தமிழ் சினிமாவில் இது புதுப்புது நோய்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் சீஸன். அதிர்ச்சியில் தூங்கி விழும் நார்கோலெப்சியை 'நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால் மூலம் அறிமுகப்படுத்தினார்கள். இனி அடுத்து என்னென்ன டிஸ்ஆர்டர்களை வைத்து சினிமா பண்ணலாம் என சின்னதாய் ஒரு யோசனை. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல.

பிகா: ( Pica: the urge to eat non-food substances ) சாப்பிடும் பொருட்களைத் தவிர கீழே கிடக்கும் தட்டுமுட்டு சாமான்களைச் சாப்பிடும் வினோதப் பழக்கம் உள்ள ஹீரோவை சின்ன வயதிலேயே பொருளே இல்லாத தனி அறையில் அவரைத் தூங்கவைக்கச் செய்கிறார்கள். அவர் வளர்ந்து லட்சுமி மேனன் போன்ற ஒரு ஃபிகர் வந்து இதெல்லாம் சாதாரண விஷயம்தான் எனப் புரியவைத்த பிறகு காதல் வளரும். முதல் இரவில் பால் பழத்தோடு தலையணை, கட்டில் எல்லாவற்றையும் கடித்துத் தின்னாமல், அவ்வளவு ஏன்... ஜாங்கிரி போல இருக்கும் ஹீரோயினைக்கூட தின்னாமல் எப்படி தன்னை கன்ட்ரோல் செய்கிறார் ஹீரோ என்பதுதான் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்!

வாம்பையர் டிஸிஸ்: (Vampire Disease: pain from the sun) சூரிய ஒளிக்கு அலர்ஜியாகும் தோலைக்கொண்ட நைட் வாட்ச்மேன் ஹீரோவுக்கு வாம்பையர் டிஸிஸ் என்ற அரிதினும் அரிதான தோல் பிரச்னை. இவருக்கும் கொளுத்து வேலை செய்யும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார் மேஸ்திரி. மேஸ்திரியோடு ஃபைட் செய்து, ஹீரோயினைக் கரம் பிடித்து மெரினாவின் மட்ட மதியான மொட்டை வெயிலில் எப்படி ரொமான்ஸ் செய்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

ஜம்பிங் ஃப்ரெஞ்ச் மேன் டிஸ் ஆர்டர். : (Jumping frenchman disorder: weird reflexes) அதிர்ச்சியான விஷயங்களுக்கு சம்பந்தமே இல்லாத ரியாக்ஷனைக் கொடுக்கும் இந்த ஜம்பிங் ஃபிரெஞ்ச் மேன் டிஸ் ஆர்டரால் பாதிக்கப்பட்டவர்தான் ஹீரோ. சிறுவயதில் ஃபர்ஸ்ட் ரேங் எடுத்ததற்கே அழுது ஒப்பாரி வைத்திருப்பார். சம்பந்தமே இல்லாமல் ரேங்க் கார்டு கொடுத்த வாத்தியின் காதைக் கடித்திருப்பார். அப்பா இறந்தபோது ஸ்வீட் எடுத்துக் கொண்டாடி அடி வாங்கியிருப்பார். இப்படி இருக்கும் ஹீரோ வளர்ந்தபிறகு சம்பந்தமே இல்லாமல் ஹீரோயினை நாய் துரத்தும்போது நாயைப் பார்த்து கைதட்டிச் சிரிக்கிறார். மோதலில் ஆரம்பித்து காதல் பூக்கிறது. தன் மகள் இப்படி ஒருத்தரைக் காதலிக்கிறாரே என நொந்து நூடுல்ஸ் ஆன அப்பா வில்லனாய் மாறுகிறார். 'உனக்கு என் மகளைக் கட்டிக்கொடுக்க மாட்டேன்டா’ என சொல்லும் வில்லன் அப்பாவைப் பார்த்து 'சூப்பர் மாமா’ எனச் சொல்லி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நடையைக் கட்டுவதோடு படம் முடிகிறது.

கட்டக்கடைசியாய் ஒரு டிஸ் ஆர்டர்... 'டைம்பாஸோலெப்ஸி’: இந்தப் பிரச்னை உள்ள ஹீரோவுக்குப் பார்க்கும் எல்லா விஷயமும் டைம்பாஸ் கேரக்டராய் தெரியும். லிட்டில் ஜானாய் பல பெண்கள் வாழ்க்கையில் விளையாடிய அவன் எப்படி ஒரே நாளில் அலசி ஆராயும் அப்பாடக்கராய் முதல்வர் நாற்காலியில் உட்காருகிறான் என்பதே கதை. இந்தக் கட்டுரையைப் படித்ததும் நார்கோலெப்சி வந்து தடால் என விழுந்து அடிபடாமல் இருக்க வேண்டுகிறேன்.

பின்குறிப்பு: 'நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஒரு காட்சியில் டைம்பாஸ் புத்தகத்தைத் தலைக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நண்டு ஜெகன் படுத்திருப்பார். சும்மா ஒரு விளம்பரம்!

- ஆர்.சரண்