ஒரு நிமிஷம் பாஸ்! நான் சொல்லப்போகிற வினோதமான ஆட்களை நீங்க சந்திச்சிருக்கலாம்... சந்திக்காமலும் போயிருக்கலாம். சந்திச்சிருந்தா சிரிச்சுக்கோங்க. சந்திக்கலையா... உஷாரா இருங்க!

பத்தாம் வகுப்பு பப்ளிக் எக்ஸாமுக்கு சீரியஸாப் படிச்சிட்டிருந்தப்போ, என்னுடன் குரூப் ஸ்டடீஸ் பண்றதுக்கு வந்திருந்தான் என் அத்தைப் பையன். விடிஞ்சா கணக்குப் பரீட்சை. நான் கணக்குப் போட்டு பிராக்டீஸ் செய்து கொண்டிருக்கும்போது அவனோ புத்தகத்தைத் தொடாமல் வினோதமான காரியத்தைப் பண்ணிக்கொண்டிருந்தான். டேப் ரெக்கார்டரில் கேசட்டில் அவன் பிளே பண்ணி கூலாக திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்த பாட்டு 'சூரியன்’ படத்தில் வரும் 'தூங்குமூஞ்சி மரங்களெல்லாம் வெட்கத்தினாலே...’ நான் ஆத்திரமாகி 'ஏன்யா, ஏன்?’ என்றேன். 'மிடில் ஆஃப் தி ஸாங்ல 'ஹொய்யா... ஹொய்யா... ஹொய்யா’னு வரும். எத்தனை ஹொய்யானு செக் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க படிங்க’ என்றான். மைண்ட்ப்ளோயிங். இதுபோல பல பாடல்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தான். 'இவ்ளோ கூலா இருக்கானே’ என ஆச்சரியப்பட்டேன். பரீட்சை எழுதிவிட்டு நான் வந்த பிறகுதான் அந்தத் தகவல் கேள்விப்பட்டேன். காலையில் எக்ஸாம் ஹாலுக்குப் போகாமல் நேரே பஸ் ஏறி சென்னைக்கு ஓடிப்போய்விட்டானாம். பேய் வருவதற்கான அறிகுறிபோல அடுத்த நாள் அவன் குடும்பமே வந்து என்னை விசாரிச்சப்போ 'ஹொய்யா’ மேட்டரைச் சொன்னேன்!

காலேஜ் படிக்கிறப்போ நடந்தது. அப்போதெல்லாம் போஸ்ட் ஆபீஸ் போய் கடிதம் எழுதிக்

கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பேன். அப்படி ஒருமுறை போனபோது ஒருவர் ஒரு கவருடன் வந்து, 'தம்பி. நான் சொல்ற அட்ரஸை இந்த கவர்ல எழுதிக் கொடுங்க ப்ளீஸ்’ என்றார். அட்ரஸ் மறந்தாலும் அவர் சொன்ன ரூட்டு இப்பவும் மறக்கலை. இதோ அவர் சொன்ன அட்ரஸை அப்படியே சொல்றேன்.

'நாகரத்தினம், நம்பர் 178/90, பக்தவச்சலம் தெரு, ஜமீன் பல்லாவரம், நுங்கம்பாக்கம், யானைக்கவுனி மேலவீதி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பேக் ஸைடு, பழங்காநத்தம், குரோம்பேட்டை, லயோலா காலேஜுக்கு அப்படியே பின்னாடி, செல்லம் சோப்பு கம்பெனி மாடி, சென்னை -168’ பாதி எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் ஆளைப் பார்த்தேன். ஆஜானுபாகுவாய் சினிமா ஸ்டன்ட்மேன் போல இருந்தார். பளிச் ஒயிட் அண்ட் ஒயிட் சஃபாரி டிரெஸ். ஆனால் பாக்கெட்டில் ஐந்து பேனாக்கள் வைத்திருந்தார். அதில் இரண்டு இங்க் பேனா. மூடி போடாமல் சட்டையில் புள்ளி வைத்திருந்தது. அட்ரஸ் எழுதுவதை நிறுத்திவிட்டு, 'இப்படில்லாம் ஒரு அட்ரஸ் கிடையாது சார்’ என நான் சொன்னபோது அவருக்கு வந்ததே கோபம். நல்லவேளை என்னை அடிக்காமல் ஸாரி கடிக்காமல் விட்டார். அதற்குப் பிறகு போஸ்ட் ஆபீஸ் பக்கம் போனால்தானே!

ஊரில் சின்ன அப்பத்தா ரொம்ப ஃபேமஸ். கோயில் திருவிழாவுக்குத் திரை கட்டிப் படம் போட்டால், முதல் ஆளாகப் பாய் தலைகாணியோடு போய் ஸ்க்ரீனுக்கு முன்னால் கால் நீட்டி உட்கார்ந்துவிடும். 'படத்தை ஓட்டுங்கடா’ என சவுண்டு வேறு. விடிய விடியப் படம் போட்டாலும் கொட்டக்கொட்ட கண் முழிச்சு உட்கார்ந்து பார்க்கும். நடுநடுவில் 'உச்’ கொட்டும். 'பாவிப்பய... தலையில கொள்ளி வைக்க’ என நம்பியாரையும் அசோகனையும் திட்டும். சிவாஜியின் 'கை வீசம்மா கை வீசு’ பாசமலர் கிளைமாக்ஸுக்குக் குடம் குடமா அழும். இதெல்லாம் ரைட்டு. ஆனால், அடுத்து ஒண்ணு பண்ணும் பாருங்க. சாமிப் படம் போட்டால் பரவசத்தில் உடலை முறுக்கி ஆடித்தீர்த்து விடும். நான்கைந்து சித்தப்பாக்கள் சேர்ந்து கோழி அமுக்குவதுபோல் அமுக்கினால்தான் ஆட்டம் அடங்கும். சிங்கம் போல ஸ்ட்ரெங்த் அப்பத்தாவுக்கு. 'துர்கா’ படத்தின் கிளைமாக்ஸுக்கு போட்ட ஆட்டத்தில் புழுதி பறக்க நண்டு சிண்டுகளெல்லாம் இனி கிழவியை மொளக்கொட்டுத் திண்ணைக்கு படம் பார்க்கவிடக் கூடாது எனத் திட்டித் தீர்த்தன. 'இனிமே சாமியாட மாட்டேன்’ என்று சின்னம்மாக்களிடம் அப்பத்தா கெஞ்சிக் கொடுத்த வாக்குறுதிக்காக அடுத்த ஒரு விசேஷத்துக்கு திரை கட்டிப் படம் போட்டபோது பார்க்க அனுமதி கிடைத்தது. இந்த முறை போடப்பட்டதோ 'ஊமைவிழிகள்’ அதிலும் அப்பத்தா டான்ஸ் ஆடுச்சுனா நம்பவா போறீங்க? 'ராத்திரி நேரத்து பூஜையில்...’ பாட்டை சாமிப் பாட்டுனு நினைச்சு ஸ்டாட் தி மீஜிக் என உடம்பை முறுக்கி ஆட டிரை பண்ணுச்சு. அலேக்காத் தூக்கி வீட்டுத் திண்ணையில் வெச்சுட்டு வந்துட்டாங்க. அதுதான் அது பார்த்த கடைசிப் படம்!

- ஆர்.சரண்