Published:Updated:

ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் சர்தரா, இக்னேஸ் காயத்தால் சிக்கல்!

Vikatan Correspondent
ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் சர்தரா, இக்னேஸ் காயத்தால் சிக்கல்!
ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் சர்தரா, இக்னேஸ் காயத்தால் சிக்கல்!
ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி வீரர்கள் சர்தரா, இக்னேஸ் காயத்தால் சிக்கல்!

லண்டன்: ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான சர்தாரா சிங், இக்னேஸ் டிர்க்கி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

லண்டனில் 30வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 27ல் துவங்குகிறது. பீஜிங்கில் 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறாத இந்திய ஹாக்கி அணி, இம்முறை வாய்ப்பு பெற்றுள்ளது.

சமீபத்தில் இந்திய அணி, முத்தரப்பு தொடரில் பங்கேற்க ஸ்பெயின் சென்றது. இத்தொடரின் போது முன்னணி இந்திய வீரர்களான இக்னேஸ் டிர்க்கி (கணுக்கால்), சர்தாரா சிங் (முழங்கால்) ஆகியோர் காயமடைந்தனர். இதனால் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு வேளை இவர்கள் களமிறங்காமல் போனால், அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். காரணம் முதல் ஆட்டத்தில் பலம் மற்றும்  அசுர ஆட்டத்திற்கு சொந்தகாரர்களான நெதர்லாந்து அணியை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் மைக்கேல் நோப்ஸ் கூறுகையில்:- ‘’ஒலிம்பிக் போட்டி துவங்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் முக்கிய வீரர்கள் காயமடைந்திருப்பது வருத்தமான விஷயம். அனுபவம் வாய்ந்த இவர்கள் இருவரும் இந்தியாவுக்காக நிறைய போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இதில் இக்னாஸ் டிர்கே, 2004ல் ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக்கில் விளையாடிய அனுபவம் உள்ளவர். இருப்பினும் இவர்களது காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாததால், விரைவில் குணமடைந்து போட்டியில் விளையாடுவார்கள் என நம்புகிறேன்,'' என்றார்.

இதற்கிடையில், இந்திய ஆக்கி அணியின் கேப்டன் பரத் சேத்ரி அளித்த பேட்டியில்:

இந்திய ஹாக்கி அணி அதிக அளவில் இளம் வீரர்களை கொண்டதாகும். 2 வீரர்கள் (சந்தீப்சிங், இக்னேஸ் திர்கே) மட்டுமே ஏற்கனவே ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர்கள். மற்ற அனைவருக்கும் இது தான் முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் இவர்கள் காயம் புதிய சிக்கலாக உள்ளது.

நான் இந்திய அணிக்காக கடந்த 12 ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். ஏனினும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்து இருப்பதுடன் தலைமை தாங்கவும் வாய்ப்பு கிடைத்து இருப்பது எனக்கு மட்டுமின்றி, எனது குடும்பத்தினருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

1948-ம் ஆண்டில் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. நமது பழைய வீரர்கள் சாதித்தது போல் இந்த முறையும் நமது இந்திய அணி சரித்திரம் படைக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.