இயற்கை எழில் கொட்டிக்கிடக்கும் நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரத்தில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வெப்ப நீர் கடற்கரை பகுதி. இங்கேதான் இயற்கையின் அதிசயமாகக் கடல் அலைகள் 64 டிகிரி வெப்பநிலையில் அடிக்கின்றன. ஒரு நாளைக்கு நான்கு முறை குறிப்பிட்ட இடைவெளியில் இவ்வாறு அடிக்கும் வெப்ப அலைகளில் நீராட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.

கடலுக்கு அடியிலிருந்து வெளிவரும் எரிமலைக் குழம்பு அதன் மீது படும் கடல் நீரினைக் கொதிக்கவைத்துவிடுகிறது. சூழ்ந்திருக்கும் கடலினால் அந்தக் கொதிப்பு நிலை அடங்கிவிடும். ஆனால் குறிப்பிட்ட நேரங்களில் ஏற்படும் கடல் நீரோட்ட மாற்றத்தினால் அந்த வெப்ப நீர் கடலின் மேல் வந்து அலையாக அடிக்கிறது. மிதமான குளிர் நிலையிலேயே இருக்கும் நியூஸிலாந்தில் இப்படி ஒரு கடற்கரை இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு பெரிய வரப்பிரசாதம்.

தொடர்ந்து கண்காணித்து ஒவ்வொரு மாதமும் எப்போது வெப்பநீர் அலையடிக்கும் என்று பட்டியலிட்டிருக்கிறார்கள். அந்த நேரத்துக்கு முன்பாகவே அங்கே போய்விடும் மக்கள், மண்வெட்டியால் கடற்கரை மணலில் ஆளாளுக்கு ஒரு தொட்டிபோல் குழிவெட்டிக்கொள்கிறார்கள். அந்த நேரத்தில் அடிக்கும் வெப்ப அலைகள் அந்த மணல் தொட்டிகளை நிறைத்துவிடுகிறது. தொட்டிக்குள் வெதுவெதுப்பான நீரில் படுத்தபடி விடுமுறையை சூடாகக் கழிக்கின்றனர்.

நாங்கல்லாம் மத்தியான வெயிலில் மெரினாவில் கடலையைப் போடுறவய்ங்க!

- செந்தில்குமார்