துரித உணவகங்கள் என்றால், சவுண்டு சர்வீஸ் கடைகளைப்போல் மினுக்கும் பல வண்ண சீரியல் செட் பல்புகள் எரிந்துகொண்டிருக்க வேண்டும்.

தொலைதூரப் போக்குவரத்தின்போது இடையில் வரும் மோட்டல் உணவகங்கள் என்றால், நள்ளிரவு நேரத்திலும் நாம் கேட்டிராத கானா பாடல்கள் சத்தமாக ஒலிக்க வேண்டும். இரட்டை அர்த்தப் பாடல்களுக்கு கூடுதல் வரவேற்பு உண்டு.

'உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பதெல்லாம் பலசரக்குக் கடைகளுக்குப் பொருந்தாது. ஆமாம்... உப்பு மூட்டைகள் மட்டும் கடைக்கு வெளியே மழையிலும் வெயிலிலும் கவனிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டிருக்கும்.

பஞ்சர் போடும் கடையென்றால், கண்டிப்பாக ஒரு கிழிந்த டயரைத் தூக்கில் தொங்கவிட வேண்டும். 'பஞ்சரான பைக்குகள் வந்தால் கிழிச்சுத் தொங்கவிட்டுடுவோம்’ என்று சொல்லாமல் சொல்கிறார்கள்போலும்.

பழச்சாறுக் கடைகள் என்றால், கண்டிப்பாகக் கடையின் முன்புறத்தில் சாத்துக்குடிப் பழமாலை தோரணம் கட்டப்பட்டிருக்க வேண்டும். வேறு பழங்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சாத்துக்குடியேதான் வேண்டும்.

சிலேட், சாக்பீஸை மாணவர்கள் மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள். ஆமாம்... காய்கறிக் க¬டகளில் விலை எழுதுவதற்கு சிலேட், சாக்பீஸைத்தான் பயன்படுத்த வேண்டும்.

பிரியாணிக் கடையென்றாலே மஞ்ச கலரு எழுத்துப் பலகைதான் வைக்க வேண்டும். சென்னை பிரியாணிக் கடைகள் என்றால் கண்டிப்பாகப் பெயரில் தலப்பாகட்டு சேர்த்து தலப்பாகட்டுக்கு முன்னால், ஏதாவதொரு வார்த்தையைக் குட்டியூண்டாகச் சேர்க்க வேண்டும்.

பெரிய ஓட்டல்களில் டிப்ஸ் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்துவதற்காகவே டிப்ஸ் பணம் பறக்காதபடி மெனு கார்டுகள் புத்தகம் போன்றும் கனமாகவும் தயாரிக்கப்பட வேண்டும்.

ஓட்டல்களில் சாப்பாடு தயாராக இருக்கிறதோ இல்லையோ, நடக்கும் பாதையை அடைத்தபடி சாப்பாடு தயார் என்ற அறிவிப்பு போர்டு ஒன்றைக் குறுக்காக நிறுத்திவைக்க வேண்டும்.

சிறிய ஜவுளிக் கடைகள் என்றால், துவைத்த துணிகளைக் காயப்போடுவதுபோல் வாசலை அடைத்துப் புத்தாடைகளைத் தொங்கவிட வேண்டும்.

மருத்துவமனை, பலசரக்குக் கடை என பல்வேறு இடங்களில் காத்திருக்கும் சூழல் இருந்தாலும் சலூன் கடைகளில் மட்டும் கத்தி முனையில் அரசியல் பேசுவதற்காகக் கண்டிப்பாக தினசரிப் பத்திரிகை ஒன்று வாங்கிப் போட்டிருக்க வேண்டும்!

வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்