வாங்குகிறார். தீவிரவாதிகளை அழிக்கும்போது புல்லட்களிலிருந்து லாவகமாகப் பாய்ந்து தப்பிக்கிறார். கண்ணிலிருந்து வரும் வெளிச்சத்தில் டிரான்ஸ்ஃபார்மர் வெடிக்கிறது.

நமீதாவின் அண்ணனும் ஜிலாக்கியும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதைத் தனியாகச் சொல்லணுமா என்ன? சின்ன வயதிலிருந்து இந்த மேட்டரே நமீதாவுக்குத் தெரியாது என்பதும் ஸ்பெஷல் ட்விஸ்ட். சோகமாய் அஞ்சாம் நம்பர் ஃப்ளாட்ஃபார்மில் நிற்கும் நமீதாவைத் தொடுகிறது ஒரு முரட்டுக் கை. அது நாளைய தமிழ்நாடே நம்பி கட்டுற கம்பிக் கை. அட... கேப்டனேதான்!

-ஆர்.சரண்