'பாபா’ - ரஜினி இஷ்டப்பட்டு எடுத்து கஷ்டப்பட்ட படம். படத்தோட ரிசல்ட் என்னன்னு முன்னாடியே தெரிஞ்சோ என்னமோ, 'கதம் கதம்’னு படத்தில் பன்ச் டயலாக்கும் வெச்சிருப்பார் ரஜினி. ஆனா, அந்தப் படத்தோட பாட்டு இப்படி காமெடி ஆகும்னு ரஜினியும் நினைச்சிருக்க மாட்டார். இமயமலையில் மூணு நூற்றாண்டு தாண்டி வாழ்ற பாபாவும் நினைச்சிருக்க மாட்டார். வோடஃபோன் விளம்பரம்தாங்க அது! காரில் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் இளைஞனுக்கு வயிற்றைக் கலக்குகிறது. எங்கேடா கக்கூஸ் இருக்கும் என்று துடியாய்த் துடிக்கிறான். பின்சீட்டில் அமர்ந்திருக்கும் குறும்புக்கார இளம்பெண் வோடஃபோன் மியூசிக்கை ஆன் செய்கிறாள். பாடல் ஒலிக்கிறது 'சக்தி கொடு...’. இளைஞனுக்கோ முடியலை! ஒரு பெட்ரோல் பங்கில் கார் ஒதுங்க, இறங்கி ஓட்டமாய் ஓடுகிறான். அங்கே கழிப்பறைக் கதவு மூடியிருக்கிறது. அவஸ்தையில் நெளிகிறான். பாடல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது, 'இறைவா’. எவ்ளோ ஃபீல் பண்ணி ரஹ்மான் இந்தப் பாட்டைப் போட்டிருப்பார். இப்படிக் கஷ்டப்பட்டு ஃபீல் பண்ணினதை கக்கா போற விஷயத்தோட கோத்து காமெடி பண்ணிட்டீங்களே மக்கா!

ரஜினியைப் பத்திப் பேசும்போது மோடி சந்திப்பை லூஸ்ல விட்டுட முடியுமா? சென்னை விமான நிலையத்தில் இருந்து எங்குமே டீ கிடைக்காததால், ரஜினி வீட்டுக்குப் போய் டீ சாப்பிட்டிருக்கிறார் மோடி. சிவகுமார் வீட்டுக்குப் போனால் சன்ரைஸ், ப்ரூ காபி என்று ரெண்டு கிளாஸ் காபி மோடிக்குக் கிடைத்திருக்கும். அதுவும் விருந்தாளிங்க வீட்டுக்கு வந்தால் எக்ஸ்ட்ரா காபித்தூள் தேவை என்று கார்த்திக்கு நன்றாகவே தெரியும். ஆமா, 'டீ விற்ற மோடிக்கே டீ கொடுத்த தலைவா’னு ஏன் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் அடிக்கவில்லை?

'டாடி எனக்கு ஒரு டவுட்டு’ நிகழ்ச்சியை டி.வி-யில் பார்க்கும்போது எனக்கு இந்த டவுட்டும் கூடவே சேர்ந்துவருகிறது. இந்த நிகழ்ச்சி குழந்தைகள் மத்தியிலும் இளைஞர்கள் மத்தியிலும் ஹிட். அதுவும் மகன் 'டாடி எனக்கு ஒரு டவுட்டு’ என்று அப்பாவை ஓங்கிக் குத்தும்போது எல்லாம் உற்சாகமாய் ரசிக்கிறார்கள். எல்லோருக்குமே அப்பா மேல் இருக்கும் சொந்தக் கடுப்புதான் இப்படி வெளிப்படுகிறதோ?

'நான் சிவப்பு மனிதன்’ படத்தில் விஷால் அவ்வப்போது தூங்கிவிடுவது தங்கள் கட்சியை இழிவுபடுத்துகிறது என்று கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் தேவகௌடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஏன் அறிக்கை விடவில்லை?