Election bannerElection banner
Published:Updated:

அது ஒரு டவுசர் காலம்!

அது ஒரு டவுசர் காலம்!

மிழ் சினிமா ஹீரோக்களின் டவுசர் காலத்தை அலசி ஆராய்ந்து கிளிப் மாட்டித் தொங்கவிட்டாயிற்று. ஒரு சேஞ்சுக்கு நம்ம கலைஞர் கருணாநிதியின் டவுசர் காலத்தைக் கொஞ்சம் பார்ப்போம்...

அது ஒரு டவுசர் காலம்!
அது ஒரு டவுசர் காலம்!

 பிஸியான பள்ளி நேரத்திலும் துள்ளி விளையாடி இருப்பார். கட்டுமரம் கட்டி அதை ஆற்றில் போட்டு நீந்தி விளையாடுவது என்றால், அம்புட்டுப் பிரியம்.  

அது ஒரு டவுசர் காலம்!

 அடிக்கடி, 'கண்கள் பனித்தது... இதயம் இனித்தது... அதனால் வீட்டுப்பாடம் செய்ய நேரம் கிடைக்கவில்லை’ எனச் சொல்லி ஆசிரியரிடம் ஜகா வாங்கியிருப்பார்.

அது ஒரு டவுசர் காலம்!

 எப்போதும் வார்த்தை விளையாட்டில் ஜித்தனாய் இருந்திருப்பார். 'ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்... முள் அடர்ந்த கொடும் பாதையில் ஓடினேன். நீங்கள் என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும். என் வாட்டத்தைப் போக்கி இருக்க வேண்டும்’ என ஓட்டப்பந்தயத்தில் தோற்றதுக்கு நீ...ண்...ட விளக்கம் கொடுத்திருப்பார்.  

அது ஒரு டவுசர் காலம்!

 'டம்ளரைக் கொடு’ என்பதைக்கூட  மரியாதையாக 'திருக்குவளையைக் கொடு’ என்று சொல்லியிருப்பார்.

அது ஒரு டவுசர் காலம்!

 லீடராக இருக்கும்போது தன்னை சக மாணவர்கள் பாராட்ட வேண்டும் என எதிர்பார்த்திருப்பார். இதனால் ஆசிரியர் இல்லாத 'கேப்’பில் அடிக்கடி தனக்குத்தானே வகுப்பறையில் பாராட்டு

அது ஒரு டவுசர் காலம்!

விழாக்கள் நடத்தியிருப்பார்.

அது ஒரு டவுசர் காலம்!

 'மழைவிட்டும் தூவானம் விடவில்லை. அதனால் இன்று எனக்கு விடுமுறை வேண்டும்’ என லீவு லெட்டர் எழுதியிருப்பார்.

அது ஒரு டவுசர் காலம்!

 'நான் லீடராய் இருந்தபோது வகுப்பறை அமைதிப் பூங்காவாய் இருந்தது. இப்போது அந்தப் பெண் லீடராய் இருக்கும்போது ஒரே சலசலப்பாக இருக்கிறது’ என தாளாளர் வரை புகார் வாசித்திருப்பார்.

அது ஒரு டவுசர் காலம்!

 பரீட்சை ஹாலில் பேப்பரையும் பேனாவையும் இவர் எடுத்தால்... ஒதுக்கப்பட்ட நேரம் தாண்டியும் கொலை வெறியோடு எழுதி இருப்பார். சூப்பர்வைசரோ, ஹெட்மாஸ்டரோ வந்து பிடுங்கினால்கூட எழுதுவதை நிறுத்த மாட்டார்.

அது ஒரு டவுசர் காலம்!

 யூனிஃபார்முக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி மஞ்சள் துண்டை கழுத்தில் போட்டபடி வந்திருப்பார்.

அது ஒரு டவுசர் காலம்!

 'உடன்பிறப்பே’ எனச் சொல்லி எல்லோரிடமும் புளிப்பு மிட்டாய் வாங்கியிருப்பார்!

- ஆர்.சரண்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு