'எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது’ என்ற ரஜினியின் பன்ச் டயலாக்குக்கு உண்மையிலேயே பொருத்தமானது மரணம்தான். உலகமெங்கும் சமீபகாலங்களில் நடந்த சில வினோதமான மரணங்கள் இவை.

2013 பிப்ரவரியில் அமெரிக்காவின் ஒக்கலொகாமா மாகாணத்தில் டேனி வன்ஸாண்ட் என்பவர் அவரது வீட்டு ஹாலில் அமர்ந்தபடியே எரிந்துபோயிருந்தார். விருந்துக்குப் போயிருந்த குடும்பத்தினர் வந்து கதவைத் தட்டியும் திறக்கவில்லை என்றதும் உடைத்து நுழைந்துள்ளனர். டி.வி ஓடிக்கொண்டிருக்க, அனைத்துப் பொருட்களும் அப்படியே இருக்க, டேனி மட்டும் எரிந்துபோயிருக்கிறார். போலீஸும் தலைகீழாய் நின்றுபார்த்தும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லையாம். அவருக்குக் கீழே இருந்த மேட்கூட எரியாமல் இருந்திருக்கிறது.

இது நடந்தது வெர்ஜினியாவில்... அந்தப் பகுதியில் பாம்புப் பாதிரியார் மாக் வொல்போர்ட் ரொம்ப ஃபேமஸ். சர்ச் பிரசங்கங்களுக்குக் கொடிய விஷமுள்ள பாம்பினை எடுத்துவந்து கையில் வைத்துக்கொண்டே பிரார்த்திப்பாராம். கிறிஸ்துவத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பவர்களைப் பாம்பு தீண்டாது, தீண்டினாலும் விஷம் ஏறாது என்று உறுதியாக நம்பி வந்தாராம். அதை வலியுறுத்தத்தான் எப்போதும் பாம்புடனே கூட்டங்களுக்கு வரும் அவரை அந்தப் பாம்பு தொடையில் கடித்துவிட்டது. உடனே பிரேயர் செய்து விஷத்தில் இருந்து மீள்கிறேன் என்று அறைக்குள் போனவர் வரவே இல்லை. போலீஸ் வந்து பார்க்கும்போது இறந்துகிடந்தாராம் பாம்புப் பாதிரியார்.

மனைவிக்குத் துரோகம் செய்யும் கணவர்களால் இப்படி ஒரு நன்மையா என்று ஆச்சரியப்படவைத்த சம்பவம் அரிசோனாவில் 2012-ல் நடந்தது. வில்லியம் மார்ட்டினியாஸ் என்கிற ஜாலிப் பேர்வழி மனைவிக்குத் தெரியாமல் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் தன் நண்பர் வீட்டில் ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கும்போது இறந்து போனார். அளவுக்கு அதிகமாக உற்சாகத்தில் ஈடுபட்டால் உயிருக்கு ஆபத்து என்று வில்லியத்திடம் சொல்லாத மருத்துவருக்குக் கண்டனம் தெரிவித்து அவரின் மனைவிக்கு மூன்று மில்லியன் டாலர்களை வழங்க உத்தரவிட்டார் நீதிபதி. இந்தப் பணம் போதாது என்று அப்பீல் போயிருக்கிறார் மனைவி.

'பஞ்சதந்திரம்’ படத்தில் ஆளுயர கேக்கிற்குள் இருந்து ரம்யா கிருஷ்ணன் வெளிவருவார். மேலை நாடுகளில் நடக்கும் பேச்சுலர் பார்ட்டிகளில் இது சகஜம். அப்படி ஒரு பார்ட்டியை இத்தாலியின் கொசென்சா நகரில் ஒரு நண்பரின் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவரின் நண்பர்கள் ஏற்பாடு செய்திருக்கின்றனர். அப்போது வெட்டுவதற்காக ஆர்டர் செய்த கேக்கினுள் ஒரு பெண்ணை அமரவைத்து வெட்டும்போது உள்ளிருந்து எழச்செய்ய ஒரே ஒரு நண்பர் மட்டும் ரகசிய பிளான் செய்திருக்கிறார். அதன்படி பேக்கரிக் கடைக்காரரின் ஏற்பாட்டின்படி பெண் ஒருவரை மரக்கட்டையால் செய்த பெட்டியினுள் அமரவைத்து அதன் மேல் கேக் வைக்கப்பட்டது. பார்ட்டிக்கு உரிய நண்பர் வெட்டும்போது மட்டுமே அந்த பெண் வெளியே வர முடியும். பார்ட்டி துவங்கிய நிலையில் கேக் ஆர்டர் செய்த நபர் நெஞ்சுவலியால் இறந்து போனார். அடுத்த நாள் காலையில் பேக்கரிக்காரர் சொல்லித்தான் உள்ளே பெண் இருப்பது தெரிந்து கேக் இருந்த பெட்டியை திறந்து பார்த்தால், உள்ளிருந்த பெண்ணும் இறந்துபோயிருக்கிறார். பிரேதப் பரிசோதனையில் கேக் ஆர்டர் கொடுத்தவர் இறந்த அதே நேரத்தில்தான் இவரும் இறந்திருக்கிறார்!

- செந்தில்குமார்