Published:Updated:

இந்தியாவில் வெற்றி பெறுமா இந்த வால்வோ வேகன்?

இந்தியாவில் வெற்றி பெறுமா இந்த வால்வோ வேகன்?
இந்தியாவில் வெற்றி பெறுமா இந்த வால்வோ வேகன்?

இந்தியாவில் வெற்றி பெறுமா இந்த வால்வோ வேகன்?

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது வால்வோ V90 க்ராஸ் கன்ட்ரி. வேகன் கார்களுக்கு எப்போதுமே கார் ஆர்வலர்களிடம் வரவேற்பு இருக்கும். ஆனால், கார் சந்தைகளைப் பொறுத்தவரை, வேகன்கள் ஹிட் ஆர் மிஸ்தான். வால்வோ V90 க்ராஸ் கன்ட்ரியை கொட்டும் மழையிலும், மலைச் சாலைகளிலும் டெஸ்ட் செய்தோம்.

இந்தியாவில் வெற்றி பெறுமா இந்த வால்வோ வேகன்?

ஒரு லக்‌ஷூரி வேகனுக்கான அனைத்து சொகுசு வசதிகளையும் ஒரு எஸ்.யு.விக்கான கிரவுண்ட் கிளியரன்ஸையும் (210 மிமீ) கொண்டிருக்கிறது V90 க்ராஸ் கன்ட்ரி. 20 இன்ச் வீல்களும், 4.9 மிமீ நீளமும் காருக்கு அவ்வளவு ரோடு பிரசன்ஸைக் கொடுக்கின்றன. சாலையில் எல்லோர் கண்களும் இந்தக் கார் மீதுதான். காருக்குள் வசதிகளுக்கு குறையே இல்லை. மசாஜ் செய்து விடும் ஒரிஜினல் லெதர் சீட்ஸ், 19 ஸ்பீக்கர்கள் கொண்ட Bowers & Wilkins மியூஸிக் சிஸ்டம், மிகப்பெரிய பேனோரமிக் சன்ரூஃப் என அசத்துகிறது.

XC90 எஸ்யுவியில் இருக்கும் அதே 235 hp டீசல் இன்ஜின்தான் இந்தக் காரிலும். பவர்பல்ஸ் தொழில்நுட்பம் இருப்பதால் ஆக்ஸிலரேட்டரை மிதித்ததும், டர்போ லேக் இல்லாமல் சீறுகிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பேடில் ஷிஃப்டர்களுடன் ஓட்டும்போது உற்சாகமாக இருக்கிறது. உண்மையில் இந்திய சாலைகளுக்கு ஏற்ற கார் இதுதான். பின்பக்கம் ஏர் சஸ்பென்ஷன் காருக்குள் எந்த அதிர்வுகளையும் கடத்துவதில்லை. மோசமான சாலைகளில் அசராமல் ஆக்ஸிலரேட்டரை அழுத்தலாம். Pirelli P Zero டயர்களில் க்ரிப்புக்கு குறைவே இல்லை.

இந்தியாவில் வெற்றி பெறுமா இந்த வால்வோ வேகன்?

இந்தக் கார் ஜூன் மாதமே விற்பனைக்கு வந்திருக்கக்கூடியது. ஆனால், ஜி.எஸ்.டிக்காக காத்திருந்திருக்கிறது வால்வோ. இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடும். 60 லட்சம் ரூபாயில் இருந்து 70 லட்சம் ரூபாய் வரை விலை இருக்கலாம்.

இதுவெல்லாம்  இருக்கட்டும். வால்வோ V90 க்ராஸ் கன்ட்ரியில் IntelliSafe எனும் ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு தொழில்நுட்பம் இருக்கிறது. நம் டெஸ்ட் ட்ரைவில் இது எப்படி அசத்தியது தெரியுமா?

இதற்கான பதிலும், முழுமையான டெஸ்ட் ரிப்போர்ட்டும் மோட்டார் விகடன் ஆகஸ்ட் மாத இதழில்…!

அடுத்த கட்டுரைக்கு