'ஏன்டா... உன் மூஞ்சி எல்லாம் கண்ணாடியில பாத்ததே இல்லியா?’னு பல்பு வாங்கின மூஞ்சிங்க எல்லாம் இப்போ ஸ்மார்ட் போன் வாங்கிட்டு வந்து, மச்சி ஒரு செல்ஃபி எடுத்துப்போமானு ஒரே அலம்பல். நின்னா செல்ஃபி, நடந்தா செல்ஃபி, உட்கார்ந்தா செல்ஃபி... முடியலடா சாமி.

இது இப்பிடியே போச்சுனா...

காலையில எழுந்து பல்லு விளக்கறதை போட்டோ எடுத்து 'ஃபீலிங் கிளீன்’னு ஃபேஸ்புக்ல

ஸ்டேட்டஸா போடுவானுங்க. திடீர்னு தலை அரிச்சதுனா தலையை சொறிஞ்சுகிட்டே அதையும் செல்ஃபி எடுத்து 'மை ஹேர் ஈஸ் அரிச்சிஃபையிங். ஐ யம் சொறிஞ்சுஃபையிங்’னு போடுவானுங்க.

பொண்ணுங்க மட்டும் சும்மாவா... தெரு நாயைக் கையில தூக்கிக் கொஞ்சுற மாதிரி செல்ஃபி எடுத்து 'திஸ் இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்டு’னு ஸ்டேட்டஸ் போடுவாங்க. 'நாயே நாயே அந்த நாய்க்குத்தான் அறிவில்லைனா உனக்கு எங்கே போச்சு?’னு கலாய் கமென்ட்டும், 'அந்த நாயா நான் இருக்கக் கூடாதா?’னு நாயை விட அதிக ஜொள்ளு ஊத்துற கமென்ட்டும் அதில் தப்பாமல் பதிவாகும்.

நைட் டிஃபன் இட்லியும் தேங்கா சட்னியுமா இருந்தாக்கூட போட்டோ எடுத்துப்பாங்க... அம்மா சமைச்சதைத் திங்கிறப்பவே இந்த அலட்டல்னா, இவிய்ங்களே சமைச்சுத் தின்னா, பேனர் வெச்சிடுவாய்ங்களோ.

பஸ் ஏறி பக்கத்து ஊர் போனாக்கூட அதையும் செல்ஃபி எடுத்து 'கோயிங் டு கொட்டாம்பட்டி’னு ஃபேஸ்புக்ல போடுவாங்க, இவிய்ங்கள்லாம் ஃபாரின் போனா?

ஏதாவது துணிக் கடைக்குப் போயிட்டு புடிச்ச டிரெஸ் எல்லாத்தையும் டிரையல் ரூம்ல போட்டு போட்டோ எடுத்திட்டு அதை மறுபடியும் மாட்டிவெச்சிட்டு வர்ற குற்றங்களும் செல்ஃபி வந்ததுக்கு அப்புறம் அதிகரிச்சிருக்கிறதா ஸ்டாட்டிஸ்டிக்ஸ் சொல்லுது.

வீட்லேயும் லவ்வர்கிட்டேயும் விதவிதமா பொய் சொல்லிட்டு வெளியே வர்றவனுங்களை செல்ஃபி போட்டோ எடுத்து மாட்டிவிடுறீங்களே பாஸ், இதெல்லாம் எந்த ஊர் நியாயம்?

சிலபேர் குழந்தைங்ககூட நின்னு செல்ஃபி எடுத்துப்பாங்க. அவனுங்களைப் பார்க்கவே குழந்தை கடத்துறவனுங்க மாதிரி இருப்பாய்ங்க. தம்பி முகத்தைக் கொஞ்சம் தள்ளிவெச்சு போட்டோ எடுங்க... குழந்தை பயந்திடப் போகுது.

ரெண்டு பொண்ணுங்க சேர்ந்து போட்டோ எடுத்துகிட்டா அது ஏன் கன்னம் ரெண்டும் உரசிக்கிட்டே இருக்கு? தள்ளி வைங்கம்மா... ரேஷஸ், பிம்பிள்ஸ் போன்ற பத்து வகையான ஸ்கின் பிராப்ளம்ஸ் வந்திடப்போகுது.

சில பேர் செல்ஃபி எடுக்கும்போது கை விரல் ஏன் பிரேம்ஜி அமரன் மாதிரி விநோதமா போகுது? கையை இறக்குங்க பாஸ்.

இதையெல்லாம்கூட பொறுத்துக்கலாம், ஓட்டு போட்டுட்டேன்னு சொல்லி சுட்டு விரலை போட்டாவா எடுத்து அநியாயம் பண்ணானுங்க பாருங்க, இதெல்லாம் என்ன பெருமையா... கடமை... கடமை.

சரி ஓகே முடிச்சுக்கிறேன். கட்டுரை எழுதி முடிச்சிட்டேன்னு செல்ஃபி எடுத்துக்கணும். டைம் ஆச்சு!

- பா.ஜான்சன்